அக்டோபர் 9
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 9 கிரிகோரியன் ஆண்டின் 282வது நாளாகும். நெட்டாண்டுகளில் 283வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 83 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1003 - லெயிஃப் எரிக்சன் கனடாவில் லான்ஸ் ஒக்ஸ் மெடோஸ் என்ற இடத்தில் தரையிறங்கி, அமெரிக்காவில் காலடி வைத்த முதலாவது ஐரோப்பியர் ஆனார்.
- 1582 - கிரெகொரியின் நாட்காட்டி அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து இத்தாலி, போலந்து, போர்த்துக்கல், ஸ்பெயின் ஆகிய நாடுகளில் புதிய நாட்காட்டியில் இவ்வாண்டின் இந்நாள் இடம்பெறவில்லை.
- 1604 - சுப்பர்நோவா 1604 பால் வெளியில் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1760 - ஏழாண்டுப் போர்: ரஷ்யா பேர்லின் நரைப் பிடித்தது.
- 1771 - டச்சு சரக்குக் கப்பல் பின்லாந்துக் கரையில் மூழ்கியது.
- 1799 - லூட்டின் என்ற கப்பல் நெதர்லாந்தில் 240 பேருடனும் £1,200,000 பெருமதியான பொருட்களுடனும் மூழ்கியது.
- 1804 - டாஸ்மானியா தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
- 1806 - பிரஷ்யா பிரான்ஸ் மீது போர் தொடுத்தது.
- 1820 - கயாக்கில் ஸ்பெயினிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1831 - கிரேக்கத் தலைவர் இயோனிஸ் கப்பொடீஸ்ட்றியா படுகொலை செய்யப்பட்டார்.
- 1835 - கொழும்பு ரோயல் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டது.
- 1854 - ரஷ்யாவில் செவஸ்தபோல் மீதான தாக்குதலை பிரித்தானியா, பிரான்ஸ், மற்றும் துருக்கியப் படைகாள் ஆரம்பித்தன.
- 1871 - மூன்று நாட்களுக்கு முன்னர் சிக்காகோவில் பரவிய பெரும் தீ அணைக்கப்பட்டது. நூற்றுக்கணக்கானோர் கொல்லப்பட்டனர்.
- 1888 - வாஷிங்டன் நினைவுச் சின்னம், அக்காலத்தில் உலகின் உயரமான கட்டிடம், வாஷிங்டன் டிசியில் பொதுமக்கள் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
- 1910 - மாறுவேடத்தில் உலகப் பயணம் மேற்கொண்ட பின்னர் வ. வே. சு. ஐயர் புதுச்சேரி திரும்பினார்.
- 1914 - முதலாம் உலகப் போர்: பெல்ஜியத்தின் ஆண்ட்வேர்ப் நகரம் ஜெர்மனியிடம் வீழ்ந்தது.
- 1934 - யூகோஸ்லாவியாவின் மன்னன் முதலாம் அலெக்சாண்டர் கொல்லப்பட்டான்.
- 1941 - பனாமாவில் இடம்பெற்ற புரட்சியின் பின்னர் ரிக்கார்டோ டெ லா கார்டியா அதிபரானார்.
- 1962 - உகாண்டா பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1963 - வடகிழக்கு இத்தாலியில் இடம்பெற்ற நிலச்சரிவில் 2,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1967 - சே குவேரா பொலிவியாவில் கைது செய்யப்பட்ட அடுத்த நாள் புரட்சியைத் தூண்டினார் என்ற குற்றச்சாட்டில் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1970 - கம்போடியாவில் கெமர் குடியரசு அறிவிக்கப்பட்டது.
- 1981 - பிரான்சில் மரணதண்டனை நிறுத்தப்பட்டது.
- 1983 - ரங்கூனில் தென் கொரிய அதிபர் சுன் டூ-ஹுவான் மீது இடம்பெற்ற குண்டுத்தாக்குதலில் அவர் உயிர் தப்பினார். நான்கு அமைச்சர்கள் உட்பட பலர் உயிரிழந்தனர்.
- 1987 - யாழ்ப்பாணத்தில் நிதர்சனம் தொலைக்காட்சி நிறுவனம் மற்றும் முரசொலி நாளிதழ் கட்டிடங்களை இந்திய இராணுவத்தினர் தகர்த்தனர்.
- 1989 - ரஷ்யாவின் வரோனியொஷ் அருகில் ஒரு பறக்கும் தட்டு இறங்கியதாக சோவியத் ஒன்றிய செய்தித் தாபனம் அறிவித்தது.
- 2001 - இந்தியாவில் பாவேந்தர் பாரதிதாசனுக்கு அஞ்சல்தலை வெளியிடப்பட்டது.
- 2004 - ஆப்கானிஸ்தானில் முதற்தடவையாக சனநாயகத் தேர்தல் இடம்பெற்றது.
- 2006 - வட கொரியா தனது முதலாவது அணுவாயுதச் சோதனையை வெற்றிகரமாக நிகழ்த்தியது.
பிறப்புக்கள் [தொகு]
- 1897 - எம். பக்தவத்சலம், தமிழ்நாட்டின் முன்னாள் முதலமைச்சர் (இ. 1987)
- 1924 - இம்மானுவேல் சேகரன், தலித் மக்களின் உரிமைகளுக்காக போராடிய ஒரு தலைவர்.(இ. 1957
- 1940 - ஜான் லெனன், ஆங்கிலப் பாடகர், இசையமைப்பாளர் (இ. 1980)
- 1945 - விஜய குமாரணதுங்க, இலங்கையின் சிங்கள திரைப்பட நடிகர், அரசியல்வாதி (இ. 1988)
- 1968 - அன்புமணி ராமதாஸ், தமிழக அரசியல்வாதி
இறப்புகள் [தொகு]
- 1943 - பீட்டர் சீமன், டச்சு இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1865)
- 1967 - சே குவேரா, ஆர்ஜென்டீனிய கெரில்லாத் தலைவர், (பி. 1928)
சிறப்பு நாள் [தொகு]
- உகாண்டா - விடுதலை நாள் (1962)
- எக்குவடோர் - கயாக்கில் விடுதலை நாள் (1820)
- உலக அஞ்சல் நாள்