உயிர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


உயிர் என்பது உயிரினங்களை, உயிரற்ற பொருட்களிலிருந்தும் இறந்த உயிரினங்களிலிருந்தும் வேறுபடுத்தும் ஒன்றாகும். உயிரினங்கள், வளரவும் இனம்பெருக்கவும் கூடியன. சில தம்மையொத்த உயிரினங்களுடன் தொடர்பு கொள்ளக் கூடியனவாக இருப்பதுடன், பல உயிரினங்கள் உள்ளுக்குள் ஏற்படும் மாற்றங்கள் மூலம் சூழலுக்கு அமைவாகத் தம்மை மாற்றிக்கொள்ளும் ஆற்றலையும் கொண்டவை. இயற்பியலாளர்களான, ஜான் பர்னல், எர்வின் சுரோடிங்கர், இயூஜீன் விக்னர், ஜான் அவெரி ஆகியோரின் கருத்துப்படி, உயிர்வாழ்க்கை என்பது, சூழலிலிருந்து பொருட்களையோ அல்லது ஆற்றலையோ எடுத்து தமது உள்ளார்ந்த ஆற்றல் குறைவை குறைக்கக்கூடிய திறன் வாய்ந்த, திறந்த அல்லது தொடர்ச்சியான முறைமையாகும். இது பின்னர் உள் எடுத்தவைகளைத் தரம் குறைந்த வடிவில் வெளிவிடுகின்றது.

உலகிலுள்ள பொருள்களைக் கிடைபொருள், கிளர்பொருள் என அறிவியல் உலகம் பகுத்துக் காண்கிறது.

உயிர் உள்ள பொருளை அறிவியல் கிளர்பொருள் Organism என்கிறது.
இது தூண்டினால் துலங்கும் response to stimuli.
இனப்பெருக்கம் செய்யும் reproduce.
வளர்ந்து மறையும் grow and develope.
தனித்துவம் கொள்ளும் Homeostasis.

இதனைத் தமிழர் மால் என்றனர். மால் என்றால் ஆசை. எல்லா உயிருக்கும் ஆசை உண்டு. பிற்காலத்தில் இதனைச் சத்தி என்றனர். சத்துள்ள பொருள் சத்தி. உடலில் சத்து இருந்தால் இயங்கும். இயங்குவது சக்தி.

உயிர் இல்லாமல் சும்மா கிடக்கும் பொருளைக் கிடைபொருள் Inorganism என்கிறோம். இதுதான் மெய். இதனைத் தமிழர் சிவம் என்றனர்.

விலங்கு, செடி, காளான், வைகல் என்பன உயிரின வகைகள். (such as animal, plant, fungus, or micro-organism), virus)

உயிர் ஒரு முந்நிலைப்பொருளின் ஓட்டம். ஓரிய-உயிரலை RNA, ஈரிய-உயிரலை DNA, புரத-உயிரலை proteins என்பவை உடலில் ஓடுவதுதான் உயிர்.

உயிரோட்டத்தில் ஐங்கருநிலை உள்ளது. நீரியம் hydrogen, உயிரியம் oxygen, தீயியம் nitrogen, கரியியம் carbon, வைரியம் phosphorus என்பவை அவை.

"http://ta.wikipedia.org/w/index.php?title=உயிர்&oldid=1110906" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்