உயிரியல் வகைப்பாடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அறிவியல் வகைப்பாடு

அழிந்துபோன மற்றும் வாழ்ந்து கொண்டிருக்கின்ற உயிரினங்களை வகைப்படுத்துதலை, உயிரியலாளர்கள், அறிவியல் வகைப்பாடு (Scientific classification) அல்லது உயிரியல் வகைப்பாடு (biological classification) எனக் குறிப்பிடுகிறார்கள். கரோலஸ் லின்னேயஸ் (Carolus Linnaeus) என்பார் உயிரினங்களை அவற்றின் பொதுவான இயற்பியல் தோற்றத்தின் (physical characteristics) அடிப்படையில் குழுக்களாக வகுத்தார். இதுவே தற்கால அறிவியல் வகைப்பாட்டின் தொடக்கம் எனலாம். டார்வினுடைய பொது மரபுவழிக் கொள்கை (principle of common descent) ஏற்றுக்கொள்ளப்பட்டபோது, இதற்கு அமைய கரோலஸ் லின்னேயசின் வகைப்பாட்டில் திருத்தங்கள் செய்யவேண்டி ஏற்பட்டது. மூலக்கூற்றுத் தொகுப்பியலின் (Molecular systematics) பயன்பாட்டினால் அண்மைக்காலத்திலும் பல திருத்தங்கள் செய்யப்பட்டுள்ளன. அறிவியல் வகைப்பாடு, வகைப்பாட்டியல் (taxonomy) அல்லது உயிரியல்சார் தொகுப்பியலுள் (biological systematics) அடங்குகின்றது.

பொருளடக்கம்

தற்கால வளர்ச்சிகள் [தொகு]

1960 களிலிருந்து, வகைப்பாட்டு அலகுகளை (taxon) படிவளர்ச்சி மர அமைப்பில் ஒழுங்கு படுத்தும் புதிய முறை உருவாக்கப்பட்டுள்ளது. ஒரு வகைப்பாட்டு அலகு, ஏதாவது உயிரின மூதாதையின் எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிருப்பின், அது ஒருவழித்தோற்றம் (monophyletic) எனப்படும். மாறாக மிகக்கிட்டிய பொது மூதாதை ஒன்றைக் கொண்டிருந்து, எல்லா வழித்தோன்றல்களையும் கொண்டிராவிட்டால் அது paraphyletic எனப்படும். வகைப்பாட்டு அலகொன்றில் அடங்கும் உயிரினங்களின் பொது இயல்புகள் தனித்தனியாக, ஒன்றுக்கொன்று தொடர்பின்றிக் கூர்ப்பு அடைந்திருப்பின் அவ்வலகு, பல்தொகுதிமுறைத் தோற்றம் (polyphyletic) எனப்படும்.

வகைப்பாட்டியலில் ஆட்சிகள் ஒப்பீட்டளவில் அண்மைக்காலப் பகுப்புகள் ஆகும். மூன்று-ஆட்சி முறைமை (three-domain system) 1990 இல் உருவாக்கப்பட்டுப் பின்னரே ஏற்பு பெற்றது. இன்று பெரும்பான்மையான உயிரியலாளர்கள் மூன்று-ஆட்சி முறைமையை ஏற்றுக் கொண்டுள்ளார்கள். எனினும் குறிப்பிடத்தக்க சிறுபான்மையினர் ஐந்து திணைப் பகுப்பு முறைமையைப் பயன்படுத்துகிறார்கள்.

லின்னேயசின் இருபடிநிலை வகைப்பாடு [தொகு]

லின்னேயசு உயிரினங்களை ஒரு படிமுறை அமைப்பில் வகுத்தார். இவரது வகைப்பாட்டில் ஐந்து படிநிலைகள் (levels) அமைந்திருந்தன:

  1. திணை(இராச்சியம்) (kingdom)
  2. வகுப்பு (class)
  3. வரிசை (order)
  4. பேரினம் (genus)
  5. இனம் (species)

திணைகள் (இராச்சியங்கள்), பிளாண்டே (plantae - தாவரங்கள்), அனிமேலியா (animalia - விலங்குகள்) என இரண்டாகப் பகுக்கப்பட்டிருந்தன. இத்திணைகள் ஒவ்வொன்றும் வகுப்புகளாகவும், வகுப்புகள் வரிசைகளாகவும், வரிசைகள் பேரினங்களாகவும், பேரினங்கள் இனங்களாகவும் வகுக்கப்பட்டன.

ஏழு படிநிலை வகைப்பாடு [தொகு]

லின்னேயசின் ஐந்து படிகளுடன் மேலும் இரண்டு படிகளைச் சேர்த்துத் தற்கால வகைப்பாடு ஏழு படிநிலைகளைக் கொண்டதாக உள்ளது.

  1. திணை(இராச்சியம்) (kingdom)
  2. தொகுதி (phylum) - பிரிவு (division) (தாவரங்களுக்கு)
  3. வகுப்பு (class)
  4. வரிசை (order)
  5. குடும்பம் (family)
  6. பேரினம் (genus)
  7. இனம் (species)

பெயர் முடிப்பு [தொகு]

பேரினங்களுக்கு மேலுள்ள படிநிலைகளில் வகைப்பாட்டு அலகுகளின் பெயர்கள் ஒரு குறிப்பிட்ட வகையில் முடிவடையுமாறு ஆங்கிலத்தில் அமைக்கப்பட்டுள்ளன. கீழுள்ள அட்டவணை இதனைத் தெளிவுபடுத்துகிறது.

