ஐக்கிய இராச்சியம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்1
ஐக்கிய இராச்சியத்தின் கொடி ஐக்கிய இராச்சியத்தின் சின்னம்
குறிக்கோள்
டியு எட் மொன் டிரொயிட்
பிரெஞ்சு: கடவுளும் எனது உரிமையும்3
நாட்டுப்பண்
கடவுள் அரசியை காப்பாராக4
Location of ஐக்கிய இராச்சியத்தின்
தலைநகரம்
பெரிய நகரம்
இலண்டன்
51°30′N, 0°7′W
ஆட்சி மொழி(கள்) இல்லை5
அரசு அரசியலமைப்புச்சட்ட முடியாட்சி
 -  அரசி எலிசபெத் II
 -  பிரதம அமைச்சர் கோர்டன் பிறௌன்
Formation
 -  Dynastic union மார்ச் 24, 1603 
 -  நிறுவப்பட்டது ஜனவரி 1, 1801 
 -  Redefinition ஏப்ரல் 12, 1922 
ஐரோப்பிய ஒன்றியத்தில் இணைவு ஜனவரி 1 1973
பரப்பளவு
 -  மொத்தம் 244,820 கிமீ² (79வது)
94,526 சது. மை 
 -  நீர் (%) 1.34%
மக்கள்தொகை
 -  2005 estimate 60,209,500 6 (21வது)
 -  2001 census 58,789,194 
மொ.தே.உ (கொ.ச.வே) 2005 கணிப்பீடு
 -  மொத்தம் $1.833 டிரில்லியன் (6th)
 -  தலா/ஆள்வீதம் $30,470 (18வது)
ம.வ.சு (2003) 0.939 (உயர்) (15வது)
நாணயம் பிரித்தானிய பவுண்ட் (£) (GBP)
நேர வலயம் கீறின்விச் சீர்தர நேரம் (ஒ.ச.நே.+0)
 -  கோடை (ப.சே.நே.) பிரித்தானிய கோடை நேரம் (UTC+1)
இணைய குறி .uk7
தொலைபேசி +44
1ஐக்கிய இராச்சியத்தில் வேறு சில மொழிகளும் சட்டரீதியான autochthonous (பிரதேச) மொழிகளாக, பிரதேச அல்லது சிறுபான்மை மொழிகளுக்கான ஐரோபியப் பட்டயத்தின்கீழ் அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்டுள்ளன. இவ்வொன்றிலும், ஐக்கிய இராச்சியத்தின் அதிகாரபூர்வப் பெயர்கள் பின்வருமாறு: 2அதிகாரபூர்வமற்ற.
3 The Royal motto in Scotland is Nemo Me Impune Lacessit (இலத்தீன்: "No-one harms me with impunity").
4 அதிகாரபூர்வமாக அங்கீகரிக்கப்பட்ட பிரதேச மொழிகள்:
வேல்ஸில்: வெல்ஷ்; மற்றும் ஸ்காட்லாந்தில்: ஸ்காட்டிஷ் கயேலிக் 2004 சட்டப்படி
5 பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானதிலிருந்து. 1927 ல் இப்பெயர் பெரிய பிரித்தானியா மற்றும் வட அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றம் பெற்றது.
6 ஐக்கிய இராச்சிய தேசிய புள்ளியியல் பணிமனையினால் வெளியிடப்பட்ட அதிகாரபூர்வக் கணிப்பீடு. ஏப்ரல் 2005 நிலைவரப்படி, ஜூலை 2004க்குரிய கணிப்பீடு இன்னும் வெளியிடப்படவில்லை.
7 ISO 3166-1 is GB.

ஐக்கிய இராச்சியம் (United Kingdom, பாரிய பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம்), மேற்கு ஐரோப்பாவில் உள்ள ஒரு நாடாகும். அது பொதுநலவாய நாடுகள், ஜி8, ஐரோப்பிய ஒன்றியம் மற்றும் நேட்டோ ஆகியவற்றின் ஓர் அங்கமாகும். பொதுவாக ஐக்கிய இராச்சியம் என்றோ UK என்றோ அல்லது (தவறுதலாக) பாரிய பிரிட்டன் என்றோ பிரிட்டன் என்றோ அழைக்கப்படும் ஐக்கிய இராச்சியமானது மொத்தமாக நான்கு பாகங்களைக் கொண்டது. இவற்றில் மூன்று — பண்டைய நாடுகளான இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்காட்லாந்து ஆகியவை — பாரிய பிரிட்டன் தீவில் உள்ளன. நான்காவது பாகமான, அயர்லாந்து தீவிலுள்ள வடக்கு அயர்லாந்து, ஐக்கிய இராச்சியத்தின் ஒரு மாகாணமாகக் கருதப்படுகிறது. வடக்கு அயர்லாந்துக்கும் அயர்லாந்துக் குடியரசுக்கும் நடுவிலுள்ள எல்லையானது ஐக்கிய இராச்சியத்தின் ஒரே சர்வதேச நில எல்லையாகும். ஐ.இ. உலகெங்கும் பற்பல கடல் கடந்த நிலப்பரப்புகளையும் கொண்டுள்ளது; பற்பல சார்பு நாடுகளுடன் உறவுகளையும் கொண்டுள்ளது.

