துடுப்பாட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(கிரிக்கெட் இலிருந்து வழிமாற்றப்பட்டது)
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
துடுப்பாட்டம்/கிரிக்கெட்

துடுப்பாட்டம், (மட்டைப்பந்து, Cricket, கிரிக்கெட்) 19ஆம் நூற்றாண்டில் இங்கிலாந்தில் அறிமுகப்படுத்தப்பட்ட விளையாட்டு ஆகும். இது முறையே 11 வீரர்கள் கொண்ட இரு அணிகளுக்கிடையே ஆடப்படும் ஆட்டமாகும். தற்பொழுது, இந்த ஆட்டம் பொதுநலவாய நாடுகளில் பரவலாக ஆடப்பட்டு வருகிறது. இந்தியா, பாகிஸ்தான், இலங்கை போன்ற நாடுகளில் மிகப் பிரபலமான விளையாட்டு இது.

பொருளடக்கம்

ஆட்டம் பற்றிய விளக்கம்[தொகு]

இலக்குமுளைகள் (ஸ்டம்புகள்)

ஆடுகளம்[தொகு]

நீள் வட்டம் அல்லது வட்ட வடிவில் அமைந்த கிரிக்கெட் மைதானத்தின் நடுவில் சுமார் 20 \times 3 மீட்டர் நீள அகலத்தில் பிட்ச் எனப்படும் பகுதி அமைக்கப்பட்டிருக்கும். இப்பகுதியின் நிலம் பதப்படுத்தப்பட்டும் புற்கள் வெட்டப்பட்டும் இருக்கும். இந்தப் பிட்சின் இரு முனைகளில் தலா மூன்று இலக்குமுளைகள் நடப்பட்டிருக்கும்.

ஆட்டம்[தொகு]

முதலில் மட்டை பிடிக்கும் அணியினருள் இருவர் பிட்சின் இரு முனைகளிலும் நின்று கொள்வர். பந்து வீசும் அணியினர் பந்தினை தண்டுகள் மீது அடித்து வீழ்த்த முயற்சி செய்வர். தண்டுகளின் முன் நிற்கும் மட்டை பிடிப்பவர் பந்து தண்டின் மேல் படாமல் காக்க வேண்டும். அத்துடன் பந்தை மட்டையால் மைதானத்தில் அடித்துவிட்டு பிட்சின் ஓரு முனையிலிருந்து மறு முனைக்கு ஓடலாம். இவ்வாறு எத்தனை முறை மட்டை வீசும் அணியினர் ஓடுகிறார்களோ அத்தனை ஓட்டங்கள் எனப்படும் புள்ளிகள் வழங்கப்படும். மேலும், அடிக்கப்படும் பந்து மைதான எல்லையைத் தாண்டிவிட்டால் மட்டை பிடிக்கும் அணியினருக்கு கூடுதல் ஓட்டங்கள் வழங்கப்படும். பந்து தண்டு மீது பட்டுவிட்டாலோ அடிக்கப்படும் பந்து தரையில் படாமல் நேராக பந்து வீசும் அணியினருள் ஒருவரின் கைகளில் அகப்பட்டுக்கொண்டாலோ மட்டை பிடிப்பவர் விலகிக்கொள்ள வேண்டும். மட்டை வீசும் அணியின் அடுத்த ஆட்டக்காரர் வந்து ஆட்டத்தைத் தொடர்வார். இவ்வாறு மட்டை பிடிக்கும் அணியின் பத்து ஆட்டக்காரர்களை பந்து வீசுபவர் வீழ்த்த வேண்டும். மட்டையாளரை வீழ்த்துவதற்கு முற்கூறியன தவிர மேலும் சில வழிகள் உள்ளன.

ஆட்டத்தின் முதல் பகுதியில் பந்து வீசிய அணி இரண்டாம் பகுதியில் மட்டை பிடிக்கும். ஆட்ட இறுதியில் அதிக ஓட்டங்கள் குவித்த அணி வெற்றி பெற்ற அணியாக அறிவிக்கப்படும்.

ஆட்ட வகைகள்[தொகு]

டெஸ்ட் போட்டிகள்[தொகு]

இவ்வகை போட்டிகளே துடுப்பாட்டத்தின் பாரம்பரிய ஆட்டமாகும். ஒரு டெஸ்ட் போட்டி ஐந்து நாட்களுக்கு தொடர்ந்து நடக்கும். ஒவ்வொரு அணியும் இரு இன்னிங்ஸ் விளையாட வேண்டும். இரு இன்னிங்ஸிலும் அதிக ஓட்டங்கள் எடுத்த அணி வென்றதாக கருதப்படும்.

ஒரு நாள் போட்டிகள்[தொகு]

இவ்வகை போட்டிகள் 1970களில் அறிமுகப் படுத்தப்பட்டது. இவ்வகைப் போட்டியில் இரு அணிகளும் ஐம்பது ஓவர்களுக்கு மிகாமல் ஒரு இன்னிங்ஸ் ஆட வேண்டும். அதிக ரன் எடுத்த அணி வெற்றி பெறும். நான்கு வருடங்களுக்கு ஒருமுறை நடக்கும் உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளில் இந்த ஆட்ட வகையே கடைபிடிக்கப்படுகிறது.

