பிபிசி
பிபிசி ஐக்கிய இராச்சியத்தைச் சேர்ந்த, பொது நிதியில் இயங்கும் ஊடக நிறுவனமாகும். பிபிசி என்பது பிரித்தானிய ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் என்னும் பொருள்படும் British Broadcasting Corporation என்னும் ஆங்கிலப் பெயரின் சுருக்கமாகும். இந்நிறுவனம், 1927ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது. பிபிசி தொலைக்காட்சி, வானொலி மற்றும் இணையத்தள சேவைகளை வழங்குகிறது.
உலக மொழிகள் பலவற்றிலும் நிகழ்ச்சிகளை வழங்கும் பிபிசி வானொலி பிபிசி தமிழோசை என்ற பெயரில் நாள்தோறும் அரை மணி நேரம் தமிழ் நிகழ்ச்சிகளையும் வழங்கி வருகிறது. தமிழோசை நிகழ்ச்சிகளை பெப்ரவரி 2002 இல் இருந்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் நேரடி ஒலிப்பரப்புச் செய்து வந்தது எனினும் ஈழப்போர்ச் செய்திகளை பிபிசி ஒலிபரப்பிய வேளைகளில் அதனைக் குழப்பியதால் பிபிசி 9 பெப்ரவரி 2009 முதல் இலங்கை ஒலிபரப்பு நிலையத்தினூடான ஒலிபரப்பை இடைநிறுத்திக் கொண்டது[1].
[தொகு] உசாத்துணைகள்
[தொகு] வெளி இணைப்புகள்
| விக்கி ஊடக நடுவத்தில் பிபிசி தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |