மூலக்கூறு வாய்பாடு
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
மூலக்கூறு வாய்பாடு அல்லது வேதியியல் வாய்பாடு (chemical formula) என்பது மூலக்கூறு ஒன்றில் எத்தனை வகை அணுக்கள் உள்ளன என்பதை உணர்த்துகிறது.
ஐதரசன் பெராக்சைடின் (டை ஹைட்ரஜன் டை ஆக்சைடு) மூலக்கூறு வாய்பாடு H2O2 ஆகும். இந்த வாய்பாடு மூலம் இந்த மூலக்கூறில் இரண்டு ஐதரசன் அணுக்களும் இரண்டு ஆக்சிசன் அணுக்களும் உள்ளன என்று தெரிகிறது.
C6H12O6 என்பது குளுக்கோசின் மூலக்கூறு வாய்பாடு இந்த வாய்பாடு மூலம் அணுக்களின் எண்ணிக்கை தெரிகிறதே தவிர இந்த அணுக்கள் எந்தவகையில் ஒன்றுடன் ஒன்று பிணைக்கப்பட்டுள்ளன என்று அறிய முடிவதில்லை. இக்குறையை அமைப்பு வாய்பாடு தீர்த்து வைக்கிறது.