வனேடியம் நைட்ரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
வனேடியம் நைட்ரைடு
பெயர்கள்
ஐயூபிஏசி பெயர்
வனேடியம் நைட்ரைடு
வேறு பெயர்கள்
வனேடியம்(III) நைட்ரைடு
இனங்காட்டிகள்
24646-85-3 N
பப்கெம் 90570
பண்புகள்
VN
வாய்ப்பாட்டு எடை 64.9482 கி/மோல்
தோற்றம் கருப்புத் தூள்
அடர்த்தி 6.13 கி/செ.மீ3
உருகுநிலை 2,050 °C (3,720 °F; 2,320 K)
கட்டமைப்பு
படிக அமைப்பு கனசதுரம், cF8
புறவெளித் தொகுதி Fm3m, No. 225
தீங்குகள்
தீப்பற்றும் வெப்பநிலை எளிதில் தீப்பற்றாது
தொடர்புடைய சேர்மங்கள்
ஏனைய எதிர் மின்னயனிகள் வனேடியம்(III) ஆக்சைடு, வனேடியம் கார்பைடு
ஏனைய நேர் மின்அயனிகள் தைட்டானியம் நைட்ரைடு, குரோமியம்(III) நைட்ரைடு, நையோபியம் நைட்ரைடு
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
 Y verify (இதுY/N?)
Infobox references

வனேடியம் நைட்ரைடு (Vanadium nitride) என்பது VN என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். எஃகை நைட்ரைடேற்றம் செய்யும்போது வனேடியம் மற்றும் நைட்ரசன் சேர்ந்து இச்சேர்மம் உருவாகிறது[1]. இதனால் எஃகின் தேய்மானத்தடை அதிகரிக்கிறது.

V2N, என்ற மூலக்கூற்று வாய்ப்பாடு கொண்ட சேர்மமும் வனேடியம் நைட்ரைடு என்றே அழைக்கப்படுகிறது. நைட்ரைடேற்றம் நிகழும்போதே இச்சேர்மமும் உண்டாகிறது[2]. வனேடியம் நைட்ரைடு கனசதுர பாறை உப்பு அமைப்பைக் கொண்டுள்ளது. V4 கொத்துகளைக் கொண்டுள்ள தாழ் வெப்பநிலை அமைப்பும் காணப்படுகிறது[3]. உயர் வெப்பநிலை சோடியம் குளோரைடு அமைப்பின் அதிர்வு முறைகள் சுழிக்குக் கீழாகக் குறைக்கப்படும் போது தோன்றும் இயக்க நிலைப்புத்தன்மை இன்மையினால் தாழ் வெப்பநிலை நிலை உருவாகிறது[4]

இச்சேர்மம் ஒரு வலிமையான இணைப்பு மீக்கடத்தியாகும்[5]. மீநுண்படிக வனேடியம் நைட்ரைடு மீமின் தேக்கிகளில் பயன்படுத்தப்படுகிறது.[6]

மேற்கோள்கள்[தொகு]

  1. Munozriofano, R; Casteletti, L; Nascente, P (2006). "Study of the wear behavior of ion nitrided steels with different vanadium contents". Surface and Coatings Technology 200 (20–21): 6101. doi:10.1016/j.surfcoat.2005.09.026. 
  2. Thermo reactive diffusion vanadium nitride coatings on AISI 1020 steel U.Sen Key Engineering Materials vols 264-268 (2004),577
  3. Kubel, F.; Lengauer, W.; Yvon, K.; Junod, A. (1988). "Structural phase transition at 205 K in stoichiometric vanadium nitride". Physical Review B 38 (18): 12908. doi:10.1103/PhysRevB.38.12908. 
  4. A. B. Mei, O. Hellman, N. Wireklint, C. M. Schlepütz, D. G. Sangiovanni, B. Alling, A. Rockett, L. Hultman, I. Petrov, and J. E. Greene (2015). "Dynamic and structural stability of cubic vanadium nitride". Physical Review B 91 (5): 054101. doi:10.1103/PhysRevB.91.054101. 
  5. Zhao, B. R.; Chen, L.; Luo, H. L.; Mullin, D. P. (1984). "Superconducting and normal-state properties of vanadium nitride". Physical Review B 29 (11): 6198. doi:10.1103/PhysRevB.29.6198. 
  6. Choi, D.; Blomgren, G. E.; Kumta, P. N. (2006). "Fast and Reversible Surface Redox Reaction in Nanocrystalline Vanadium Nitride Supercapacitors". Advanced Materials 18 (9): 1178. doi:10.1002/adma.200502471. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=வனேடியம்_நைட்ரைடு&oldid=3915540" இலிருந்து மீள்விக்கப்பட்டது