பல தொடர் சட்டங்களின் வாயிலாக, (வேல்ஸை உள்ளடக்கிய) இங்கிலாந்து இராச்சியத்தோடு, முதலில் ஸ்காட்லாந்தையும், பின்னர் அயர்லாந்தையும், ஓராட்சியின் கீழ் ஒருங்கிணைத்து, இலண்டன் மாநகரைத் தலைநகராகக் கொண்ட ஐ.இ. உருவாக்கப்பட்டது. 1922இல் அயர்லாந்தின் பெரும்பாகம் ஐக்கிய இராச்சியத்திலிருந்து விடுபட்டு ஒரு சுதந்திர நாடாக உருவானது (எனினும் 1949 வரை, ஐக்கிய இராச்சியத்தின் மன்னரே அயர்லாந்தின் மன்னராகவும் திகழ்ந்தார்). பின்னர், அது அயர்லாந்து குடியரசாக உரு மாறியது. ஆனால், அத்தீவின் வடகிழக்குப் பகுதியிலுள்ள ஆறு வட்டாரங்கள், வடக்கு அயர்லாந்து என்ற உருவில் ஐக்கிய இராச்சியத்துடனே தொடர்ந்தன.

ஐ.இ. ஐரோப்பியக் கண்டத்தின் வடமேற்குக் கரைக்கு அப்பால் உள்ளது. அது அயர்லாந்து குடியரசுடன் உள்ள நில எல்லையைத் தவிர, வடக்குக் கடல், ஆங்கிலக் கால்வாய், செல்டிக் கடல், ஐரிஷ் கடல் மற்றும் அட்லாண்டிக் பெருங்கடல் ஆகியவற்றால் முற்றிலும் சூழப்பட்டிருக்கின்றது.

பாரிய பிரிட்டன், அல்லது வெறுமனே பிரிட்டன் என்பது பிரிட்டிஷ் தீவுகளிலேயே மிகப் பெரிதான தீவின் பூகோளப் பெயராகும். அரசியல் ரீதியில், பாரிய பிரிட்டன் என்பது இங்கிலாந்து, வேல்ஸ் மற்றும் ஸ்கொட்லாந்து ஆகியவற்றின் கூட்டுப் பெயராகும். (அதாவது, வடக்கு அயர்லாந்தைத் தவிர்த்து ஐக்கிய இராச்சியத்தின் ஏனைய பகுதிகள்). பாரிய பிரிட்டன் என்பதன் இவ்வாறான பயன்பாடு 1603இல் இங்கிலாந்து மற்றும் ஸ்கொட்லாந்து இராச்சியங்கள் இணைந்ததிலிருந்து நடைபெற்று வருகிறது, "பிரிட்டன் முழுவதும்" என்ற பொருளைக் குறிக்க. "பாரிய பிரிட்டனின் ஐக்கிய ராச்சியம்" ஒன்றிய சட்டம் 1707 வாயிலாகத் தோற்றுவிக்கப்பட்ட சில ஆண்டுகளுக்கு, ஸ்காட்லாந்தை "வடக்கு பிரிட்டன்" என்றும் இங்கிலாந்து மற்றும் வேல்ஸை "தெற்கு பிரிட்டன்" என்றும் அழைப்பது வழக்கமாக இருந்தது. ஆனால், இவ்வழக்கம் நாளடைவில் மறைந்து போயிற்று. இங்கு கவனத்தில் கொள்ள வேண்டிய ஒரு தகவல் என்னவென்றால், ஐக்கிய இராச்சியம் என்பதற்கு பதிலாக "பிரிட்டன்" என்றோ "பாரிய பிரிட்டன்" என்றோ குறிப்பிடுவது பிழையாகும், மனவருத்ததையும் ஏற்படுத்தலாம்.

