அமோனியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அமோனியா
Ammonia-2D-dimensions.png
Ammonia-3D-vdW.png
வேதியியல் குறிப்புகள்
CAS எண் 7664-41-7
PubChem 222
RTECS எண் BO0875000
Jmol-முப்பரிமாணப் படங்கள் Image 1
பண்புகள்
வேதியியல் வாய்பாடு NH3
மோலார் நிறை 17.0306 g/mol
தோற்றம் நிறமற்ற, கடும் நெடி வீசும் வளிமம்
அடர்த்தி 0.6942 [2]
உருகுநிலை

-77.73 °C (195.42 K)

கொதிநிலை

-33.34 °C (239.81 K)

நீரில் கரைதிறன் 89.9 g/100 ml at 0 °C
காடித்தன்மை எண் (pKa) 9.25
காரத்தன்மை எண் (pKb) 4.75
ஒளிவிலகல் சுட்டெண் (nD) εr
கட்டமைப்பு
மூலக்கூறு வடிவம்
இருமுனைத் திருப்புமை (Dipole moment) 1.42 D
தீநிகழ்தகவு
முதன்மையான தீநிகழ்தகவுகள் தீநேர்வு தரவல்ல வளிமம், காரத்தன்மையான, அரிக்கவல்ல பொருள்
NFPA 704

NFPA 704.svg

1
3
0
 
R-phrases R10, R23, R34, R50
(S1/2), S16, S36/37/39,
S45, S61
தீபற்றும் வெப்பநிலை None[3]
தானே தீபற்றும்
வெப்பநிலை
651 °C
தொடர்புடைய சேர்மங்கள்
Other anions ஹைட்ராக்ஸைடு (NH4OH)
Other cations அமோனியம் (NH4+)

தொடர்புடையவை
குளோரைடு (NH4Cl)
தொடர்புடைய சேர்மங்கள் ஹைட்ராசைன்
ஹைட்ராசாயிக் காடி
ஹைட்ரோசைலமைன்
குளோரோமைன்
வேறென்று குறிப்பிடப்படாத வரைக்கும் மேலே குறிப்பிடப்பட்டுள்ள மதிப்புகள்
பொருட்களின் திட்ட வெப்ப அழுத்த நிலை (25 °செல்சியசு, 100 கிலோ பாஸ்கல்) மதிப்புகள் ஆகும்.
Infobox disclaimer and references

அமோனியா என்பது ஒரு நைட்ரஜன் (நைதரசன்) அணுவுடன் மூன்று ஹைட்ரஜன் (ஐதரசன்) அணுக்கள் இணைந்திருக்கும் ஒரு சேர்மமாகும். இதன் மூலக்கூறு வாய்பாடு NH3. அறை வெப்ப அழுத்தநிலைகளில், அமோனியா ஒரு வளிமமாகும். நச்சுத்தன்மையும் அரிப்புத்தன்மையும் கொண்ட இவ்வளிமம் ஒருவகை கடும் நாற்றம் (நெடி) கொண்டது. அமோனியா காற்றைவிட இலேசானது.

அமோனியா 100 ஆண்டுகளுக்கும் மேலாக உலகில் உற்பத்தி செய்து பயன்படுத்தப்பட்டு வரும் ஒரு வேதிப்பொருள். உலகின் மொத்த உற்பத்தியில் எடையளவில் (டன்னளவில்) இரண்டாவதாக உள்ள வேதிப்பொருள்[4]. உற்பத்தி செய்யும் வேதிப்பொருட்களில் மொத்த மதிப்பில் (பணம்), முதல் இடம் வகிக்கின்றது[5]. 1980களின் துவக்கத்தில் ஆண்டொன்றுக்கு 100 மில்லியன் மெட்ரிக் டன்னுக்கும் அதிகமாக உறபத்தி செய்யப்பட்டது. அமோனியா பயிர்களுக்கு இடும் உர உற்பத்தியில் பயனாகும் ஒரு பொருள். பல்வேறு வகையான மருந்துப்பொருட்கள் உற்பத்தியிலும் அமோனியா பயன்படுகின்றது.

