1809
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1770கள் 1780கள் 1790கள் - 1800கள் - 1810கள் 1820கள் 1830கள் |
| ஆண்டுகள்: | 1806 1807 1808 - 1809 - 1810 1811 1812 |
| 1809 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1809 MDCCCIX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1840 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2562 |
| சீன நாட்காட்டி | 4505-4506 |
| எபிரேய நாட்காட்டி | 5568-5569 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1864-1865 1731-1732 4910-4911 |
| இரானிய நாட்காட்டி | 1187-1188 |
| இசுலாமிய நாட்காட்டி | 1223 – 1224 |
| ரூனிக் நாட்காட்டி | 2059
|
| விக்கி ஊடக நடுவத்தில் 1809 தொடர்புடைய மேலும் பல ஊடகக் கோப்புகள் உள்ளன. |
1809 (MDCCCIX) ஒரு ஞாயிற்றுக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இது ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- பெப்ரவரி 11 – ராபர்ட் ஃபுல்ட்டன் நீராவிப் படகுக்கான காப்புரிமம் பெற்றார்.
- மார்ச் 13 – சுவீடனில் இராணுவப் புரட்சி மூலம் நான்காம் குஸ்தாவ் அடொல்ஃப் மன்னர் பதவியில் இருந்து அகற்றப்பட்டு சிறைப்பிடிக்கப்பட்டார். மே 10 இல் அதிகாரபூர்வமாக பதவியில் இருந்து அகற்றப்பட்டார்.
- மே 17 – பிரான்சின் முதலாம் நெப்போலியன் பாப்பரசர்களின் நாடுகளை (இன்றைய வத்திக்கான்) பிரெஞ்சுப் பேரரசுடன் இணைக்க உத்தரவிட்டான்.
- சூன் 7 – ஆப்கானித்தானின் சோஜா ஷா பிரித்தானியாவுடன் புதிய உடன்பாட்டுக்கு வந்தார். ஆனால் சில வாரங்களில் அவர் மகுமுத் ஷா என்பவரால் பதவி கவிழ்க்கப்பட்டார்.
- சூலை 6 – பிரெஞ்சுப் படைகள் திருத்தந்தை ஏழாம் பயசைச் சிறைப்பிடித்து லிகூரியாவுக்கு கொண்டு சென்றன.
- சூலை 16 – லா பாஸ் நகரம் (இன்றைய பொலிவியா) ஸ்பானியப் பேரரசிடம் இருந்து விடுதலையை அறிவித்தது. இசுப்பானிய அமெரிக்காவில் முதன் முதலாக விடுதலையை அறிவித்த நாடு இதுவாகும்.
- ஆகத்து 10 – எக்குவடோர் இசுப்பானியாவிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
பிறப்புக்கள் [தொகு]
- ஜனவரி 19 – எட்கர் ஆலன் போ, அமெரிக்க எழுத்தாளர் (இ. 1849)
- பிப்ரவரி 12 - சார்லஸ் டார்வின் (இ. 1882)
- பெப்ரவரி 12 - ஆபிரகாம் லிங்க்கன், அமெரிக்காவின் 16 வது குடியரசுத் தலைவர் (இ. 1865)
- சனவரி 4 - லூயி பிரெயில் (இ. 1852)