இருபது 20 போட்டிகள்[தொகு]

இருபது20 ஒரு வகை துடுப்பாட்டப் போட்டி வகையாகும். இது இங்கிலாந்து வேல்சு துடுப்பாட்ட வாரியத்தினால் கௌண்டிகளுக்கிடையே 2003 ஆம் ஆண்டு நடத்தப்பட்ட போட்டிகளுக்காக முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இருபது20 துடுப்பாட்டப் போட்டியில் இரண்டு அணிகள் ஒவ்வொரு சுற்றைக் கொண்டிருப்பதோடு அணிக்கு உச்ச வரம்பாக 20 பந்துப் பரிமாற்றங்கள் மட்டையாட வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு சுற்றும் 75 நிமிடங்கள் நீடிப்பதொடு முழு இருபது20 துடுப்பாட்டப் போட்டி 3 மணி 30 நிமிடத்த்தில் நிறைவடையும். இருபது20 போடிகளின் நேர அளவானது ஏனைய பிரபல விளையாட்டுக்களின் நேர அளவிற்க்கு அண்மித்தாக உள்ளது. அரங்கில் உள்ள பார்வையாளருக்கும் தொலைக்காட்சி பார்வையாளருக்கும் விருவிருப்பான பொடியை வழங்கும் வகையில் இருபது20 போட்டிகள் வடிவமைக்கப்பட்டுள்ளன. இருபது20 போட்டிகள் அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து உலகம் முழுவதும் அது அரவியுள்ளது. இன்று துடுப்பாட்ட சுற்றுப்பயணங்களின் போது குறைந்தது ஒரு இருபது20 போட்டியாவது விளையாடப்படுகிறது.

துடுப்பாட்டம் விளையாடும் நாடுகள்[தொகு]

உலகில் மட்டைப்பந்தின் பரவல். ஆரஞ்சு நிறத்தில் உள்ள நாடுகள் ஐந்து நாள் போட்டி விளையாட தகுதி பெற்றவை. பச்சை நிறத்தில் உள்ளவை ஐந்து நாள் போட்டி விளையாடாத மற்ற முக்கிய ஐ.சி.சி உறுப்பு நாடுகள். ஊதா நிறத்தில் உள்ளவை மற்ற ஐ.சி.சி உறுப்பு நாடுகள்

ஐந்து நாள் போட்டிகள் விளையாடத் தகுதி பெற்ற நாடுகள் பின்வருவன

உலகக் கோப்பை வென்ற அணிகள்[தொகு]

  • மேற்கிந்திய தீவுகள் (1975, 1979)
  • இந்தியா (1983,2011)
  • ஆஸ்திரேலியா (1987, 1999, 2003,2007)
  • பாகிஸ்தான் (1992)
  • இலங்கை (1996)

பன்னாட்டு இருபது20 அணிகள்[தொகு]

ஒவ்வொரு நாடும் பன்னாட்டுப் போட்டியொன்றில் முதலில் பங்கெடுத்த நாள் அடைப்புக் குறிக்குள் காட்டப்பட்டுள்ளது.

  1. Flag of Australia.svg ஆஸ்திரேலியா (17 பிப்ரவரி, 2005)
  2. Flag of New Zealand.svg நியூசிலாந்து (17 பிப்ரவரி, 2005)
  3. Flag of England.svg இங்கிலாந்து (13 சூன், 2005)
  4. Flag of South Africa.svg தென்னாப்பிரிக்கா (21 அக்டோபர், 2005)
  5. WestIndiesCricketFlagPre1999.svg மேற்கிந்தியத் தீவுகள் (16 பிப்ரவரி, 2006)
  6. Flag of Sri Lanka.svg இலங்கை (15 சூன், 2006)
  7. Flag of Pakistan.svg பாக்கித்தான் (28 ஆகத்து, 2006)
  8. Flag of Bangladesh.svg வங்காளதேசம் (28 நவம்பர், 2006)
  9. Flag of Zimbabwe.svg சிம்பாப்வே (28 நவம்பர், 2006)
  10. Flag of India.svg இந்தியா (1 திசம்பர், 2006)
  11. Flag of Kenya.svg கென்யா (1 செப்டம்பர், 2007)
  12. Flag of Scotland.svg இசுக்காட்லாந்து (12 செப்டம்பர், 2007)
  13. Flag of the Netherlands.svg நெதர்லாந்து (2 ஆகத்து, 2008)
  14.  அயர்லாந்து (2 ஆகத்து, 2008)
  15. Flag of Canada.svg கனடா (2 ஆகத்து, 2008)
  16. Flag of Bermuda.svg பெர்முடா (3 ஆகத்து, 2008)
  17. Flag of Afghanistan.svg [[ஆப்கானிஸ்தான் {{{altlink}}}|ஆப்கானிஸ்தான்]] (2 பிப்ரவரி, 2010)

ப.து.அ உலக இருபது20[தொகு]

பதுஅ உலக இருபது20 போட்டிகள் இரண்டாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தத் திட்டமிடப்பட்டுள்ளது.

துடுப்பாட்டத்தின் சமூக தாக்கங்கள்[தொகு]

துடுப்பாட்டம் ஐக்கிய இராச்சிய மேல்வர்க்கத்தில் தோன்றிய ஒரு பொழுது போக்கு விளையாட்டு. இவ்விளையாட்டை அங்கு "gentlemen's game" (en:Gentleman) என்று அழைப்பது இங்கு குறிப்பிடத்தக்கது. துடுப்பாட்டம் இந்தியா இலங்கை ஐக்கிய இராச்சியத்தின் காலனிகளாக இருந்த போது அங்கே பரவியது. துடுப்பாட்டம் பிரபலமான பின்பு பல மரபு வழி விளையாட்டுக்கள் மறைந்து போக வழிக்கோலியது.

மேலும் காண்க[தொகு]

மேற்கோள்கள்[தொகு]

  1. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/7009035.stm
  2. http://news.bbc.co.uk/sport1/hi/cricket/8110649.stm

வெளி இணைப்பு[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=துடுப்பாட்டம்&oldid=1439653" இருந்து மீள்விக்கப்பட்டது