பொருளடக்கம்

பெயர் வரலாறு [தொகு]

அமோனியா என்ற பெயர் இன்றைய லிபியா நாட்டில் அம்மானில் (Ammon) முன்pu இருந்த வியாழனுக்கான கோயிலில் (Temple of Jupiter Ammon), ஒட்டகத்தின் சாணத்தில் இருந்து பிரித்தெடுக்கப்பட்ட பொருளாக இருந்ததால், அம்மோனியம் என்னும் பெயர் பெற்றது[6] ஆனால், அமோனியாவில் இருந்து பெற்ற உப்புகளை ஹார்மோனிக்கஸ் சால் (சால் = உப்பு) Hammoniacus sal[7]என்று ரோமானிய எழுத்தாளர் பிளினி (கி.பி. 23-79) குறிப்பிட்டிருந்ததாகவும் கூறப்படுகின்றது. இதுதான் பிற்காலத்தில் அறியப்பட்ட சால்-அம்மொனியாக் (sal-ammoniac.)[7] என்பதா, இதிலிருந்து அமோனியா என்னும் பெயர் ஏற்பட்டதா என்பது உறுதிப்படுத்த முடியவில்லை.

அமோனியாவின் உட்கூறுகளை முதன் முதலாகக் 1777ல் கண்டுபிடித்தவர் கிளாடெ லூயி பெர்ட்டோலே (Claude Louis Berthollet)[8] என்பார். ஆனால் இவ் வளிமத்தை 1774 ஆம் ஆண்டு முதன் முதலாக தனியான ஒரு வளிமமாகக் கண்டுணர்ந்தவர் ஆங்கிலேய வேதியியலாளர் ஜோசப் பிரீஸ்ட்லி (Joseph Priestley). ஜோசப் பிரீஸ்ட்லி இதனைக் "காரக காற்று" (ஆல்க்கலைன் காற்று, alkaline air) என்று பெயர் சூட்டினார்.

குறிப்பிடத்தக்க பண்புகள் [தொகு]

தொழிலகங்களில் பயன்படும் அம்மோயாவை நீரற்ற அமோனியா என்று கூறுவர். ஏனெனில் அதில் நீர் சேராமல் இருக்கும். அமோனியா -33 °C வெப்பநிலையிலேயே கொதிக்கத் தொடங்குவதால், அதனை அதிக அழுத்தத்தில் கீழ் வெப்பநிலையில் வைத்திருப்பர். திண்ம நிலையில் இருந்து உருகும் வெப்பநிலை -77.7 °C. அமோனியா நீரில் நன்றாகக் கரையும். நீரில் எடையளவில் 45% கரையவல்லது. முழுக்கரைசைலாக உள்ளபொழுது இது அமோனியம் ஹைட்ராக்ஸைடு (NH4OH) என்று அழைக்கபடும். இது ஒரு காரப்பொருள் (ஆல்க்கலைன்). அமோனியா எரியும் பொழுது பச்சையும் மஞ்சளும் கலந்த நிறத் தீக்கொழுந்தாக எரிகின்றது.

பயன்பாடுகள் [தொகு]

மேற்கோள்கள் [தொகு]

  1. Ammonia data at NIST Webbook, last accessed May 7 2007.
  2. NIST Chemistry WebBook (website page of the National Institute of Standards and Technology) URL last accessed May 15 2007
  3. MSDS Sheet from W.D. Service Co.
  4. Van Nostrand's Scientific Encyclopedia, 9th Ed., (Ed.)Glenn D. Considine, Wiley-Intersceince, 2002.
  5. Van Nostrand's Scientific Encyclopedia, 9th Ed., (Ed.)Glenn D. Considine, Wiley-Intersceince, 2002.
  6. Van Nostrand's Sceintific Encyclopedia, 9th Ed., (Ed.)Glenn D. Considine, Wiley-Intersceince, 2002.
  7. 7.0 7.1 Webmineral website URL last accessed August 27 2006
  8. Van Nostrand's Sceintific Encyclopedia, 9th Ed., (Ed.)Glenn D. Considine, Wiley-Intersceince, 2002.

"http://ta.wikipedia.org/w/index.php?title=அமோனியா&oldid=1344514" இருந்து மீள்விக்கப்பட்டது