பிரித்தானியத் தீவுகள்
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| பிரித்தானியத் தீவுகள் British Isles |
|
|---|---|
ஐரோப்பாவின் பெருந்தரையுடன் பிரித்தானிய்த் தீவுகள் ஒப்பீடு |
|
| புவியியல் | |
| அமைவு | மேற்கு ஐரோப்பா |
| தீவுகளின் எண்ணிக்கை | 6,000+ |
| முக்கிய தீவுகள் | பெரிய பிரித்தானியா மற்றும் அயர்லாந்து |
| பரப்பளவு | 315,134 கிமீ²
121,673 சதுர மைல் |
| உயர் புள்ளி | பென் நெவிஸ் (1,344 மீ (4,409 அடி)) |
| ஆட்சி | |
| பெரிய நகரம் | புனித பீட்டர் துறை |
| பெரிய நகரம் | டக்ளஸ் |
| பெரிய நகரம் | டப்ளின் |
| பெரிய நகரம் | புனித ஹேலியர் |
| பெரிய நகரம் | லண்டன் |
| இனம் | |
| மக்கள் தொகை | ~65 மில்லியன் |
| ஆதி குடிகள் | பிரித்தானியர், ஆங்கிலேயர், ஐரியர், ஸ்கொட்டியர், அல்ஸ்டர்-ஸ்கொட்டியர், வேல்சியர், கோர்னியர்,[1] கால்வாய் தீவார், மான்க்ஸ் |
பிரித்தானியத் தீவுகள் (British Isles) எனப்படுபவை ஐரோப்பாக் கண்டத்தின் வடமேற்குக் கரையில் பெரிய பிரித்தானியா, அயர்லாந்து தீவு, மற்றும் சிறிய தீவுகளை உள்ளடக்கிய தீவுகள் ஆகும். பிரித்தானியத் தீவுகள் என்னும் பெயருடன் அயர்லாந்தை இணைப்பதற்குப் பெரும்பாலான ஐரிய மக்கள் எத்ர்ப்புத் தெரிவித்து வருகின்றனர்[2]. அயர்லாந்து அரசும் இச்சொல்லை அதிகாரபூர்வமாகப் பயன்படுத்துவதில்லை[3].
இத்தீவுகளில் ஐக்கிய இராச்சியம், அயர்லாந்துக் குடியரசு என இரண்டு தனியாட்சியுடைய நாடுகள் உள்ளன. அத்துடன் இத்தீவுகளில் முடியாட்சிக்குட்பட்ட மாண் தீவு, கால்வாய் தீவுகள், ஆகியன உள்ளன.