மான்செஸ்டர்
| மான்செஸ்டர் நகரம் City of Manchester |
|
|---|---|
| மான்செஸ்டர் நகர மையம் | |
| சிறப்புப்பெயர்: "வடக்கின் தலைநகரம்", "கொட்டனோபோலிஸ்", "மாட்செஸ்டர்", "ஐக்கிய இராச்சியத்தின் இரண்டாவது நகரம்" | |
| குறிக்கோளுரை: "Concilio Et Labore" "Wisdom and effort" | |
| மான்செஸ்டர் இங்கிலாந்துக்குள் காட்டப்பட்டுள்ளது | |
| அமைவு: | |
| நாடு | ஐக்கிய இராச்சியம் |
| அரசமைப்பு | இங்கிலாந்து |
| பிரிவு | வட மேற்கு இங்கிலாந்து |
| கவுண்டி | பாரிய மான்செஸ்டர் |
| தலைமைப் பீடம் | மான்செஸ்டர் நகர மையம் |
| அமைக்கப்பட்டது | 1ம் நூற்றாண்டு |
| நகர சட்டம் | 1301 |
| நகர அந்தஸ்து | 1853 |
| அரசு | |
| - வகை | பரோ நகராட்சி, நகரம் |
| - ஆட்சியாளர் | மான்செஸ்டர் நகர கவுன்சில் |
| - நகர தந்தை | கிளின் எவான்ஸ் |
| பரப்பளவு | |
| - நகரம் | 44.7 ச. மைல் (115.65 கிமீ²) |
| ஏற்றம் | 78 மீ (256 அடி) |
| மக்கள் தொகை | |
| - அடர்த்தி | 3,815/கிமீ² (9,880.8/ச. மைல்) |
| - புறநகர் | 22,40,230 |
| - மாநகரம் | 42,09,132 |
| - கவுண்டி | 25,47,700 |
| - கவுண்டி அடர்த்தி | 1,997/கிமீ² (5,172.2/ச. மைல்) |
| - மக்கள் (2001) |
81.1 |
| நேர வலயம் | கிரீனிச் பொது நேரம் (ஒ.ச.நே.+0) |
| தபால் சுட்டெண் | M |
| தொலைபேசி குறியீடு(கள்) | 0161 |
| ISO 3166-2 | GB-MAN |
| இணையத்தளம்: www.manchester.gov.uk | |
மான்செஸ்டர் (Manchester) என்பது இங்கிலாந்து, பாரிய மான்செஸ்டரின் ஒரு நகரமும் பரோ நகராட்சியும் (நகராட்சி மாவட்டம்) ஆகும். மான்செஸ்டர் நகரத்தில் 452,000 பேர் வசிக்கின்றனர்[1].
இங்கிலாந்தின் முக்கிய நகராங்களில் ஒன்றாக விளங்கும் மான்செஸ்டர் வாடக்கு இங்கிலாந்தின் தலைநகர் எனப் பொதுவாக வர்ணிக்கப்படுகிறது[2]. இன்றைய மான்செஸ்டர் கலை, கலாச்சாரம், செய்தி ஊடகம், உயர் கல்வி மற்றும் வர்த்தகாம் ஆகியவற்றுக்கு ஒரு மையப்புள்ளியாக விளங்குகிறது. 2006 இல் வெளியிடப்பட்ட வர்த்தக முன்னோடிகளின் அறிக்கையின் படி ஐக்கிய இராச்சியத்தில் வர்த்தக நிறுவனம் ஒன்றை ஆரம்பிப்பதற்கு மான்செஸ்டர் நகரம் முன்னணீ நிலையில் உள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது[3]. பொருளாதாரரீதியில் இது வேகமாக வளரும் ஒரு நகரம் ஆகும்[4]. 2002 ஆம் ஆண்டில் இங்கு பொதுநலவாய விளையாட்டுக்கள் இடம்பெற்றன. மான்செஸ்டர் யுனைற்றட் காற்பந்தாட்ட அமைப்பு, மற்றும் மான்செஸ்டர் நகர காற்பந்தாட்ட அமைப்பு ஆகியன இங்குள்ள உலகப் புகழ்பெற்ற விளையாட்டு அமைப்புகளாகும்.
மேற்கோள்கள் [தொகு]
- ↑ "ஐக்கிய இராச்சியத்தின் 2006 மக்கள் தொகைக் மதிப்பீடு" (XLS). Office for National Statistics (2007). பார்த்த நாள் 2007-06-29.
- ↑ "மான்செஸ்டர் "வடக்கின் டைனமைட் தலைநகரம்"". இங்கிலாந்தின் வட மேற்கு (2007). பார்த்த நாள் 2007-09-11.
- ↑ "பிரித்தானியாவின் சிறந்த நகரங்கள் 2005–2006" (PDF). OMIS ஆய்வு (2006). பார்த்த நாள் 2007-09-08.
- ↑ "மான்செஸ்டர் – நகரத்தின் நிலை". மான்செஸ்டர் நகர கவுன்சில் (2007). பார்த்த நாள் 2007-09-11.
வெளி இணைப்புகள் [தொகு]
