லிபியா

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
லிபியா
الجماهيرية العربية الليبية الشعبية الاشتراكية العظمى
al-jamāhīriyyatu l-`arabiyyatu l-lībiyyatu š-ša`biyyatu l-ištirākiyyatu l-`uZmà
Great Socialist People's Libyan Arab Jamahiriya
லிபியாவின் கொடி லிபியாவின் சின்னம்
நாட்டுப்பண்
அல்லாஹு அக்பர்
கடவுளே உயர்வானவர்
Location of லிபியாவின்
தலைநகரம் திரிப்பொலி
32°54′N 13°11′E / 32.9, 13.183
பெரிய நகரம் தலைநகர்
ஆட்சி மொழி(கள்) அரபு
மக்கள் லிபியன்
அரசு சோசலிசக் குடியரசு
 -  புரட்சித் தலைவர் முவாம்மர் அல்-கடாபி (de facto), Muhammad al-Zanati (de jure)
 -  பொது மக்கள் காங்கிரஸ் பொதுச்ச் செயலர் முகமது அல்-சனாட்டி
 -  தலைமை அமைச்சர் பக்தாதி மஹ்மூதி
விடுதலை
 -  இத்தாலியிடம் இருந்து பெப்ரவரி 10, 1947 
 -  ஐநா கண்காணிப்பின் கீழ் பிரான்ஸ்/ஐக்கிய இராச்சியம்
டிசம்பர் 24, 1951 
பரப்பளவு
 -  மொத்தம் 17,59,540 கிமீ² (17வது)
6,79,359 சது. மை 
 -  நீர் (%) புறக்கணிக்கத்தக்கது
மக்கள்தொகை
 -   மதிப்பீடு 6,036,914 (105வது)
 -  2006 குடிமதிப்பு 5,670,6881 
 -  அடர்த்தி 3.2/கிமீ² (218வது)
8.4/சதுர மைல்
மொ.தே.உ 
(கொஆச (ppp))
2006 கணிப்பீடு
 -  மொத்தம் $74.97 பில்லியன் (67வது)
 -  நபர்வரி $12,700 (58வது)
ம.வ.சு (2005) Green Arrow Up Darker.svg0.818 (உயர்) (56வது)
நாணயம் லிபிய டினார் (LYD)
நேர வலயம் EET (ஒ.ச.நே.+2)
 -  கோடை (ப.சே.நே.) அவதானிக்கப்படுவதில்லை (ஒ.ச.நே.+2)
இணைய குறி .ly
தொலைபேசி +218
1 350,000 வெளிநாட்டவர்கள் உள்ளடக்கப்பட்டுள்ளனர்; 2006 லிபிய கணக்கெடுப்பு; [1]

லிபியா வட ஆப்பிரிக்காவில் உள்ள ஒரு நாடு ஆகும். இதன் வட எல்லையாக மத்திய தரைக்கடலும் கிழக்கில் எகிப்து, தென்கிழக்கில் சூடான், தெற்கில் சாட், நைஜர் ஆகியனவும், மேற்கில் அல்ஜீரியா, துனீசியா ஆகியனவும் எல்லைகளாக அமைந்துள்ளன. இதன் தலைநகர் திரிப்பொலி ஆகும்.

ஏறத்தாழ 18,00,000 ச.கி.மீs (7 sq mi) பரப்பளவுள்ள லிபியா ஆபிரிக்க நாடுகளில் பரப்பளவைக் கொண்டு நான்காவது பெரிய நாடாகும்; உலகளவில் 17வது பெரிய நாடாகும்.[1] லிபியாவின் மக்கள்தொகையான 6.4 மில்லியன் பேரில் தலைநகரமான, திரிப்பொலியில் 1.7 மில்லியன் மக்கள் வாழ்கின்றனர். இதன் மூன்று பாரம்பர்ய பகுதிகள் திரிப்பொலித்தானியா, ஃபெசான் மற்றும் சைரநைக்கா ஆகும். லிபியாவின் மனிதவள குறியீடு ஆபிரிக்காவிலேயே மிகக்கூடுதலானதாகும். 2009ஆம் ஆண்டு நிலவரப்படி, சீசெல்சு, எக்குவடோரியல் கினி மற்றும் காபொன்னை அடுத்து மிகக் கூடுதலான தனிநபர் மொத்த உள்நாட்டு உற்பத்தி (கொள்வனவு ஆற்றல் சமநிலை) கொண்டுள்ளது. இவற்றிற்கு பெரும் பெட்ரோலிய இருப்பும் குறைந்த மக்கள்தொகையுமே காரணங்களாக அமைகின்றன.[2][3] உலகின் செல்வமிக்க பத்து எண்ணெய் உற்பத்தி நாடுகளில் லிபியா ஒன்றாகத் திகழ்கிறது. உலக உற்பத்தியில் 2% லிபியாவினுடையதாகும்.

