பாக்டீரியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
Bacteria
புதைப்படிவ காலம்: Archean or earlier - Recent
Scanning electron micrograph of Escherichia coli bacilli
Scanning electron micrograph of Escherichia coli bacilli
உயிரியல் வகைப்பாடு
உலகம்: Bacteria
Phyla[1]

Actinobacteria (high-G+C)
Firmicutes (low-G+C)
Tenericutes (no wall)

Aquificae
Bacteroidetes/Chlorobi
Chlamydiae/Verrucomicrobia
Deinococcus-Thermus
Fusobacteria
Gemmatimonadetes
Nitrospirae
Proteobacteria
Spirochaetes
Synergistetes

  • unknown/ungrouped

Acidobacteria
Chloroflexi
Chrysiogenetes
Cyanobacteria
Deferribacteres
Dictyoglomi
Fibrobacteres
Planctomycetes
Thermodesulfobacteria
Thermotogae

Bacteria display many cell morphologies and arrangements

பாக்டீரியா (Bacteria) மிகப்பெரிய உயிரினக் குழுவாகும். பாக்டீரியா என்னும் சொல் கிரேக்கச் சொல்லாகிய βακτήριον, (baktērion, பா'க்டீரியொன்) என்பதில் இருந்து வந்தது (இது βακτρον என்பதன் சுருக்கம் என்கிறது ஆக்ஃசுபோர்டு ஆங்கில அகரமுதலி). பாக்டீரியாக்களே உலகில் மிகவும் அதிகமாக உள்ள உயிரினம் ஆகும். மண், நீர் என்று அனைத்து இடங்களிலும் வாழும் இவை பிற உயிரினங்களுடன் கூட்டுயிரிகளாகவும் வாழ்கின்றன. நோய் விளைக்கும் நுண்ணுயிர்களில் பல பாக்டீரியாக்களாகும்.

பெரும்பாலான பாக்டீரியாக்கள் ஒரு கலம் மட்டும் கொண்டதாகவும் நுண்ணோக்கியில் மட்டும் பார்க்க வல்லதாகவும் உள்ளன. இவை உயிரணுக் கரு அற்று, பச்சையவுருமணிகள், இழைமணிகள் போன்ற கல நுண் உறுப்புக்கள் ஏதுமின்றி மிக எளிய கல அமைப்பை கொண்டுள்ளன. இவற்றுள் பல மிகச்சிறிய அளவுடையதாகும்; வழக்கமாக 0.5-5.0 µm நீளம் இருக்கும். எனினும் Thiomargarita namibiensis, Epulopiscium fishelsoni போன்றவை 0.5 மி.மீ அளவு வளரக்கூடியதாகவும், வெறும் கண்களால் பார்க்கக் கூடியதாகவும் இருக்கும்[2]. பாக்டீரியாக்களின் உருவம் கோளவடிவிலோ, கோல் வடிவிலோ இருக்கும். கோள வடிவானவை கோளவுரு நுண்ணுயிர் (கொக்கசு - Coccus) எனவும், கோல் வடிவானவை கோலுரு நுண்ணுயிர் (பசிலசு - Bacillus) எனவும் அழைக்கப்படும். வேறும் சில மிக நுண்ணியவையாகவும், கலச்சுவர் அற்றதாகவும் இருக்கும். அவை மிகுநுண்ணுயிர் (மைக்கோபிளாசுமா - Mycoplasma) என அழைக்கப்படும். இந்த மிகுநுண்ணுயிரானது அதி பெரிய வைரசின் அளவில், கிட்டத்தட்ட 0.3µm பருமனையுடைய, மிகவும் சிறிய பாக்டீரியாவாகும்[3].