பிரித்தானியத் தீவுகள் என்பது பாரிய பிரிட்டன் தீவு மற்றும் அயர்லாந்து தீவு மற்றும் அருகிலிருக்கும் ஏனைய தீவுகளான கால்வாய்த் தீவுகள், ஹீப்ரைட்ஸ், ஆர்க்னீ, Isle of Man, Isle of Wight, ஷெட்லாந்து தீவுகள் ஆகிய அனைத்தையும் உள்ளடக்கிய தீவுக்கூட்டத்தைக் குறிப்பிடுவதற்குப் பரவலாகப் பயன்படுத்தப் படுகிறது. எனினும், பிரிட்டனுக்குச் (அதாவது ஐக்கிய இராச்சியத்திற்கு) சொந்தமான தீவுகள் என்று தவறுதலாகப் புரிந்து கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்துவதால், இப் பயன்பாடு பெரும்பாலும் தவிர்க்கப் படுகிறது, குறிப்பாக அயர்லாந்தில். இதற்கு மாற்றுப் பெயராக,அதிகார வட்டாரங்களில் அதிகம் பயன்படுத்தப் படாவிட்டாலும், வடக்கு அட்லாண்டிக் தீவுகள் என்ற பெயர் முன்வைக்கப் பட்டிருக்கிறது.

பொருளடக்கம்

[தொகு] வரலாறு

கொட்லாந்தும் இங்கிலாந்தும் 10ம் நூற்றாண்டிலிருந்து தனித்தனி அமைப்புகளாக இயங்கி வந்துள்ளன. 1284ஆம் ஆண்டு முதல் ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழிருந்த வேல்ஸ், ஒன்றியச் சட்டங்கள் 1536 - 1543 வாயிலாக இங்கிலாந்து இராச்சியத்துடன் இணைந்தது. 1603 முதல் ஒரே மன்னரைக் கொண்ட தனித்தனி இராச்சியங்களான இங்கிலாந்தும் கொட்லாந்தும் ஒன்றியச் சட்டம் 1707 வாயிலாக ஒரு நிரந்தர ஒன்றியமாக இணைந்தன, பாரிய பிரிட்டனின் இராச்சியமாக. இது நடந்த நேரத்தில் கொட்லாந்து பொருளாதாரச் சீரழிவை எதிர்நோக்கியிருந்தது. இங்கிலாந்துடனான ஒருங்கிணைப்பு கொட்லாந்து மக்களின் பரவலான எதிர்ப்பைப் பெற்றது. 1169ஆம் ஆண்டிலிருந்து 1691ஆம் ஆண்டு வரை படிப்படியாக ஆங்கிலேயக் கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப் பட்ட அயர்லாந்து இராச்சியம், ஒன்றியச் சட்டம் 1800 வாயிலாக பாரிய பிரிட்டனின் இராச்சியத்துடன் இணைந்ததால், பாரிய பிரிட்டன் மற்றும் அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் உருவானது. இதுவும் ஐரிஷ் மக்களின் விருப்பமின்றியே நடைபெற்றவொரு ஒருங்கிணைப்பாகும். இதற்கு சற்று முன்னரே, 1798ஆம் ஆண்டில் ஐக்கிய ஐரிஷ் மக்களின் புரட்சி வெடித்துத் தோல்வியடைந்திருந்தது. (பார்க்க: ஐக்கிய ஐரிஷ் மக்கள் சமூகம்). நெப்போலிய மன்னனின் போர்த் தொடுப்புகளால் எழுந்த பாதுகாப்புக் காரணங்களை முன்னிறுத்தி, இந்த ஒருங்கிணைப்புச் செயல் விரைவு படுத்தப்பட்டது. 1922ஆம் ஆண்டு நிகழ்ந்த கடும் போரைத் தொடர்ந்து ஆங்கிலோ - ஐரிஷ் ஒப்பந்தம் ஏற்பட்டு, அயர்லாந்து தீவு ஐரிஷ் சுதந்திர நாடு மற்றும் வடக்கு அயர்லாந்து என்று பிரிவடைந்து, பின்னது ஐக்கிய இராச்சியத்துடன் தொடர்ந்தது. ஒப்பந்தத்தில் முடிவானபடி ஐரிஷ் மாகாணமான அல்ஸ்டரிலுள்ள ஒன்பது வட்டாரங்களில் ஆறு வட்டாரங்கள் ஐக்கிய இராச்சியத்திடன் தொடர்ந்தன. இங்கு வாழும் மக்கள் தொகையில் ஏறக்குறைய 40% உள்ளவர்கள் சுதந்திர அயர்லாந்துடன் ஒருங்கிணைய விரும்புகின்றனர். 1927ஆம் ஆண்டு அயர்லாந்தின் பெரும்பகுதியின் வெளியேற்றத்தைக் கருத்தில் கொண்டு, ஐக்கிய இராச்சியத்தின் பெயர் பாரிய பிரிட்டன் மற்றும் வடக்கு அயர்லாந்தின் ஐக்கிய இராச்சியம் என மாற்றப் பட்டது.

