மார்ச் 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மார்ச் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| 31 | ||||||
| MMXIII | ||||||
மார்ச் 25 கிரிகோரியன் ஆண்டின் 84ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 85ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 281 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1584 - வேர்ஜீனியா மாநிலத்தை பயன்படுத்த அல்லது சுரண்ட சேர் வால்ட்டர் ரேலி காப்புரிமம் பெற்றார்.
- 1634 - மேரிலாந்துக்கு முதலாவது குடியேறிகள் வந்தனர்.
- 1655 - டைட்டான் என்ற சனிக் கோளின் மிகப்பெரிய சந்திரனை கிறிஸ்டியான் ஹைஜன்ஸ் கண்டுபிடித்தார்.
- 1807 - அடிமைகளை வர்த்தகம் செய்வது ஐக்கிய இராச்சியத்தில் சட்டம் மூலம் தடை செய்யப்பட்டது.
- 1821 - (ஜூலியன் நாள்காட்டி) ஓட்டோமான் பேரரசுக்கு எதிராக கிரேக்கர்கள் போராட்டத்தை ஆரம்பித்தனர். கிரேக்க விடுதலைப் போர் ஆரம்பமானது.
- 1857 - பிரெஞ்சுக்காரரான லியோன் ஸ்கொட் ஒலியை பதிவு செய்யும் கருவிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1911 - நியூயோர்க் நகரில் தொழிற்சாலை ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 146 தொழிலாளர்காள் கொல்லப்பட்டனர்.
- 1918 - பெலாரஸ் மக்கள் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: அச்சு அணி நாடுகள் அமைப்பில் யூகொஸ்லாவியா இணைந்தது.
- 1947 - இலினோயில் நிலக்கரிச் சுரங்கத்தில் இடம்பெற்ற குண்டுவெடிப்பு விபத்தில் 111 பேர் கொல்லப்பட்டனர்.
- 1949 - எஸ்தோனியா, லாத்வியா, மற்றும் லித்துவேனியா ஆகியவற்றைச் சேர்ந்த 92,000 பேர் சோவியத் அதிகாரிகளினால் சோவியத் ஒன்றியத்தின் பல ஒதுக்கமான இடங்களுக்கு கட்டாய வேலைக்காக அனுப்பப்பட்டனர்.
- 1953 - ஆந்திர மாநில அமைப்பு பற்றிய அதிகாரப்பூர்வமான பிரகடனத்தை ஜவகர்லால் நேரு நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். ஆந்திரத் தலைநகர் ஆந்திர எல்லைக்குள்ளேயே அமையும் என அறிவித்தார்.
- 1954 - முதலாவது வர்ணத் தொலைக்காட்சிப் பெட்டியை RCA நிறுவனம் வெளியிட்டது. (12" திரையளவு, விலை: $1,000).
- 1957 - மேற்கு ஜெர்மனி, பிரான்ஸ், இத்தாலி, பெல்ஜியம், நெதர்லாந்து, மற்றும் லக்சம்பேர்க் ஆகியன இணைந்த ஐரோப்பிய பொருளாதார சமூகம் உருவாக்கப்பட்டது.
- 1965 - மனித உரிமைவாதி மார்ட்டின் லூதர் கிங் தனது 4-நாள் 50-மைல் எதிப்புப் பயணத்தை முடித்துக் கொண்டார்.
- 1971 - வங்காளதேச விடுதலைப் போரில் பாகிஸ்தான் இராணுவம் கிழக்கு பாகிஸ்தானுக்கு எதிரான தேடுதலொளி நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
- 1975 - சவுதி மன்னர் ஃபைசால் தனது மருமகனால் சுட்டுக் கொல்லப்பட்டார்.
- 1990 - நியூயோர்க் நகரில் சட்டமுரணான சமூக விடுதி ஒன்றில் இடம்பெற்ற தீயில் சிக்கி 87 பேர் கொல்லப்பட்டனர்.
- 1992 - சோவியத் விண்வெளிவீரர் செர்கே கிரிக்காலொவ் மீர் விண்வெளி நிலையத்தில் 10-மாதங்கள் தரித்திருந்துவிட்டு பூமி திரும்பினார்.
பிறப்புக்கள் [தொகு]
- 1914 - நோர்மன் போர்லாக், நோபல் பரிசு பெற்ற அமெரிக்க அறிவியலாளர், (இ. 2009)
இறப்புக்கள் [தொகு]
- 1914 - பிரெடெரிக் மிஸ்ட்ரால், நோபல் பரிசு பெற்ற பிரெஞ்சுக் கவிஞர் (பி. 1830)
சிறப்பு நாள் [தொகு]
- கிரேக்கம் - விடுதலை நாள்