தாவரங்கள், பூஞ்சைகள் போல் பாக்டீரியாக்களும் வழக்கமாக கலச் சுவரைக் கொண்டிருந்தாலும் அவற்றின் அடக்கக்கூறுகள் மாறுபட்டவையாகும். பெரும்பாலானவை நகரிழைகள் துணை கொண்டு ஓரிடத்தில் இருந்து இன்னொரு இடத்துக்கு நகர்கின்றன. எனினும், இவை பிறகுழுக்கள் பயன்படுத்தும் நகரிழைகளில் இருந்து வேறுபட்டவை.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

1676 இல், முதன் முதலாக தானாகவே தயாரித்த ஒற்றை வில்லை நுணுக்குக்காட்டியினூடாக (single-lens microscope), பாக்டீரியாவை அவதானித்தவர் அன்டன் வான் லீவன்ஃகூக் என்பவராவார்[4]. அவர் தான் அவதானித்ததை "animalcules" எனப் பெயரிட்டு, Royal Society க்கு பல கடிதங்கள் மூலம் தெரியப்படுத்தினார்[5][6][7]. பின்னர், 1838 இல் கிறிஸ்டியன் கொட்பிரைட் எகிரன்பெர்க் (Christian Gottfried Ehrenberg) என்பவரே பாக்டீரியா என்ற சொல்லைப் பாவித்தார்[8] .

[தொகு] அருஞ்சொற்பொருள்

  • இழைமணி - Mitochondrion
  • கூட்டுயிரி - Symbiont
  • நோய் விளைக்கும் நுண்ணுயிர் - Pathogen
  • அடக்கக்கூறு - Composition
  • நகரிழை - Flagellum
  • பச்சையம் - Chlorophyll
  • பூஞ்சை - Fungus

[தொகு] மேற்கோள்கள்

  1. "Bacteria (eubacteria)". Taxonomy Browser. NCBI. பார்த்த நாள் 2008-09-10.
  2. Schulz H, Jorgensen B (2001). "Big bacteria". Annu Rev Microbiol 55: 105–37. doi:10.1146/annurev.micro.55.1.105. PMID 11544351. 
  3. Robertson J, Gomersall M, Gill P. (1975). "Mycoplasma hominis: growth, reproduction, and isolation of small viable cells". J Bacteriol. 124 (2): 1007–18. PMID 1102522. 
  4. Porter JR (June 1976). "Antony van Leeuwenhoek: tercentenary of his discovery of bacteria". Bacteriological Reviews 40 (2): 260–9. PMID 786250. PMC 413956. http://mmbr.asm.org/cgi/pmidlookup?view=long&pmid=786250. 
  5. van Leeuwenhoek A (1684). "An abstract of a letter from Mr. Anthony Leevvenhoek at Delft, dated Sep. 17, 1683, Containing Some Microscopical Observations, about Animals in the Scurf of the Teeth, the Substance Call'd Worms in the Nose, the Cuticula Consisting of Scales". Philosophical Transactions (1683–1775) 14: 568–574. http://www.journals.royalsoc.ac.uk/content/120136/?k=Sep.+17%2c+1683. Retrieved 2007-08-19. 
  6. van Leeuwenhoek A (1700). "Part of a Letter from Mr Antony van Leeuwenhoek, concerning the Worms in Sheeps Livers, Gnats, and Animalcula in the Excrements of Frogs". Philosophical Transactions (1683–1775) 22: 509–518. http://www.journals.royalsoc.ac.uk/link.asp?id=4j53731651310230. Retrieved 2007-08-19. 
  7. van Leeuwenhoek A (1702). "Part of a Letter from Mr Antony van Leeuwenhoek, F. R. S. concerning Green Weeds Growing in Water, and Some Animalcula Found about Them". Philosophical Transactions (1683-1775) 23: 1304–11. doi:10.1098/rstl.1702.0042. http://www.journals.royalsoc.ac.uk/link.asp?id=fl73121jk4150280. Retrieved 2007-08-19. 
  8. "Etymology of the word "bacteria"". Online Etymology dictionary. பார்த்த நாள் 2006-11-23.

[தொகு] வெளி இணைப்புகள்

Commons logo
தமிழ் விக்சனரி யிலுள்ள விளக்கத்தையும் காண்க!


உயிரியல் தொடர்பான இக்கட்டுரை, வளர்ச்சியடையாத குறுங்கட்டுரை ஆகும். இதைத் தொகுப்பதன் மூலம் நீங்கள் இதன் வளர்ச்சியில் பங்களிக்கலாம்.

"http://ta.wikipedia.org/w/index.php?title=பாக்டீரியா&oldid=1110901" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்