1793
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1760கள் 1770கள் 1780கள் - 1790கள் - 1800கள் 1810கள் 1820கள் |
| ஆண்டுகள்: | 1790 1791 1792 - 1793 - 1794 1795 1796 |
| 1793 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1793 MDCCXCIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1824 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2546 |
| சீன நாட்காட்டி | 4489-4490 |
| எபிரேய நாட்காட்டி | 5552-5553 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1848-1849 1715-1716 4894-4895 |
| இரானிய நாட்காட்டி | 1171-1172 |
| இசுலாமிய நாட்காட்டி | 1207 – 1208 |
| ரூனிக் நாட்காட்டி | 2043
|
1793 (MDCCXCIII) ஒரு செவ்வாய்க்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் இது சனிக்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 2 - ரஷ்யாவும் புருசியாவும் போலந்தைப் பங்கிட்டன.
- ஜனவரி 21 - பிரான்சின் பதினாறாம் லூயி மன்னன் அரசத்துரோகக் குற்றச்சாட்டுகளுக்காக கழுத்து வெட்டப்பட்டு மரணதண்டனைக்கு உட்படுத்தப்பட்டான்.
- பெப்ரவரி 1 - பிரித்தானியா, மற்றும் நெதர்லாந்து மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- பெப்ரவரி 25 - ஜோர்ஜ் வாஷிங்டன் முதலாவது அமைச்சரவைக் கூட்டத்தை நடத்தினார்.
- மார்ச் 5 - பிரெஞ்சுப் படைகள் ஆஸ்திரியாவினால் தோற்கடிக்கப்பட்டன.
- மார்ச் 7 - ஸ்பெயின் மீது பிரான்ஸ் போரை அறிவித்தது.
- ஏப்ரல் 1 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
- அக்டோபர் 16 - பதினாறாம் லூயி மன்னனின் மனைவி மறீ அண்டனெட் மரண தண்டனைக்குள்ளாக்கப்பட்டாள்.
- நவம்பர் 9 - மிஷனறி வில்லியம் கேரி குடும்பத்துடன் கல்கத்தா வந்து சேர்ந்தார்.
- டிசம்பர் 9 - நியூயோர்க் நகரின் முதலாவது தினசரிப் பத்திரிகை "தி அமெரிக்கன் மினேர்வா" வெளியிடப்பட்டது.
- டிசம்பர் 26 - கைஸ்பேர்க் என்னும் இடத்தில் இடம்பெற்ற சமரில் பிரெஞ்சுப் படைகள் [ஆஸ்திரியா|ஆஸ்திரியர்]]களைத் தோற்கடித்தனர்.
நாள் அறியப்படாதவை [தொகு]
- ரோமன் கத்தோலிக்கம் பிரான்சில் தடை செய்யப்பட்டது.
- புனித ரோம் பேரரசு பிரான்சின் மீது போரை அறிவித்தது.
- யாழ்ப்பாணத்தில் பருத்தி முதற்தடவையாக விளைவிக்கப்பட்டது.