1951ஆம் ஆண்டு லிபியா இராச்சியம் என விடுதலைப்பெற்றது. 1969ஆம் ஆண்டு ஓர் இராணுவப் புரட்சி மூலம் ஆட்சியைக் கைப்பற்றியது முதல் இன்றுவரை முவாம்மர் அல்-கடாபி ஆண்டு வருகிறார்.

2011ஆம் ஆண்டு எகிப்தின் மக்கள்புரட்சியை அடுத்து பெப்ரவரியில் லிபியாவிலும் கடாபியின் அரசுக்கெதிராக மக்கள் எதிர்ப்புப் போராட்டங்கள் வலுப்பெற்றன. 23 பெப்ரவரி 2011 அன்றைய நிலவரப்படி லிபிய எதிர்த்தரப்பு பல கடற்கரைப் பிரதேசங்களையும் நகரங்களையும் கட்டுபாட்டுக்குள் கொண்டுவந்துள்ளதாக செய்திகள் வெளியாயுள்ளன.[4][5][6] கடாஃபியின் அரசின் கட்டுக்குள் தலைநகர் திரிப்பொலியின் சில பகுதிகளும் தெற்கு பாலைப்பகுதியான சபா நகரமும் மட்டுமே உள்ளதாகவும் செய்திகள் கூறுகின்றன.[7]

இந்த மக்கள் புரட்சியின்போது லிபியாவின் பங்காஷி பகுதியில் ஒப்பந்த அடிப்படையில் வேலைபார்த்து வந்த தமிழ்த் தொழிலாளர்கள் இரதரப்பினரிடையேயான மோதலில் சிக்கினர். தாக்குதலில் திருநெல்வேலி மாவட்டம் தலைவன்கோட்டை சிற்றூரைச் சேர்ந்த முருகையா பாண்டியன் மற்றும் அசோக் குமார் மரணமடைந்துள்ளனர்.[8]

[தொகு] மேற்கோள்கள்

  1. U.N. Demographic Yearbook, (2003), "Demographic Yearbook (3) Pop., Rate of Pop. Increase, Surface Area & Density", United Nations Statistics Division. Retrieved July 15, 2006.
  2. Annual Statistical Bulletin, (2004), "World proven crude oil reserves by country, 1980–2004", O.P.E.C.. Retrieved July 20, 2006.
  3. World Economic Outlook Database, (April, 2006), "Report for Selected Countries and Subjects", International Monetary Fund. Retrieved July 15, 2006.
  4. "Gaddafi defiant as state teeters - Africa". Al Jazeera English. பார்த்த நாள் 2011-02-23.
  5. "BBC News - Middle East and North Africa unrest". Bbc.co.uk. பார்த்த நாள் 2011-02-23.
  6. "Libyan minister quits, diplomat claims genocide". Sify.com. பார்த்த நாள் 2011-02-23.
  7. "Pressure mounts on isolated Gaddafi". BBC News. பார்த்த நாள் 2011-02-23.
  8. "லிபியாவில் மேலும் ஒரு தமிழர் பலி". தட்சுதமிழ் இணையதளம். பார்த்த நாள் 2011-02-24.

"http://ta.wikipedia.org/w/index.php?title=%E0%AE%B2%E0%AE%BF%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%AF%E0%AE%BE&oldid=1061256" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்