1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்
1897-ல் ஆங்கிலேயரின் ஆட்சிக்குட்பட்டிருந்த பகுதிகள்

தொழிற்துறையிலும், கப்பற்துறையிலும் 19ஆம் நூற்றாண்டின் ஆதிக்க சக்தியாகத் திகழ்ந்த ஐ.இ, மேற்கத்திய சிந்தனைகளான உடைமை, சுதந்திரம், முதலாளித்துவம் மற்றும் பாராளுமன்ற மக்களாட்சி அகியவற்றின் வளர்ச்சியில் பெரும் பங்காற்றியது. உலக இலக்கியம் மற்றும் அறிவியல் துறைகளிலும் பெரும் பங்காற்றியது. அதன் உச்ச நிலையில், பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் உலகின் நிலப்பரப்பில் நான்கில் ஒரு பங்கை உள்ளடக்கியிருந்தது. 20ஆம் நூற்றாண்டின் முதல் பாதியில், ஐக்கிய இராச்சியத்தின் ஆதிக்கம் இரு உலகப் போர்களால் வெகுவாகக் குறைந்ததைக் காணமுடிந்தது. 20ஆம் நூற்றாண்டின் இரண்டாம் பாதியிலோ, பிரிட்டிஷ் ஏகாதிபத்தியம் கலைக்கப் பட்டு, முற்றிலும் மறைந்தது. ஆனால் ஐ.இ தன்னை ஒரு நவீனமயமான, வளமையான நாடாக வளர்த்துக் கொண்டது.

தற்போது ஐ.இ ஐரோப்பிய கண்டத்துடனான ஒருங்கிணைப்பின் விகிதத்தைக் குறித்து சிந்தித்து வருகிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் அங்கம் வகித்திருந்தும், உள்நாட்டு அரசியல் காரணங்களுக்காகவும் தற்போது நிலவும் பொருளாதாரச் சூழலைக் குறித்த அரசின் கணிப்புகளாலும், ஐ.இ இன்னும் ஐரோவை அதன் நாணயமாக ஏற்றுக் கொள்ளவில்லை. ஐரோப்பிய ஒருங்கிணைப்புக்கு மக்கள் மத்தியில் தீவிர எதிர்ப்பு நிலவுகிறது. சில ஆங்கிலேயப் பொருளாதார வல்லுனர்களின் கோரிக்கை, ஐ.இ ஐரோவைப் பின்பற்றுவதற்கு முன்னர், ஐரோப்பிய மத்திய வங்கி இங்கிலாந்தின் வங்கியை முன்மாதிரியாகக் கொண்டு சீர்திருத்தம் பெறவேண்டும் என்பதே. ஜெர்மனி ஐரோவை ஏற்றுக் கொண்டபின் சந்தித்த பொருளாதார இக்கட்டுகளைக் கருத்தில் கொண்டால், மேற்கூறிய கோரிக்கை நிறைவேற்றப்படும் சாத்தியங்களிருப்பதாகத் தென்படலாம்.

அரசியல் சட்டச் சீர்திருத்தமும் தற்போதைய ஒரு நிகழ்வாகும். பிரபுக்களின் அவையில் சீர்திருத்தங்கள், கொட்லாந்து தனது ஸ்காட்டிஷ் பாராளுமன்றத்தை 1999ஆம் ஆண்டு தேர்வு செய்தது, அதே வருடம் அதிகாரப் பரவலாக்கங்கள் வேல்ஸிலும் வடக்கு அயர்லாந்திலும் நடைபெற்றது, ஆகியவை அண்மை கால நிகழ்வுகள். தடைகளற்ற சுதந்திரமான பின்புலத்தைக் கொண்டிருந்தும், அரசின் தகவல் ஆணையரின் 2004ஆம் வருடக் கூற்றுப் படி ஒரு பரவலான கண்காணிப்புடைய சமூகமாக ஐ.இ உருமாறும் வாய்ப்புள்ளது.

ஐ.இ காமன்வெல்த் நாடுகள் மற்றும் NATO ஆகியவற்றில் ஒரு அங்கமாகும். அது ஐக்கிய நாடுகள் பாதுகாப்புக் குழுவின் ஒரு நிரந்தர உறுப்பினர் ஆகவும் உள்ளது. அதனால் அதற்கு வெட்டு ஓட்டு அதிகாரமும் உண்டு. ஐ.இ, உலகிலுள்ள வெகு சில அணு ஆயுத சக்தியுடைய நாடுகளில் ஒன்றாகும்.

