அமோனியம் அறுகுளோரோ இரிடேட்டு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
அமோனியம் அறுகுளோரோ இரிடேட்டு
இனங்காட்டிகள்
16940-92-4
பண்புகள்
H8N2Cl6Ir
வாய்ப்பாட்டு எடை 441.01
தோற்றம் பழுப்புநிற படிகங்கள்
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

அமோனியம் அறுகுளோரோ இரிடேட்டு (Ammonium hexachloroiridate) என்பது (NH4)2[IrCl6] என்ற மூலக்கூறு வாய்ப்பாடு கொண்டுள்ள ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும். இந்த அடர்பழுப்பு நிறத் திண்மம் இரிடியம்((IV) அணைவு அயனியின் [IrCl6]2-. அமோனியம் உப்பு ஆகும். பொதுவாக காணப்படும் இந்த இரிடியச் சேர்மமே வர்த்தக நோக்கிலும் முக்கியத்துவம் பெற்ற இரிடியச் சேர்மமாக விளங்குகிறது[1].

அமைப்பு[தொகு]

அமோனியம் அறுகுளோரோபிளாட்டினேட்டின் அமைப்பு போலவே இவ்வுப்பும் கனச்சதுர நோக்குருவில் படிகமாகிறது என எக்ஸ் கதிர் படிகவியல் ஆய்வு அடையாளப்படுத்துகிறது. இரிடியம்((IV) அணைவு அயனி [IrCl6]2- மையங்கள் எண்முக மூலக்கூற்று வடிவியலை ஏற்றுள்ளன[2].

பயன்கள்[தொகு]

கனிமங்களில் இருந்து இரிடியத்தைத் தனித்துப் பிரிக்கும்போது முக்கியமான இடைநிலைச் சேர்மமாக அமோனியம் அறுகுளோரோ இரிடேட்டு விளங்குகிறது. பெரும்பாலான தனிமங்கள் அவற்றின் நீர்த்த குளோரைடு கரைசலுடன் ஐதரசன் சல்பைடைச் சேர்க்கும்போது கரையாத சல்பைடு உப்புகளைத் தருகின்றன. ஆனால் [IrCl6]2- அணைவு அயனி, ஈனி பதிலீட்டைத் தடுக்கிறது. ஐதரசன் வாயுச் சூழலில் இதைச் சூடுபடுத்தும்போது திண்மநிலையில் உள்ள உப்பு உலோகமாக மாறுகிறது:[1]

(NH4)2[IrCl6] + 2 H2 → Ir + 6 HCl + 2 NH3

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 Renner, H.; Schlamp, G.; Kleinwächter, I.; Drost, E.; Lüschow, H. M.; Tews, P.; Panster, P.; Diehl, M. et al. (2002). "Platinum group metals and compounds". Ullmann's Encyclopedia of Industrial Chemistry. Wiley. doi:10.1002/14356007.a21_075. 
  2. Bokii, G.B.; Ussikov, P.I. "Roentgenographische Untersuchung der Struktur des Ammonium-Chlor-Iridats (N H4)2IrCl6 Doklady Akademii Nauk SSSR 1940, vol. 26, p782-p784.