எத்திலீன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
எத்திலீன்
{{{Caption}}}
{{{Caption}}}
{{{Caption}}}
(IUPAC)
ஐயுபிஏசி பெயர்
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 74-85-1
Jmol-3D images Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு C2H4
மோலார் நிறை 28.05 g/mol
தோற்றம் நிறமற்ற வளிமம்
அடர்த்தி 1.178 kg/m3 at 15 °C, வளிமம் [1]
உருகுநிலை

−169.2 °C (104.0 K, -272.6 °F)

கொதிநிலை

−103.7 °C (169.5 K, -154.7 °F)

நீரில் கரைமை 3.5 mg/100 ml (17 °C)
காடித்தன்மை எண் (pKa) 44
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமின்முனைத் திருப்புமை
Dipole moment
சுழி
Thermochemistry
Std enthalpy of
formation
ΔfHo298
+52.47 kJ/mol
Standard molar
entropy
So298
219.32 J·K−1·mol−1
தீநிகழ்தகவு
EU classification Extremely flammable (F+)
NFPA 704

NFPA 704.svg

4
1
2
 
தொடர்புடைய சேர்மங்கள்
தொடர்புடைய சேர்மங்கள் எத்தீன்(Ethane)
அசிட்டிலீன்(Acetylene)
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

எத்திலீன் (Ethylene) (ஐயுபிஏசி(IUPAC) பெயர்: எத்தீன் (ethene) என்பது C2H4. என்னும் வேதியியல் வாய்பாடு கொண்ட ஒரு கரிம வேதிப்பொருள். இதன் வேதிவாய்பாட்டை H2C=CH2 என்றும் எழுதுவது வழக்கம். இது நிறமற்ற தீபற்றும், சற்றே இனிய மணம் கொண்ட வளிமம். இதுவே ஆல்க்கீன் குழுவைச் சேர்ந்த கரிமவேதிப்பொருள்கள் யாவற்றினும் மிக எளிமையான சேர்மம். கரிம-கரிமப் பிணைப்பு இரட்டைப் பிணைப்பாக இருப்பதால் இதனை நிறைவுறா ஐதரோகார்பன் (unsaturated hydrocarbon) அல்லது ஓலிஃவின் (olefin) வகைகளில் ஒன்று என்பர். எத்திலீன், தொழிலகங்களில் பயன்படும் மிகவும் முக்கியமான வேதிப்பொருள்களில் ஒன்று. இது உயிரியலில் வளரூக்கியாகவும் (ஆர்மோன், hormone) பயன்படுகின்றது [2] கரிம வேதிப்பொருள்களிலேயே எத்திலீன்தான் உலகளவில் கூட்டுதலாக படைக்கப்படும் பொருள்; 2005 ஆம் ஆண்டு உலகளாவிய படைப்பளவு 107 மில்லியன் டன்[3].

பிளாசிட்டிக் (நெகிழியப்) பைகள் (பரவலாக பாலித்தீன் பை என்று அறியப்படும் பாலியெத்திலீன் பை), நிறச்சாயம் (பெயின்ட்), தானுந்துகளில் பயன்படும் உறையான்கள் (antifreeze), கழுவப்பயன்படும் நீர்மங்கள் ஆகியவற்றில் எத்திலீன் பயன்படுகின்றது. எத்திலீன், எரியெண்ணெய் வேதியியல் தொழிலகங்களில்(பெட்ரோகெமிக்கல் தொழிலகங்களில்) பெரும்பாலும் உயர் வெப்பநிலையில் (~850 (°C)நீராவி கலந்து பிரிக்கும் வழி (இசுட்டீம் கிராக்கிங், Steam cracking) உருவாக்குகின்றார்கள்.


[தொகு] அடிக்குறிப்புகளும் மேற்கோள்களும்

  1. Record of Ethylene in the GESTIS Substance Database from the Institute for Occupational Safety and Health (IFA), accessed on 25 October 2007
  2. Wang K, Li H, Ecker J. "Ethylene biosynthesis and signaling networks". Plant Cell 14 Suppl: S131–51. PMID 12045274. 
  3. “Production: Growth is the Norm” Chemical and Engineering News, July 1 0, 2006, p. 59.


"http://ta.wikipedia.org/w/index.php?title=எத்திலீன்&oldid=1084668" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்