பார்க்கவும்: பிரிட்டிஷ் அரச பரம்பரை; பிரிட்டன் வரலாறு; இங்கிலாந்து வரலாறு; அயர்லாந்து வரலாறு; கொட்லாந்து வரலாறு; வேல்ஸ் வரலாறு; ஐ.இ வட்டார வரலாற்றுச் சொற்கள்

[தொகு] அரசியல்

ஐக்கிய இராச்சியம் ஒரு அரசியலமைப்புச் சட்ட முடியாட்சியாகும்(constitutional monarchy). அதை அரசாளும் அதிகாரம் பிரதமரின் தலைமையிலுள்ள அரசிடம் உள்ளது. பிரதமரையும் மற்ற அமைச்சர்களையும் கொண்டது அமைச்சரவை. மகுடாதிபதிக்கு ஆலோசனைகள் வழங்கும் ஆலோசனைக்குழுவில் (privy council) அமைச்சரவை ஒரு துணைக்குழுவாகும். அரசாளும் உரிமையைக் கொண்ட மகுடாதிபதி, நாட்டின் தலைவராகத் திகழ்கிறார். எனினும், நடைமுறையில் அவரது அரசு கீழவையான மக்களவைக்குக் (British House of Commons) கட்டுப்பட்டே செயல்பட இயலும். மக்களவையானது ஐக்கிய இராச்சியத்தின் மக்களால் நேரடியாகத் தேர்வு செய்யப் பட்ட ஒரே பாராளுமன்ற அவையாகும். மரபுவழிப் படி, அமைச்சர்கள் பாராளுமன்ற உறுப்பினர்களிலிருந்து (members of the Commons) தேர்வு செய்யப் படுகிறார்கள். வெகு சிலர் மேலவையான பிரபுக்களவையிலிருந்தும் (British House of Lords) நியமிக்கப் படுகிறார்கள். அமைச்சர்கள் ஆலோசனைக்குழுவுக்கும் சேர்த்தே நியமனம் செய்யப் படுகிறார்கள். இவர்களுக்கு முடிவெடுக்கும் அதிகாரமும் சட்டமியற்றும் அதிகாரமும் உண்டு. பொதுவாக, மக்களவையின் பெரும்பான்மைக் கட்சியின் தலைவரே பிரதமராகக் கண்டுகொள்ளப் பட்டு மன்னரால் (அரசியால்) அரசாங்கம் அமைக்கும்படி உத்தரவிடப்படுவார். இதற்கு அவருக்கு மக்களவையின் ஆதரவு இருப்பது அவசியம். தற்போதைய பிரதமர் பிரிட்டிஷ் உழைப்பாளர் கட்சியின் தலைவரான டோனி ப்ளேர் ஆவார். 1997ஆம் ஆண்டு முதல் பதவியிலிருக்கும் இவர், அண்மையில் தேர்தலில் வெற்றி பெற்று மூன்றாம் முறையாக பிரதமராகும் வாய்ப்பைப் பெற்றிருக்கிறார்.

ஐக்கிய இராச்சியத்தின் ஏகாதிபத்தியப் பின்புலத்தின் விளைவாக, பிரிட்டிஷ் அரசமைப்பு உலகெங்கும் பின்பற்றப் படுகிறது. பிரிட்டிஷ் பாணி பாராளுமன்றத்துவத்தைக் கடைபிடிக்கும் நாடுகள், வெஸ்ட்மின்ஸ்டர் அரசாட்சி முறையைப் பின்பற்றுவதாகக் கூறப்படுகின்றன.

