உப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சோடியம் குளோரைடு இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பொலிவியாவில் உப்பு மலைகள்


உப்பு, என்பது உணவில் பயன்படும் ஒரு கனிமம். விலங்குகளின் உடல் நலத்துக்குத் தேவையான ஒரு முக்கியமான பொருள், மனித உணவின் இன்றியமையாதப் பகுதியாக அமைந்திருப்பது உப்பு ஆகும். உப்பு சுவை மனிதனின் அடிப்படையான சுவைகளில் ஒன்று. சாதாரண உப்பு என்பது நம் உணவில் பயன்படுத்தும் உப்பையே குறிக்கும்.இது சோடியம் குளோரைடு என அழைக்கப்படுகிறது. இதன் வாய்பாடு 'NaCl' என வேதியலில் குறிக்கப்படுகிறது. வேறு சில வேதியியல் பொருட்களும் உப்பு என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. சான்றாக சோடா உப்பு, பேதி உப்பு போன்றவைகளாகும். வேதியல் உப்புகள் சில பயிர்களுக்கு உரமாகப் பயன்படுத்துகிறார்கள்.ஆனால்,சமையல் உப்பு தாவரங்களுக்கு நஞ்சு சார்ந்தது.

பொருளடக்கம்

தயாரிப்பு முறைகள் [தொகு]

கடல் நீர் உப்புகள் [தொகு]

உப்பு பொதுவாக கடல் நீரிலிருந்து உப்பு பெறப்படுகிறது. கடல் நீரைப் பாத்திகளில் பாயச் செய்து காயவிடுவார்கள். கடல்நீர் வெய்யிலின் வெப்பம் காரணமாக நீராவியாகப் போய்விடும். அடியில் உப்பு படிவுகளாகப் படிந்துவிடும். இந்த உப்புப் படிவுகளைக் கொண்ட பாத்திகள் உப்பளங்கள் என்ற பெயரில் அழைக்கப்படுகின்றன.இத்தகைய உப்பளங்கள் கடற்கரையை ஒட்டிய கடற்கழிகளை அடுத்து அமைந்திருக்கும். தமிழ் நாட்டில் தூத்துக் குடிப் பகுதியிலும் சென்னையை அடுத்த கோவளம் கடற்கரைப் பகுதியிலும் உள்ள உப்பளங்களுல் தரமான உப்பு மிகுதியாகப் பல இடங்களிலும் தயாரிக்கப்படுகிறது.

தரை உப்புகள் [தொகு]

வட இந்தியாவில் பல பகுதிகளிலும் உலகின் வேறுபல இடங்களிலும் தரைப் பகுதிகளில் சுரங்கம் அமைத்து உப்பை வெட்டியெடுத்துச் சேகரிக்கிறார்கள்.

கிணற்று உப்புகள் [தொகு]

சில இடங்களில் உப்புநீர்க் கிணறுகள் தோண்டி உப்பு தயாரிக்கின்றனர். அமெரிக்கா, ஆஸ்திரேலியா, ஜெர்மனி போன்ற இடங்களில் இத்தகைய உப்பு நீர்க் கிணறு முறையில் உப்பு தயாரிக்கப் படுகிறது.

ஏரி உப்புகள் [தொகு]

சில உப்பு நீர் ஏரிகளில் இருந்தும் உப்பு தயாரிக்கப்படுகிறது. இந்தியாவில் ராஜஸ்தானில் உள்ள சம்பர் ஏரியும் பாலஸ்தீனத்தில் உள்ள சாக்கடல் ஏரியும் உப்பு நீர் ஏரிகளாகும். சாக்கடல் ஏரியிலிருந்து மட்டும் கிட்டத்தட்ட 116 கோடி டன் உப்பு எடுக்கலாம் என கணக்கிட்டுள்ளனர்.
சூரிய வெப்பம் அதிகம் இல்லாத நாடுகளில் உப்புநீரைக் காய்ய்ச்சி உப்பு தயாரிக்கிறார்கள். கடல் நீரைக்கொண்டு தயாரிக்கும் உப்பை மேலும் சுத்தப்படுத்தி "மேசை உப்பு" (Table Salt) ஆகப் பொடித்துப் பயன்படுத்துகிறார்கள்.

உப்பு வகைகள் [தொகு]

உப்புகள் பொதுவாக அமிலமும் காரமும் ஒன்றுக்கொன்று நடுநிலையாக்கல் வினைக்கு உட்பட்டு பெறப்படுகிறது. இந்த வினையின் நிகழ்வுத்தன்மையைப் பொறுத்து அமில உப்பு, கார உப்பு, இரட்டை உப்பு மற்றும் அணைவு உப்பு ஆகியவைகள் கிடைக்கப் பெறுகின்றன.

உப்பின் பயன்கள் [தொகு]

  • உணவிற்கு சுவை கூட்ட உப்பு பயன்படுகிறது.
  • இறந்த மீன்களை கருவாடாகப் பதப்படுத்த, விலங்குகளின் தோல்கள் கெடாமல் பதனிட உப்பு பயன்படுத்தப்படுகிறது.
  • பனிக்கட்டியுடன் உப்பைக் கலந்தால் மேலும் பனிக்கட்டி குளிர்ச்சி அடையும் எனவே குளிர் இயந்திரங்களில் உப்பு பயன்படுத்தப்படுகிறது.
  • ஊறுகாய் போன்ற உணவுப் பொருட்கள் கெடாமல் இருக்க உப்பு உதவுகிறாது.
  • வேதியியல் பொருட்கள் தயாரிக்கவும் மருந்துகள் செய்யவும் உப்பு தேவைப்படுகிறது.
  • நமக்குச் சாதாரணமாக உண்டாகும் பல்வலி, தொண்டைவலி நீங்க உப்பு நீரால் வாய்க் கொப்பளித்தல் போதும் வலி நீங்கிவிடும்.
  • வயல்களில் வளரும் பயிர்களுக்குத் தேவையான இரசாயன உரத் தயாரிப்பிற்கும் உப்பு தேவைப்படுகிறது.

உசாத்துணை [தொகு]

இளையர் அறிவியல் களஞ்சியம். மணவை முஸ்தபா. -மணவை பப்ளிகேஷன் வெளியீடு-1995

"http://ta.wikipedia.org/w/index.php?title=உப்பு&oldid=1384577" இருந்து மீள்விக்கப்பட்டது