ஏப்ரல் 12
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | ||||
| MMXIII | ||||||
ஏப்ரல் 12 கிரிகோரியன் ஆண்டின் 102ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 103ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 263 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1633 - ரோமன் கத்தோலிக்க மத பீடத்தினால் கலிலியோ கலிலிக்கு எதிரான விசாரணைகள் ஆரம்பமாயின.
- 1832 - இலங்கையில் கட்டாய அரச சேவையை ஒழிக்கும் ஆணையைபிரித்தானிய அரசர் பிறப்பித்தார்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்புப் படைகள் ஐக்கிய அமெரிக்காவின் படைகளை தென் கரோலினாவில் தாக்கியதுடன் போர் வெடித்தது.
- 1864 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசியில் சரணடைந்த அனைத்து ஆபிரிக்க அமெரிக்க படையினர்களும் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பு படைகளினால் படுகொலை செய்யப்பட்டனர்.
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அலபாமாவில் மொபைல் என்ற நகரம் கூட்டணி இராணுவத்திடம் வீழ்ந்தது.
- 1927 - ஷங்காயில் சீனக் கம்யூனிஸ்ட் கட்சியின் உறுப்பினர்களுக்கு மரண தண்டனை விதிக்கப்பட்டது.
- 1955 - ஜோனாஸ் சால்க் என்பவரினால் கண்டுபிடிக்கப்பட்ட போலியோ நோய்த் தடுப்பூசி பாதுகாப்பானதென அறிவிக்கப்பட்டது.
- 1961 - சோவியத் ஒன்றியத்தின் யூரி ககாரின் விண்வெளிக்குச் சென்ற முதல் மனிதரானார்.
- 1980 - லைபீரியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியை அடுத்து சாமுவேல் டோ நாட்டின் அதிகாரத்தைக் கைப்பற்றினார். 130 ஆண்டுகால மக்களாட்சி அமைப்பு முறை முடிவுக்கு வந்தது.
- 1981 - முதலாவது மீள் விண்ணோடம் கொலம்பியா விண்ணோடம் விண்வெளியை நோக்கி ஏவப்பட்டது.
- 1983 - பிரித்தானியத் திரைப்படமான காந்தி எட்டு ஒஸ்கார் விருதுகளை வென்றது.
- 1996 - யாஹூ! இனது முதற் பொதுப் பங்கு வழங்கல்.
- 2007 - இந்தியா அக்னி-III என்ற தரையில் இருந்து தரைக்கு ஏவப்படும் நடுத்தர ஏவுகணையை 3000 கிமீ தூரத்துக்கு வெற்றிகரமாகப் பரிசோதித்தது.
பிறப்புகள் [தொகு]
- கிமு 599 - மகாவீர், ஜெய்னிச மதத்தை உருவாக்கியவர். (இ. கிமு 527)
- 1884 - ஓட்டோ மெயெரொஃப், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்றவர் (இ. 1951)
- 1907 - வி. நாகையா, திரைப்பட நடிகர், இயக்குனர்
- 1932 - லக்ஸ்மன் கதிர்காமர், இலங்கை அரசியல்வாதி (இ. 2005)
இறப்புகள் [தொகு]
- 1945 - பிராங்க்ளின் ரூஸ்வெல்ட், ஐக்கிய அமெரிக்காவின் 32 ஆவது அதிபர் (பி. 1882)
- 1971 - ஈகர் தம், நோபல் பரிசு பெற்ற உருசியர் (பி. 1895)
- 1997 - ஜார்ஜ் வால்ட், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர் (பி. 1903)
- 2006 - ராஜ்குமார், கன்னட நடிகர் (பி. 1929)