தற்போதைய மகுடாதிபதி இராணி எலிசெபெத் II (Queen Elizebeth II) ஆவார். இவர் 1952ஆம் ஆண்டு அரியணை ஏற்று, 1953ஆம் ஆண்டு முடிசூட்டப்பட்டார். நவீன கால ஐக்கிய இராச்சியத்தில் மகுடாதிபதியின் பங்கு என்பது, பொதுவாகப் பெயரளவில்தான், எனினும் எப்பொழுதும் அவ்வாறல்ல. அவருக்கு அமைச்சரவையின் எல்லா ஆவணங்களுக்கும் அனுமதியுண்டு. வாரமொருமுறை பிரதமர் அவரைச் சந்தித்து அரசின் நிகழ்வுகள் குறித்து தெரியப்படுத்துவார். அரசுச் சட்ட ஆசிரியர் வால்டர் பேக்ஹாட் (Walter Bagehot), மகுடாதிபதிக்குக் கீழ்கண்ட மூன்று உரிமைகள் இருப்பதாகக் கூறினார்: கலந்தாலோசிக்கப்படும் உரிமை, அறிவுரைக்கும் உரிமை மற்றும் எச்சரிக்கும் உரிமை. இவ்வுரிமைகள் அரிய சந்தர்ப்பங்களிலேயே உபயோகிக்கப் பட்டாலும், தக்க தருணங்களில் இன்றியமையாதவையாக அமைந்துள்ளன—உதாரணம், "தொங்கு பாராளுமன்றம்" ஏற்பட்ட பொழுதெல்லாம். ஒவ்வொரு வருடமும், பொதுவாக நவம்பர் மாதத்தில், இராணி அவர்கள் பாராளுமன்றத்தைத் துவக்கி வைத்து, அரசின் அடுத்த வருடத்திற்கான செயல் திட்டங்கள் குறித்த சிறப்புரையை வழங்குவார்.

இராணி அவர்கள் பாராளுமன்றத்தின் இன்றியமையாத ஒரு அங்கத்தினராகக் கருதப் படுகிறார். பாராளுமன்றத்திற்கு, கூடும் அதிகாரத்தையும், சட்டங்களியற்றும் அதிகாரத்தையும் மேன்மைமிகு இராணி அவர்களே வழங்குவதாகக் கொள்ளப்படுகிறது. ஒரு பாராளுமன்ற சட்டவரைவு மேன்மைமிகு இராணி அவர்கள் கையொப்பமிடும் வரை சட்டமாக அங்கீகாரம் பெறாது. இத்தகைய இராச அங்கீகாரம் பாராளுமன்றத்தால் ஏற்றுக்கொள்ளப் பட்ட எந்த மசோதாவுக்கும் மறுக்கப் பட்டதில்லை ( ஒரே ஒரு முறை இராணி அன் (Queen Anne) 1708ஆம் ஆண்டில் அவ்வாறு செய்ததைத் தவிர). மேன்மைமிகு இராணி அவர்கள் செய்யும் இன்னொரு பணி, நாட்டிற்குப் பெருந் தொண்டாற்றியவர்களுக்குப் பட்டங்களும் பதக்கங்களும் வழங்கி கௌரவிப்பதாகும்.

மகுடாதிபதியே நாட்டின் தலைவராகவும் அரசு நிர்வாகத்தின் தலைவராகவும் திகழ்கிறார். பிரிட்டிஷ் அரசும் அதிகாரபூர்வமாக மேன்மைமிகு இராணியின் ஐக்கிய இராச்சியத்தின் அரசு என்றே அழைக்கப் படுகிறது. இராணியால் நியமிக்கப் பட்டதாகக் கருதப்படும் பிரதமரே, அரசாங்கத்தின் தலைவராவார். ஒப்பந்தங்களில் கையெழுத்திடுவது, போர் தொடுப்பது போன்ற எல்லா வெளியுறவுக் கொள்கைகளும், மேன்மைமிகு இராணி அவர்களின் பெயரிலேயே மேற்கொள்ளப் படுகின்றன. ஐக்கிய இராச்சியத்தில் மகுடாதிபதியே நீதியின் பிறப்பிடமாவார். அனைத்துக் குற்றப் பத்திரிக்கைகளும் மகுடாதிபதியின் பெயரிலேயே எழுதப் படுகின்றன.(அரசரானால் "ரெக்ஸ்" என்ற பெயரிலும், அரசியானால் "ரெசினா" என்ற பெயரிலும்). மேன்மைமிகு இராணியின் போர்ப்படை என்றழைக்கப்படும் பிரிட்டிஷ் போர்ப்படைக்கும் அவரே தலைமைத் தளபதியாவார்.

அண்மை காலத்திலேற்பட்ட இழுக்குகள் மற்றும் விவாதங்களையும் தாண்டி, மகுடாதிபதிக்கு மக்களிடையே வலுவான ஆதரவே இருந்து வந்துள்ளது. அரசியல் பின்புலமுள்ள சனாதிபதி முறையை விட, அரசியல் சார்பற்ற மகுடாதிபதியை (அவர் அத்தகுதியைப் பிறப்பால் அடைந்தவர் என்றாலும்) நாட்டின் தலைவராகக் கொள்வதே மேலானதாகக் கருதப் படுகிறது.

