இரிடியம்(II) குளோரைடு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
இரிடியம்(II) குளோரைடு
பெயர்கள்
வேறு பெயர்கள்
இரிடியம் இருகுளோரைடு, இரிடியம் பைகுளோரைடு
இனங்காட்டிகள்
13465-17-3
InChI
  • InChI=1S/2ClH.Ir/h2*1H;/q;;+2/p-2
    Key: BBVIQHLJRNEBBW-UHFFFAOYSA-L
யேமல் -3D படிமங்கள் Image
SMILES
  • [Ir+2].[Cl-].[Cl-]
பண்புகள்
Cl2Ir
வாய்ப்பாட்டு எடை 263.12 g·mol−1
தோற்றம் அடர்-பச்சை நிறப் படிகங்கள்
உருகுநிலை 773 °C (1,423 °F; 1,046 K)
கரையாது
மாறுதலாக ஏதும் சொல்லவில்லை என்றால் கொடுக்கப்பட்ட தரவுகள் யாவும்
பொருள்கள் அவைகளின் இயல்பான வெப்ப அழுத்த நிலையில் (25°C, 100kPa) இருக்கும்.
Infobox references

இரிடியம்(II) குளோரைடு (Iridium(II) chloride) IrCl2 என்ற மூலக்கூற்று வாய்ப்பாட்டால் விவரிக்கப்படும் ஒரு கனிம வேதியியல் சேர்மமாகும்.[1][2] இரிடியமும் ஐதரோ குளோரிக் அமிலமும் சேர்ந்து இந்த உலோக உப்பு உருவாகிறது.

தயாரிப்பு[தொகு]

தூள் செய்யப்பட்ட உலோக இரிடியத்துடன் குளோரின் வாயுவைச் சேர்த்து சூடாக்கப்படும் போது இரிடியம்(II) குளோரைடு உருவாகிறது.:[3][4]

Ir + Cl2 -> IrCl2

இரிடியம்(III) குளோரைடு மற்றும் உலோக இரிடியம் ஆகியவற்றுக்கு இடையேயான வினையிலும் இரிடியம்(II) குளோரைடு தயாரிக்கப்படுகிறது.

2IrCl3 + Ir -> 3IrCl2

இயற்பியல் பண்புகள்[தொகு]

இரிடியம்(II) குளோரைடு பளபளப்பான கரும்-பச்சை படிகங்களாக உருவாகிறது. இவை நடைமுறையில் நீரில் கரையாது.[5] அமிலங்கள் மற்றும் காரங்களில் சிறிதளவு கரையும். 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடாக்கப்படும்போது இது உருகாமல் சிதைகிறது.

ΔG (298 கெல்வின், கிலோயூல்/மோல்) உருவாக்கத்தின் நிலையான கிப்சு ஆற்றல் அளவு -139.7 ஆகும்.

வேதிப் பண்புகள்[தொகு]

இரிடியம்(II) குளோரைடை 773 ° செல்சியசு வெப்பநிலைக்கு சூடுபடுத்தினால் சமன்பாட்டில் கண்டவாறு சிதைக்வடைகிறது:[6]

2IrCl2 -> 2IrCl + Cl2

798 ° செல்சியசுக்கு மேற்பட்ட வெப்பநிலையில் இது முழுமையாகச் சிதைவடைகிறது:

IrCl2 -> Ir + Cl2

மேற்கோள்கள்[தொகு]

  1. Regnault, Victor (1853) (in en). Elements of Chemistry: For the Use of Colleges, Academies, and Schools. Clark & Hesser. பக். 355. https://books.google.com/books?id=FYsGAQAAIAAJ&dq=iridium(II)+chloride+IrCl2&pg=PA353. பார்த்த நாள்: 31 March 2023. 
  2. Kandiner, H. J. (3 September 2013) (in de). Iridium. Springer-Verlag. பக். 55. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-3-662-12128-3. https://books.google.com/books?id=mImABwAAQBAJ&dq=iridium(II)+chloride+IrCl2&pg=PA55. பார்த்த நாள்: 31 March 2023. 
  3. Cooley, Arnold James (1880) (in en). A cyclopædia of practical receipts. பக். 906. https://books.google.com/books?id=rUMCAAAAQAAJ&dq=iridium+dichloride+IrCl2&pg=PA906. பார்த்த நாள்: 31 March 2023. 
  4. Watts, Henry (1875) (in en). A Dictionary of Chemistry and the Allied Branches of Other Sciences. Longmans, Green, and Company. பக். 318. https://books.google.com/books?id=sITPAAAAMAAJ&dq=iridium+dichloride+IrCl2&pg=PA318. பார்த்த நாள்: 31 March 2023. 
  5. Friend, John Newton (1922) (in en). Cobalt, Nickel, and the Elements of the Platinum Group. Griffin. பக். 243. https://books.google.com/books?id=gXu8AAAAIAAJ&q=iridium+dichloride+IrCl2. பார்த்த நாள்: 31 March 2023. 
  6. Satya, Prakash (2013) (in en). Advanced Chemistry of Rare Elements. S. Chand Publishing. பக். 629. பன்னாட்டுத் தரப்புத்தக எண்:978-81-219-4254-6. https://books.google.com/books?id=WB_4DwAAQBAJ&dq=iridium+dichloride+IrCl2&pg=PA629. பார்த்த நாள்: 31 March 2023. 
"https://ta.wikipedia.org/w/index.php?title=இரிடியம்(II)_குளோரைடு&oldid=3743030" இலிருந்து மீள்விக்கப்பட்டது