படிநிலை தாவரங்கள் பாசிகள் பூஞ்சணங்கள் விலங்குகள்
பிரிவு/தொகுதி -பைட்டா (-phyta) -மைகொட்டா
(-mycota)
துணைப்பிரிவு/துணைத்தொகுதி -பைட்டினா (-phytina) -மைகொட்டினா
(-mycotina)
வகுப்பு -ஒப்சிடா
(-opsida)
-பைசியே
(-phyceae)
-மைசெடேஸ்
(-mycetes)
துணைவகுப்பு -இடே
(-idae)
-பைசிடே
(-phycidae)
-மைசெட்டிடே
(-mycetidae)
பெருவரிசை -ஏனே (-anae)
வரிசை -ales
துணைவரிசை -ineae
உள்வரிசை -ஏரியா (-aria)
பெருங்குடும்பம் -ஏசே (-acea) -oidea
குடும்பம் -ஏசியே (-aceae) -idae
துணைக்குடும்பம் -oideae -inae


லின்னேயஸ்
1735[1]
ஹேக்கல்
1866[2]
Chatton
1925[3][4]
Copeland
1938[5][6]
Whittaker
1969[7]
Woese et al.
1977[8][9]
Woese et al.
1990[10]
Cavalier-Smith
2004[11]
2 இராச்சியங்கள் 3 இராச்சியங்கள் 2 Empires 4 இராச்சியங்கள் 5 இராச்சியங்கள் 6 இராச்சியங்கள் 3 ஆட்சிப்பிரிவுகள் 6 இராச்சியங்கள்
(-) அதிநுண்ணுயிரி

(Protista)

நிலைக்கருவிலி

(Prokaryota)

மொனேரா

(Monera)

மொனேரா

(Monera)

இயூபாக்டீரியா

(Eubacteria)

பாக்டீரியா

(Bacteria)

பாக்டீரியா

(Bacteria)

ஆர்க்கீயா

(Archaebacteria)

ஆர்க்கீயா

(Archaea)

மெய்க்கருவுயிரி

(Eukaryota)

அதிநுண்ணுயிரி

(Protista)

அதிநுண்ணுயிரி

(Protista)

அதிநுண்ணுயிரி

(Protista)

மெய்க்கருவுயிரி

(Eukarya)

மூத்தவிலங்கு

(Protozoa)

குரோமிஸ்டா

(Chromista)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

தாவரம்

(Plantae)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

பூஞ்சை

(Fungi)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)

விலங்கு

(Animalia)


வெளியிணைப்புகள் [தொகு]

எடுகோள்கள் [தொகு]

  1. Linnaeus, C. (1735). Systemae Naturae, sive regna tria naturae, systematics proposita per classes, ordines, genera & species. 
  2. Haeckel, E. (1866). Generelle Morphologie der Organismen. Reimer, Berlin. 
  3. Chatton, É. (1925). "Pansporella perplexa. Réflexions sur la biologie et la phylogénie des protozoaires". Annales des Sciences Naturelles - Zoologie et Biologie Animale 10-VII: 1–84. 
  4. Chatton, É. (1937). Titres et Travaux Scientifiques (1906–1937). Sette, Sottano, Italy. 
  5. Copeland, H. (1938). "The kingdoms of organisms". Quarterly Review of Biology 13: 383–420. doi:10.1086/394568. 
  6. Copeland, H. F. (1956). The Classification of Lower Organisms. Palo Alto: Pacific Books. doi:10.5962/bhl.title.4474. 
  7. Whittaker, R. H. (January 1969). "New concepts of kingdoms of organisms". Science 163 (3863): 150–60. doi:10.1126/science.163.3863.150. பப்மெட் 5762760. 
  8. Woese, C. R.; Balch, W. E.; Magrum, L. J.; Fox, G. E.; Wolfe, R. S. (August 1977). "An ancient divergence among the bacteria". Journal of Molecular Evolution 9 (4): 305–311. doi:10.1007/BF01796092. பப்மெட் 408502. 
  9. Woese, C. R.; Fox, G. E. (November 1977). "Phylogenetic structure of the prokaryotic domain: the primary kingdoms". Proceedings of the National Academy of Sciences of the United States of America 74 (11): 5088–90. doi:10.1073/pnas.74.11.5088. பப்மெட் 270744. 
  10. Woese, C.; Kandler, O.; Wheelis, M. (1990). "Towards a natural system of organisms: proposal for the domains Archaea, Bacteria, and Eucarya.". Proceedings of the National Academy of Sciences of the United States of America 87 (12): 4576–9. doi:10.1073/pnas.87.12.4576. பப்மெட் 2112744. PMC 54159. Bibcode1990PNAS...87.4576W. http://www.pnas.org/cgi/reprint/87/12/4576. 
  11. Cavalier-Smith, T. (2004), "Only six kingdoms of life", Proceedings of the Royal Society of London B Biological Sciences 271: 1251–62, doi:10.1098/rspb.2004.2705, பப்மெட் 15306349, PMC 1691724, http://www.cladocera.de/protozoa/cavalier-smith_2004_prs.pdf, retrieved 2010-04-29 
"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிரியல்_வகைப்பாடு&oldid=1342754" இருந்து மீள்விக்கப்பட்டது