பிரிட்டிஷ் மகுடாதிபதி மற்றொரு 15 சுதந்திர நாடுகளுக்கும் தலைமை வகிக்கிறார். இந்நாடுகள் காமன்வெல்த் ரெல்ம்ஸ் என்று வழங்கப்படுகின்றன. ஐக்கிய இராச்சியத்திற்கு இந்நாடுகளின் மீது அரசியல் ரீதியாகவோ அல்லது ஆட்சி ரீதியாகவோ எந்தவொரு அதிகாரமும் இல்லையென்றாலும், நெடுங்காலத்திய, நெருக்கமான உறவுமுறைகளின் காரணமாக ஒரு செல்வாக்குண்டு. சில காமன்வெல்த் ரெல்ம்ஸ் நாடுகளுக்கு பிரிட்டிஷ் ஆலோசனைக்குழுவே உச்ச நீதிமன்றமாக விளங்குகிறது.

ஒப்பந்தச் சட்டத்தின்படி (Act of Settlement 1701) மகுடாதிபதி ஒரு ரோமன் கத்தோலிக்கரை மணந்து கொள்வது தடை செய்யப்பட்டுள்ளது.

மக்களவையும் பிரபுக்களவையும் இலண்டன் மாநகரம் வெஸ்ட்மின்ஸ்டரில் தேம்ஸ் நதிக் கரையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில்தான் உள்ளன.
மக்களவையும் பிரபுக்களவையும் இலண்டன் மாநகரம் வெஸ்ட்மின்ஸ்டரில் தேம்ஸ் நதிக் கரையிலுள்ள வெஸ்ட்மின்ஸ்டர் அரண்மனையில்தான் உள்ளன.

பாராளுமன்றம், மக்களால் தேர்ந்தெடுக்கப் பட்ட 646 உறுப்பினர்களைக் கொண்ட மக்களவை, மற்றும் நியமன உறுப்பினர்களையே கொண்ட பிரபுக்களவை, ஆகிய இரு அவைகளையும் உள்ளடக்கியதாகும். மக்களவை பிரபுக்களவையை விட கூடுதல் அதிகாரத்தை உடையதாகும். அதன் 646 உறுப்பினர்களும், ஐக்கிய இராச்சியத்தின் நான்கு பாகங்களிலிருந்தும், மக்களால் நேரடியாக, தொகுதி வாரியாகத் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களாவர். பிரபுக்களவை தற்போது 706 உறுப்பினர்களைக் கொண்டுள்ளது. இவர்களில் எவரும் தேர்ந்தெடுக்கப் பட்டவர்களல்ல. இவர்கள் அனைவருமே வம்சாவளியாகவோ அல்லது கௌரவிக்கப் பட்டோ உயர்குடிகளானவர்கள் (nobility), மற்றும் இங்கிலாந்து தேவாலயத்தின் மதகுருமார்கள், ஆகியவர்களே. பண்டைய நாட்களில், பிரபுக்களவை உயர்குடிகளையே உறுப்பினர்களாகக் கொண்டிருந்தது. இவர்களுக்கு பிறப்புரிமை கருதி உறுப்பினர் பதவி வழங்கப்பட்டன. எனினும் இன்றைக்கு இவ்வழக்கம் நிறுத்தப்பட்டு விட்டது. மேலும், பிரபுக்களவைச் சட்டம் 1999, வம்சாவளி உறுப்பினர்களின் தொகையை வெகுவாகக் குறைத்தது. 706 உறுப்பினர்களில் 92 பேர்களுக்கே பிறப்புரிமையால் பதவி பெறும் வாய்ப்புண்டு, அதுவும் அவர்கள் மற்ற உயர்குடிகளால் தேர்ந்தெடுக்கப் படவேண்டும் அல்லது Earl Marshal, Lord Great Chamberlain போன்ற இராச்சிய பதவிகளை உடையவர்களாக இருக்க வேண்டும். பிரபுக்களவை சீர்திருத்தங்கள் முதலில் எல்லா வம்சாவளி உறுப்பினர்களின் வோட்டுரிமையையும் பறிப்பதற்கு முயற்சி செய்தது. பிறகு சமரசம் செய்து கொள்ளப்பட்டு, அவர்கள் படிப்படியாக உரிமைகளை இழக்கும்படி மாற்றியமைக்கப் பட்டது.

