பிரிமிடின்
| பிரிமிடின் | |
|---|---|
|
பிரிமிடின் |
|
|
பிற பெயர்கள்
1,3-டைஅசைன், மெட்டா-டைஅசைன் |
|
| வேதியியல் குறிப்புகள் | |
| CAS எண் | |
| PubChem | |
| en:KEGG | C00396 |
| ம.பா.த | pyrimidine |
| ChEBI | CHEBI:16898 |
| Jmol-முப்பரிமாணப் படங்கள் | Image 1 |
| பண்புகள் | |
| வேதியியல் வாய்பாடு | C4H4N2 |
| மோலார் நிறை | 80.088 கி மோல்-1 |
| அடர்த்தி | 1.016 கி செமீ-3 |
| உருகுநிலை |
20-22 °C, 293-295 K, 68-72 °F |
| கொதிநிலை |
123-124 °C, 396-397 K, 253-255 °F |
| காடித்தன்மை எண் (pKa) | 1.10[1] (புரோட்டான்சேர்க்கப்பட்ட பிரிமிடின்) |
| வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள் பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும். Infobox disclaimer and references |
|
பிரிமிடின் (Pyrimidine) ஒரு நறுமணமுள்ள பல்லினவட்ட கரிமச் சேர்மமாகும். இதன் வாய்பாடு: C4H4N2. இது, பிரிடின் மற்றும் பென்சீனைப் போன்று ஆறுருப்பு வளையத்தினைக் கொண்டது: இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் மூன்றாம் நிலைகளில் கொண்டுள்ளது[2]. பிரிமிடின், டைஅசைனின் இரண்டு வேறு வடிவங்களுடன் மாற்றியனாக உள்ளது: முதலாவது பிரிடசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் இரண்டாம் நிலைகளில் கொண்டுள்ளது; இரண்டாவது பிரசின், இரண்டு நைட்ரசன் அணுக்களை ஒன்று மற்றும் நான்காம் நிலைகளில் கொண்டுள்ளது.
உட்கரு அமில மூலங்கள் (நியூக்ளியோடைடுகள்) [தொகு]
உட்கரு அமிலங்களிலுள்ள மூன்று உட்கரு அடித்தளங்களான சைடோசின் (C), தைமின் (T), யுராசில் (U) ஆகியன பிரிமிடினின் கிளைப்பொருள்களாகும்:
டிஆக்சி ரைபோநியூக்கிளிக் அமிலம் (டி.என்.ஏ.) மற்றும் ரைபோநியூக்ளிக் அமிலங்களில் (ஆர்.என்.ஏ) உள்ள உட்கரு அடித்தளங்கள் எதிர்நிரப்பு பியூரின்களுடன் ஹைட்ரசன் பிணைப்புகளை உருவாக்குகின்றன. டி.என்.ஏ.-வில் பியூரின்களான அடெனின் (A) மற்றும் குவானின் (G), பிரிமிடின்களான தைமின் (T) மற்றும் சைடோசினுடன் (C) முறையே பிணைகின்றன.
ஆர்.என்.ஏ.-வில் அடெனினின் (A) எதிர்நிரப்பு, தைமினுக்குப் (T) பதிலாக யுராசில் (U) ஆகும். எனவே, கீழ்வரும் பிணைகள் உருவாகின்றன: அடெனின்:யுராசில் மற்றும் குவானின்:சைடோசின்.
மிக அரிதாக, தைமின் ஆர்.என்.ஏ.- விலும், யுராசில் டி.என்.ஏ.-விலும் காணப்படுகிறது. உட்கரு அமிலங்களில் மேலே குறிப்பிட்ட மூன்று பெரிய பிரிமிடின் அடித்தளங்களைத் தவிர, சில சிறிய பிரிமிடின் அடித்தளங்களும் காணப்படுகின்றன. இச்சிறு பிரிமிடின்கள், பெரிய பிரிமிடின்களின் மீத்தைலாக்கப்பட்ட வடிவங்களாகும். இவை ஒழுங்காற்று பணிகளில் ஈடுபடுவதாக கருதப்படுகின்றது[3].
மேற்கோள்கள் [தொகு]
- ↑ Brown, H.C., et al., in Baude, E.A. and Nachod, F.C., Determination of Organic Structures by Physical Methods, Academic Press, New York, 1955.
- ↑ Gilchrist, Thomas Lonsdale; Gilchrist, T. L. (1997). Heterocyclic chemistry. New York: Longman. ISBN 0-582-27843-0.
- ↑ Nelson David L. and Michael M. Cox. Principles of Biochemstry, ed. 5. W.H. Freeman and Company (2008) p. 272–274.