ஜூன் 23
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(சூன் 23 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஜூன் 2012 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXII | ||||||
ஜூன் 23 கிரிகோரியன் ஆண்டின் ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 175ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 191 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1532 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியும் பிரான்சின் முதலாம் பிரான்சுவாவும் புனித ரோமப் பேரரசின் ஐந்தாம் சார்ல்சுக்கு எதிராக இரகசிய ஒப்பந்தத்தை ஏற்படுத்தினர்.
- 1565 - மால்ட்டா மீதான முற்றுகையின் போது ஒட்டோமான் பேரரசின் கடற்படைத் தளபதி கொல்லப்பட்டான்.
- 1658 - இலங்கையில் போர்த்துக்கேயரின் கடைசிப்பிடியாக இருந்த யாழ்ப்பாணக் கோட்டையை டச்சுக்காரர் கைப்பற்றினர்.
- 1757 - இந்தியாவில் பலாசி என்ற இடத்தில் வங்காளத்தின் கடைசி நவாப் சிராஜ் உல் டாவுலா தலைமையிலான இந்திய இராணுவத்தினரை பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனியினர் தோற்கடித்தனர்.
- 1758 - ஏழாண்டுகள் போர்: பிரித்தானியப் படைகள் ஜெர்மனியில் கிரெஃபீல்ட் என்ற இடத்தில் பிரெஞ்சுப் படைகளை வென்றனர்.
- 1760 - ஏழாண்டுகள் போர்: ஆஸ்திரியா புரூசியாவை வென்றனர்.
- 1794 - உக்ரேனின் கீவ் நகரில் யூதக் குடியேற்றத்துக்கு ரஷ்யாவின் பேரரசி இரண்டாம் கத்தரீன் அனுமதி அளித்தாள்.
- 1868 - கிறிஸ்தோபர் ஷோல்ஸ் தட்டச்சியந்திரத்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1894 - பன்னாட்டு ஒலிம்பிக் அமைப்பு பாரிசில் அமைக்கப்பட்டது.
- 1919 - எஸ்தோனியாவின் விடுதலைப் போரில் வடக்கு லாத்வியாவில் செசிஸ் என்ற இடத்தில் ஜெர்மனியப் படைகள் தோற்ற இந்நாள் எஸ்தோனிய வெற்றி நாளாகக் கொண்டாடப்பட்டு வருகிறது.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: முதன் முதலாக அவுஷ்விட்ஸ் வதை முகாமில் நச்சு வாயு அறையில் சேர்ப்பதற்காக முதல் தொகுதி யூதர்கள் பாரிசில் இருந்து தொடருந்தில் அனுப்பப்பட்டனர்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் போர் விமானம் ஒன்று தவறுதலாக வேல்சில் தரையிறங்கியபோது கைப்பற்றப்பட்டது.
- 1945 - ஜப்பானிய இராணுவத்துக்கும் அமெரிக்கப் படைகளுக்கும் இடையில் இடம்பெற்ற ஒகினவா சண்டை அமெரிக்காவின் வெற்றியுடன் முடிவடைந்தது.
- 1956 - கமால் நாசர் எகிப்தின் அதிபரானார்.
- 1960 - பத்திரிசு லுமும்பா கொங்கோ குடியரசின் மக்களால் தெரிவு செய்யப்பட்ட முதலாவது பிரதமர் ஆனார்.
- 1968 - புவெனஸ் அயரசில் உதைப்பந்தாட்ட மைதானத்தில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 74 பேர் கொல்லப்பட்டனர்.
- 1980 - இந்திய அரசியல்வாதி சஞ்சய் காந்தி விமான விபத்தில் கொல்லப்பட்டார்.
- 1985 - அயர்லாந்தில் அட்லாண்டிக் கடலின் மேல் 9500மீ உயரத்தில் பறந்து கொண்டிருந்த இந்தியாவின் போயிங் விமானத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பில் அதில் பயணம் செய்த 329 பேரும் கொல்லப்பட்டனர்.
- 1990 - மல்தாவியா சோவியத் ஒன்றியத்தில் இருந்து விடுதலையை அறிவித்தது.
[தொகு] பிறப்புகள்
- 1924 - ரணசிங்க பிரேமதாசா, இலங்கை அதிபர் (இ. 1993)
- 1972 - ஜினடைன் ஜிடான், பிரன்ச் கால்பந்தாட்டக்காரர்
[தொகு] இறப்புகள்
- 1980 - வி. வி. கிரி, இந்தியாவின் 4வது குடியரசுத் தலைவர் (பி. 1894
- 1980 - சஞ்சய் காந்தி, இந்திய அரசியல்வாதி (பி. 1946)
[தொகு] சிறப்பு நாள்
- எஸ்தோனியா - வெற்றி நாள்
- போலந்து, நிக்கராகுவா, உகாண்டா - தந்தையர் நாள்