ஜூன் 8
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 8 கிரிகோரியன் ஆண்டின் 159ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 160ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 206 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1405 - யோர்க் ஆயர் ரிச்சார்ட் ஸ்க்ரோப், நோர்ஃபோக் இரண்டாம் நிலை மன்னர் தொமஸ் மோபிறே ஆகியோர் மன்னர் இங்கிலாந்தின் நான்காம் ஹென்றியின் ஆணையின் பேரில் தூக்கிலிடப்பட்டனர்.
- 1783 - ஐஸ்லாந்தில் லாக்கி எரிமலை வெடிக்க ஆரம்பித்ததில் எட்டு மாதங்களில் வரட்சி, மற்றும் வறுமை காரணமாக 9,000 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: டென்னசி அமெரிக்கக் கூட்டில் இருந்து விலகியது.
- 1887 - ஹேர்மன் ஹொலரித் துளையிடும் அட்டை கொண்ட கணிப்பானுக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1929 - ஐக்கிய இராச்சியத்தில் முதற் தடவையாக தொழிற் கட்சி ஆட்சி அமைத்தது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: நேச நாடுகள் சிரியா, மற்றும் லெபனான் மீது தாக்குதலை ஆரம்பித்தன.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஜப்பானிய நீர்மூழ்கிக் கப்பல்கள் அவுஸ்திரேலியாவின் சிட்னி, நியூகாசில் நகரங்கள் மீது குண்டுத்தாக்குதலை நடத்தின.
- 1984 - அவுஸ்திரேலியாவின் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் ஓரினச்சேர்க்கை சட்டபூர்வமாக அனுமதிக்கப்பட்டது.
- 1992 - முதலாவது உலகக் கடல் நாள் கொண்டாடப்பட்டது.
- 1995 - படிவ நிரலாக்க மொழி பி.எச்.பி வெளியிடப்பட்டது.
- 2006 - அல் குவைதாவின் ஈராக்கியத் தலைவர் அபு முசாப் அல்-ஜர்காவி அமெரிக்க விமானக் குண்டுவீச்சில் கொல்லப்பட்டார்.
- 2006 - ஒஸ்லோ பேச்சுவார்த்தைகளில் இருந்து விலகுவதாக தமிழீழ விடுதலைப் புலிகள் அறிவித்தனர்.
- 2007 - அட்லாண்டிஸ் விண்கப்பல் 7 பேருடன் சர்வதேச விண்வெளி நிலையத்துக்கு ஏவப்பட்டது.
- 2007 - இலங்கையில் புத்தளத்தில் 9 உடல்கள் மிகவும் சிதைந்த நிலையில் காவற்துறையினரால் கண்டுபிடிக்கப்பட்டன.
- 2007 - ஆஸ்திரேலியாவில் நியூ சவுத் வேல்ஸ் மாநிலத்தில் இடம்பெற்ற பெரும் காற்று, மற்றும் வெள்ளத்தினால் 9 பேர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள் [தொகு]
- 1867 - பிரான்க் லாய்டு ரைட், (இ. 1959)
- 1874 - சேர் வைத்திலிங்கம் துரைசுவாமி, இலங்கையின் முன்னாள் சட்டசபை சபாநாயகர்
- 1921 - சுகார்ட்டோ, இந்தோனேசியாவின் முன்னாள் அரசுத் தலைவர் (இ. 2008)
- 1975 - ஷில்பா ஷெட்டி, பாலிவுட் நடிகை
இறப்புகள் [தொகு]
- 1845 - ஆன்ட்ரூ ஜாக்சன், ஐக்கிய அமெரிக்காவின் ஏழாவது குடியரசுத் தலைவர் (பி. 1845)
- 1947 - எரிக் ஃப். வீஷாஉஸ், மருத்துவத்துக்கான நோபல் பரிசு பெற்ற அமெரிக்கர்