ஐக்கிய இராச்சியம் ஒரு மத்தியமயமாக்கப்பட்ட, அல்லது ஒருமுகமான (unitary) அரசு என்றும், வெஸ்ட்மின்ஸ்டரிலுள்ள பாராளுமன்றமே ஐக்கிய இராச்சியத்தின் ஒட்டுமொத்தமான அரசதிகாரத்தை உள்ளடக்கிக் கொண்டுள்ளது என்றும், விவரிக்கப் படுகிறது. பத்தொன்பதாம் நூற்றாண்டின் பிற்பகுதி முழுவதிலும் ஐக்கிய இராச்சியம் அயர்லாந்துக்கு சுயாட்சி வழங்குவது குறித்து விவாதித்தது. 1920ஆம் ஆண்டு வடக்கு அயர்லாந்திற்கு தன்னாட்சி வழங்கப்பட்டது. ஆனால் அது 1972ஆம் ஆண்டு நடந்த பலத்த உள்நாட்டுக் கலவரத்துக்குப் பிறகு ரத்து செய்யப் பட்டது. 1990களில் தன்னாட்சி மறுபிரவேசம் செய்தது, கொட்லாந்து, வேல்ஸ் மற்றும் வடக்கு அயர்லாந்தில் சுயாட்சிப் பாராளுமன்றங்கள் உருவான பொழுது. 1999இல் ஸ்காட்டிஷ் பாராளுமன்றமும் வேல்ஸ் தேசிய அவையும் நிறுவப் பட்டன, முன்னது சட்டமியற்றும் அதிகாரமும் கொண்டதாக. இப்பொழுது கல்வி வட்டாரங்களிலும் மக்கள் மத்தியிலும் விவாதிக்கப் படுவது என்னவென்றால், கார்னிஷ் மக்களும் அவர்கள் வாழும் பகுதிகளும் ஐக்கிய இராச்சியத்தின் தனியொரு பகுதியாகவும் நாடாகவும் கருத வாய்ப்புள்ளதா என்பதே. கார்ன்வாலில் ஒரு தேசிய இயக்கம் ஒரளவுக்கு செயல்பட்டு வருகிறது. தன்னாட்சி கோரி ஒரு மனு சமர்பிக்கப் பட்டு, அதற்கு 50000 ஆதரவுக் கையொப்பங்களும் சேகரிக்கப் பட்டன. எனினும், ஐக்கிய இராச்சிய அரசுக்கு, கார்ன்வாலுக்கு எவ்வகையான தன்னாட்சியையும் வழங்கும் எண்ணமில்லை. மாகாண அவைகள் வடக்கில் முயற்சி செய்யப்பட்டு, மக்கள் ஆதரவின்றி கைவிடப்பட்டன. எனினும், துணைப் பிரதமரின் அலுவலகம் கூறுவது என்னவென்றால், "அரசு தொடர்ந்து அதிகாரத்தைப் பரவலாக்கும் முயற்சிகளை மேற்கொண்டு, அதன் மூலம் பிராந்திய அளவில் செயல்பாடுகளை செம்மைப் படுத்தி, எல்லா ஆங்கிலப் பிரதேசங்களையும் வலிமையாக்கும் கொள்கையில் தெளிவாகவுள்ளது" என்பதே. நேரடியாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, அதிகாரப் பகிர்வுடைய ஒரு அவையின் நிர்மாணிப்பு என்று வடக்கு அயர்லாந்தின் சமீபத்திய சுயாட்சி முயற்சியும் தூய வெள்ளி ஒப்பந்தத்தைத் தொடர்ந்து ஏற்பட்டது, ஆனால் அது தற்போது நிறுத்தி வைக்கப் பட்டுள்ளது. பன்முக (federal) அரசமைப்பைப் போலல்லாது, தன்னாட்சிப் பாராளுமன்றங்களுக்கு அரசுச் சட்டத்தில் எந்தவொரு உரிமையோ, இடமோ கிடையாது. அவை இலண்டன் பாரளுமன்றத்தால் உருவாக்கப் பட்டு, 1972இல் வடக்கு அயர்லாந்தில் நிகழ்ந்தது போல், இலண்டன் பாரளுமன்றத்தாலேயே கலைக்கப் பட்டும் விடலாம்.

[தொகு] பிரிவுகளும் துணைப்பிரிவுகளும்

ஐக்கிய இராச்சியம் நான்கு பிரிவுகளைக் கொண்டது:


 
ஐக்கிய இராச்சியத்தின் அங்கங்கள்
Flag of the United Kingdom
Flag of England இங்கிலாந்து | Flag Scotland ஸ்காட்லாந்து | Unofficial flag of Northern Ireland வட அயர்லாந்து | Flag of Wales வேல்ஸ்

ஐக்கிய இராச்சியத்தின் பிரிவுகள் கீழ்க்கண்டவாறு துணைப்பிரிவுகளைக் கொண்டுள்ளன: