நவம்பர் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | நவம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | |||||
| 3 | 4 | 5 | 6 | 7 | 8 | 9 |
| 10 | 11 | 12 | 13 | 14 | 15 | 16 |
| 17 | 18 | 19 | 20 | 21 | 22 | 23 |
| 24 | 25 | 26 | 27 | 28 | 29 | 30 |
| MMXIII | ||||||
நவம்பர் 1 கிரிகோரியன் ஆண்டின் 305வது நாளாகும். நெட்டாண்டுகளில் 306வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 60 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1520 - தென் அமெரிக்காவில் மகலன் நீரிணை மகலனால் கண்டுபிடிக்கப்பட்டது.
- 1592 - கொரியக் கடற்படையினர் பூசான் என்ற இடத்தில் மிகப்பெரும் ஜப்பானியப் படைகளைத் தோற்கடித்தனர்.
- 1604 - ஷேக்ஸ்பியரின் ஓத்தெல்லோ நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
- 1611 - ஷேக்ஸ்பியரின் த டெம்பெஸ்ட் நாடகம் முதற்தடவையாக லண்டனில் அரங்கேறியது.
- 1755 - போர்த்துக்கல், லிஸ்பன் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கம் மற்றும் ஆழிப்பேரலை காரணமாக 60,000-90,000 பேர் வரை கொல்லப்பட்டனர்.
- 1805 - முதலாம் நெப்போலியன் ஆஸ்திரியாவை முற்றுகையிட்டான்.
- 1814 - நெப்போலியனின் பிரான்ஸ் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து ஐரோப்பாவின் எல்லைகளை மீளவரையும் பொருட்டு வியென்னா காங்கிரஸ் கூடியது.
- 1876 - நியூசிலாந்தின் மாகாண சபைகள் கலைக்கப்பட்டன.
- 1894 - ரஷ்யாவின் மூன்றாம் அலெக்சாண்டர் இறந்ததை அடுத்து இரண்டாம் நிக்கலாஸ் மன்னனானான்.
- 1904 - இலங்கையின் வட மாகாணத்துக்கான தொடருந்து சேவை ஆரம்பிக்கப்பட்டது. இது அநுராதபுரம் வரை சேவையில் ஈடுபட்டது.
- 1911 - இத்தாலிக்கும் துருக்கிக்கும் இடையில் இடம்பெற்ற போரில் முதற்தடவையாக விமானத்தில் இருந்து குண்டுகள் வீசப்பட்டன.
- 1914 - முதலாம் உலகப் போர்: சிலியில் ஜெர்மனியக் கடற்படையுடன் நடந்த மோதலில் பிரித்தானியக் கடற்படையினர் முதன் முதலில் தோல்வியடைந்தனர்.
- 1918 - மேற்கு உக்ரேன் ஆஸ்திரிய-ஹங்கேரிப் பேரரசிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1922 - ஒட்டோமான் பேரரசின் கடைசி சுல்தான் ஆறாம் மெகமெட் பதவியிழந்தான்.
- 1928 - துருக்கிய மொழி சீர்திருத்தம் ஏற்பட்டது. அரபு எழுத்துக்கள் புதிய துருக்கிய எழுத்துக்களாக மாற்றப்பட்டன.
- 1948 - சீனாவின் மஞ்சூரியா என்ற இடத்தில் சீனக் கப்பல் வெடித்து மூழ்கியதில் 6,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1950 - புவேர்ட்டோ ரிக்கோ தேசியவாதிகள் அமெரிக்கத் தலைவர் ஹரி ட்ரூமனை கொலை செய்ய எடுத்த முயற்சி தோல்வியடைந்தது.
- 1951 - நெவாடாவில் அணுகுண்டு வெடிப்புச் சோதனையில் அமெரிக்கப் படைகள் ஈடுபடுத்தப்பட்டனர்.
- 1954 - புதுச்சேரி பிரெஞ்சு ஆதிக்கத்திலிருந்து விடுதலை பெற்று இந்தியாவுடன் இணைந்தது.
- 1956 - நிசாம் என அழைக்கப்பட்ட பகுதி ஆந்திரப் பிரதேசம் என்ற மாநிலமாக்கப்பட்டது.
- 1956 - இந்தியாவில் மைசூர், கேரளம், மதராஸ் ஆகிய மாநிலங்கள் உருவாக்கப்பட்டன.
- 1956 - இந்தியாவில் கன்னியாகுமரி பிரதேசம் கேரள மாநிலத்தில் இருந்து பிரிந்து தமிழ்நாடு மாநிலத்துடன் புதிய மாவட்டமாக இணைந்தது.
- 1957 - அக்காலத்தில் உலகின் மிக நீளமான தொங்கு பாலமான மக்கினா பாலம் மிச்சிகன் மாநிலத்தில் அமைக்கப்பட்டது.
- 1970 - பிரான்சில் நடன மாளிகை ஒன்றில் இடம்பெற்ற தீ விபத்தில் 144 பேர் கொல்லப்பட்டனர்.
- 1973 - மைசூர் மாநிலம் கர்நாடகா என மாற்றப்பட்டது.
- 1981 - ஐக்கிய இராச்சியத்திடம் இருந்து அன்டிகுவா பர்புடா விடுதலை பெற்றது.
- 1993 - ஐரோப்பிய ஒன்றியம் அமைப்பதற்கான மாஸ்ட்ரிக்ட் ஒப்பந்தம் நடைமுறைக்கு வந்தது.
- 1998 - மனித உரிமைகளுக்கான ஐரோப்பிய நீதிமன்றம் அமைக்கப்பட்டது.
- 1999 - ஓயாத அலைகள் மூன்று இராணுவ நடவடிக்கையின் முதலாவது கட்டம் புலிகளால் தொடங்கப்பட்டது.
- 2006 - பெங்களூர் நகரின் பெயர் பெங்களூரு என மாற்றப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1762 - ஸ்பென்சர் பேர்சிவல், ஐக்கிய இராச்சியத்தின் பிரதமர் (இ. 1812)
- 1970 - கப்டன் மயூரன், விடுதலைப் புலிப் போராளி (இ. 1993)
- 1973 - ஐஸ்வர்யா ராய், இந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள் [தொகு]
- 1959 - தியாகராஜ பாகவதர், தமிழ்த் திரைப்பட நடிகர், பாடகர் (பி. 1910).
- 1996 - ஜூனியஸ் ரிச்சட் ஜயவர்தனா, இலங்கையின் முதலாவது ஜனாதிபதி (பி. 1906)
சிறப்பு நாள் [தொகு]
- அன்டிகுவா பர்புடா - விடுதலை நாள் (1981)
- அல்ஜீரியா - தேசிய நாள்