கன நீர்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
கன நீர் (heavy water) என்பது ஹைட்ரஜனின் ஓரிடத்தானான டியூட்ரியம் இரு மூலக்கூறு ஆக்சிசனுடன் இணைந்து உருவாக்கும் சேர்மம் ஆகும். இது பார்ப்பதற்கு நீரைப் போல இருந்தாலும் நீரை விட 11% கனமுடையது. நீர், உயிர் வாழ்க்கையின் அடிப்படை. ஆனால் கனநீரோ, பெரும்பாலான உயிரினங்களுக்கு நச்சாகும். கனநீரில் விதைகள் முளைவிடாது; மீன்கள் வாழ இயலாது. கனநீர் கதிர்வீச்சுத் தன்மை உடையது அன்று.