ஏப்ரல் 1
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.
| << | ஏப்ரல் 2008 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | |||
| MMVIII | ||||||
ஏப்ரல் 1 கிரிகோரியன் ஆண்டின் 91ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 92ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 274 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
[தொகு] நிகழ்வுகள்
- 1793 - ஜப்பானில் உன்சென் எரிமலை வெடித்தை அடுத்து நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 53,000 பேர் கொல்லப்பட்டனர்.
- 1826 - சாமுவேல் மோரி உள் எரி பொறிக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1867 - சிங்கப்பூர் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
- 1873 - அட்லாண்டிக் என்ற பிரித்தானியாவின் நீராவிக் கப்பல் கனடாவில் நோவா ஸ்கோஷேயில் மூழ்கியதில் 547 கொல்லப்பட்டனர்.
- 1924 - அடொல்ஃப் ஹிட்லர் ஐந்தாண்டுகள் சிறைத்தண்டனை பெற்றார். ஆனாலும் அவர் 9 மாதங்களில் விடுதலை பெற்றார்.
- 1937 - யேமனின் ஏடென் பிரித்தானிய குடியேற்ற நாடாகியது.
- 1939 - ஸ்பானிய உள்நாட்டுப் போர் முடிவுக்கு வந்தது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் படைகள் ஜப்பானின் ஒக்கிநாவா தீவுகளில் இறங்கினர்.
- 1946 - அலூஷன் தீவுகளில் நிகழ்ந்த 7.8 அளவு நிலநடுக்கம் காரணமாக ஹவாய் தீவுகளில் ஆழிபேரலை ஏற்பட்டு 157 பேர் கொல்லப்பட்டனர்.
- 1946 - மலாய் கூட்டமைப்பு உருவானது.
- 1948 - பரோ தீவுகள் டென்மார்க்கில் இருந்து தன்னாட்சி பெற்றது.
- 1949 - சீனக் கம்யூனிஸ்ட் கட்சியுடன் சீனத் தேசியக் கட்சியுடன் பெய்ஜிங்கில் நடத்திய பேச்சுக்கள் தோல்வியில் முடிந்தன.
- 1957 - இந்தியாவில் நயா பைசா நாணயம் அறிமுகப்படுத்தப்பட்டது.
- 1973 - புலிகளைக் காப்பதற்கான செயல்திட்டம் இந்தியாவின் ஜிம் கார்பெட் தேசியப் பூங்காவில் தொடங்கப்பட்டது.
- 1976 - ஆப்பிள் கணினி ஸ்டீவ் ஜொப்ஸ், Steve Wozniak ஆகியோரால் தொடங்கப்பட்டது.
- 1979 - ஈரான் 98% மக்கள் ஆதரவுடன் ஓர் இஸ்லாமியக் குடியரசாகியது.
- 1981 - சோவியத் ஒன்றியத்தில் பகலொளி சேமிப்பு நேரம் முதல் தடவையாக அறிமுகப்படுத்தப்பட்டது.
- 2001 - யூகொஸ்லாவியாவின் முன்னாள் அதிபர் சுலோபதான் மிலோசெவிச் போர்க்குற்றங்களுக்காக காவல்துறையினரிடம் சரணடைந்தார்.
- 2001 - நெதர்லாந்து சமப்பால் திருமணத்தை சட்டபூர்வமாக்கிய முதலாவது நாடானது.
- 2004 - கூகிள் 1000 மெகாபைட் கொள்ளளவுள்ளதான ஜிமெயில் என்ற இலவச மின்னஞ்சல் சேவையை அறிமுகப்படுத்தியது.
- 2006 - ஈரான் மேற்கில் லோரிஸ் டான் மாகாணத்தில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 66 பேர் கொல்லப்பட்டனர்.
[தொகு] பிறப்புகள்
- 1865 - ரிச்சார்ட் சிக்மோண்டி, நோபல் பரிசு பெற்றவர் (இ. 1929)
- 1875 - எட்கார் வாலஸ், ஆங்கில எழுத்தாளர் (இ. 1932)
- 1878 - சி. கணேசையர், ஈழத்துத் தமிழறிஞர் (இ. 1958)
- 1919 - ஜோசப் மறி, நோபல் பரிசு பெற்றவர்
- 1933 - குளோட் கொஹென்-டனூட்ஜி, நோபல் பரிசு பெற்றவர்
- 1940 - வங்காரி மாதாய், , அமைதிக்கான நோபல் பரிசு பெற்றவர்
- 1960 - துங்கு அப்துல் ரகுமான், மலேசியாவின் மன்னர் (பி. 1895)
- 2007 - தி. வே. கோபாலையர், தமிழறிஞர் (பி. 1926)
[தொகு] இறப்புகள்
- 1968 - லேவ் லண்டாவு, நோபல் பரிசு பெற்ற ரஷ்ய இயற்பியலாளர் (பி. 1908)

