ஸ்பென்சர் பேர்சிவல்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
ஸ்பென்சர் பேர்சிவல்
The Rt Hon Spencer Percival


பதவியில்
அக்டோபர் 4, 1809 – மே 11, 1812
அரசர் மூன்றாம் ஜோர்ஜ்
முன்னவர் வில்லியம் கவெண்டிஷ்-பெண்டின்க்
பின்வந்தவர் ரொபேர்ட் ஜென்கின்சன்

நிதி அமைச்சர்
பதவியில்
மார்ச் 26, 1807 – மே 11 1812
அரசர் மூன்றாம் ஜோர்ஜ்
முன்னவர் ஹென்றி பெற்றி-ஃபிட்ஸ்மோரிஸ்
பின்வந்தவர் நிக்கலாஸ் வான்சிட்டார்ட்
அரசியல் கட்சி டோரி

பிறப்பு நவம்பர் 1, 1762(1762-11-01)
லண்டம்  ஐக்கிய இராச்சியம்
இறப்பு மே 11, 1812 (அகவை 49)
லண்டன்,  ஐக்கிய இராச்சியம்
பயின்ற கல்விசாலை டிரினிட்டி கல்லூரி, கேம்பிரிட்ஜ்

ஸ்பென்சர் பேர்சிவல் (Spencer Perceval, நவம்பர் 1, 1762மே 11, 1812) பிரித்தானியாவின் அரசியல்வாதியும் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமராகவும் இருந்தவர். ஐக்கிய இராச்சியப் பிரதமர்களுள் கொலை செய்யப்பட்டவர் இவர் ஒருவரே.

இவர் 1809 ஆம் ஆண்டில் பிரித்தானியப் பழமைவாதக் கட்சியின் சார்பில் நிதி அமைச்சராகவும் (Chancellor of the Exchequer) மற்றும் கீழவைத் தலைவராகவும் தெரிவு செய்யப்பட்டுப் பின்னர் பிரதமரானார்[1].

இவரது காலத்திலேயே பிரித்தானியக் குடியேற்ற நாடுகளில் அடிமைத் தொழிலை இல்லாதொழிக்கும் சட்டம் கொண்டு வரப்பட்டது.

நாடாளுமன்ற வாயிலில் மே 11, 1812 இல் பேர்சிவலை மனநோய் உள்ள ஜோன் பெல்லிங்ஹம் என்பவன் சுட்டுக்கொன்று காவல்துறையினரிடம் சரணடைந்தான். இவன் பின்னர் ஒரு வாரத்தின் பின்னர் தூக்கிலிடப்பட்டான்[2].

பேர்சிவலின் படுகொலை (19ம் நூற்றாண்டு சித்திரம்

மேற்கோள்கள்[தொகு]

  1. நீவ்ஸ், சிரில் (1971). A History of Greater Ealing. ஐக்கிய இராச்சியம்: S. R. Publishers. பக். p95. ISBN 0-85409-679-5. 
  2. Prime Ministers and Politics Timeline, BBC History

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=ஸ்பென்சர்_பேர்சிவல்&oldid=1472774" இருந்து மீள்விக்கப்பட்டது