பிரான்சின் முதலாம் நெப்போலியன்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
முதலாம் நெப்போலியன்
Napoléon I
பிரான்சின் பேரரசன்
இத்தாலியின் மன்னன்
சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன்
ரைன் கூட்டாட்சியின் காப்பாளன்
Jacques-Louis David 017.jpg
நெப்போலியன் தனது படிப்பகத்தில், ஜாக்-லூயி டேவிட் 1812 இல் வரைந்தது
ஆட்சிக்காலம் மார்ச் 20, 1804ஏப்ரல் 6, 1814
மார்ச் 1, 1815ஜூன் 22, 1815
முடிசூட்டு விழா டிசம்பர் 2, 1804
முழுப்பெயர் நெப்போலியன் பொனபார்ட்
பிறப்பு 15 ஆகத்து 1769(1769-08-15)
பிறப்பிடம் கோர்சிக்கா
இறப்பு மே 5 1821 (அகவை 51)
இறந்த இடம் சென் ஹெலெனா
புதைக்கப்பட்டது பாரிஸ்
முன்னிருந்தவர் பிரெஞ்சு கொன்சுலேட்
முன்னைய அரசன்: பதினாறாம் லூயி (இ. 1793)
பின்வந்தவர் நடப்பின் படி பதினெட்டாம் லூயி
De Jure நெப்போலியன் II
துணைவி ஜோசெஃபின் டெ பியூஹார்னை
மரீ லூயி
வாரிசுகள் நெப்போலியன் II
அரச குடும்பம் பொனபார்ட்
தந்தை கார்லோ பொனபார்ட்
தாய் லெற்றீசியா ரமோலினோ

நெப்போலியன் பொனபார்ட் (Napoléon Bonaparte, 15 ஆகஸ்ட் 17695 மே 1821) அல்லது முதலாம் நெப்போலியன் பிரான்ஸ் நாட்டின் படைத் தலைவனாகவும், அரசியல் தலைவனாகவும் இருந்தவன். தற்கால ஐரோப்பிய வரலாற்றில் இவனுடைய தாக்கம் குறிப்பிடத்தக்கது. இவன் பிரெஞ்சுப் புரட்சியில் ஒரு தளபதி, பிரெஞ்சுக் குடியரசின் ஆட்சியாளன், பிரெஞ்சுப் பேரரசன், இத்தாலியின் மன்னன், சுவிஸ் கூட்டமைப்பின் இணைப்பாளன், ரைன் கூட்டாட்சியின் காப்பாளன் ஆகிய பதவிகளை வகித்துள்ளான்.


கோர்சிக்காவில் பிறந்த இவன் பிரான்ஸில் கனரக ஆயுதங்களுக்கான அலுவலராகப் பயிற்சி பெற்றான். பிரெஞ்சுப் புரட்சியின் தளபதியாக, பிரான்சுக்கு எதிரான முதலாம் கூட்டணி மற்றும் இரண்டாம் கூட்டணிகளுக்கு எதிரான போர்களை வழிநடத்தியதன் மூலம் இவன் முன்னணிக்கு வந்தான். 1799 ஆம் ஆண்டில் ஒரு சதிப்புரட்சியை நிகழ்த்தி அதன்மூலம் பிரெஞ்சுக் குடியரசின் முதல் கன்சல் ஆகப் பதவியில் அமர்ந்தான். ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னர், பிரான்சின் பேரரசனானான். 19 ஆம் நூற்றாண்டின் முதற் பத்தாண்டுகளில் ஐரோப்பாவின் ஒவ்வொரு முக்கிய நாட்டுக்கு எதிராகவும் படை எடுத்தான். தொடர்ச்சியான பல போர் வெற்றிகளினாலும், விரிவான கூட்டணிகளினாலும் அவன் ஐரோப்பாக் கண்டத்தையே தனது மேலாண்மைக்கு உட்படுத்தியிருந்தான். தனது நெருங்கிய நண்பர்களையும், உறவினர்களையும், பிரான்சுக்குக் கீழ் வந்த நாடுகளின் பேரரசர்களாகவும், முக்கிய அலுவலர்களாகவும் நியமித்தான்.


1812 இல் இடம் பெற்றுத் தோல்வியில் முடிந்த பிரான்சின் ரஷ்ய ஆக்கிரமிப்பு நெப்போலியனுக்கு ஒரு திருப்புமுனையாக அமைந்தது. இப் படையெடுப்பு, நெப்போலியனின் படைகளைப் பெரும் அழிவுக்கு உள்ளாக்கியது. இதிலிருந்து மீள்வதற்கு அதற்கு முடியவில்லை. அக்டோபர் 1813 இல், ஆறாவது கூட்டணி, லீப்சிக் என்னுமிடத்தில் நெப்போலியனின் படைகளை முறியடித்து, பிரான்சுக்குள் நுழைந்தன. 1814 ஏப்ரலில், கூட்டணி நெப்போலியனைப் பதவியில் இருந்து இறக்கி எல்பாத் தீவுக்கு நாடு கடத்தியது. ஓராண்டிலும் குறைவான காலத்தில் நெப்போலியன் மீண்டு வந்து இழந்த அரசைக் கைப்பற்றினான். எனினும் 1815 ஜூன் 18 இல் வாட்டர்லூ என்னுமிடத்தில் அவன் இறுதித் தோல்வியைச் சந்தித்தான். இதன் பின்னர் அவனது வாழ்நாளின் இறுதி ஆறாண்டுகளும் பிரித்தானியரின் கட்டுப்பாட்டுக்குள் இருந்த சென் ஹெலெனாத் தீவில் கழிந்தது.

[தொகு] மரணத்தின் காரணம்

நெடு நாட்களாகவே நெப்போலியனின் மரணத்தின் காரணம் அறுதியிடப்படாமல் இருந்தது. ஆங்கிலேயர்கள் ஆர்செனிக் நச்சு தந்து நெப்போலியனைக் கொன்றிருக்கலாம் என்பது போன்று இருந்த பழைய தோற்றப்பாடுகள் யாவும் தற்செயல் நிகழ்வுகள் எனவும் நெப்போலியன் இறக்கவும் அவனின் வம்சமே இறக்கவும் காரணம் பரம்பரையாக இருந்து வந்த இரைப்பைப் புற்று நோயே (stomach cancer) என்பதும் உறுதி செய்யப்பட்டுள்ளது. நெப்போலியனின் புகைப்படங்கள் அனைத்திலும் அவன் தன் வலக்கையைச் சட்டைக்குள் வைத்திருக்கக் காரணம் வயிற்று வலியால் தான் எனவும் நம்பப்படுகிறது.

சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்