அலூசியன் தீவுகள்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
அலூசியன் தீவுகள்
Aleutian Islands
Aleutian Islands xrmap.png
புவியியல்
அமைவு பசிபிக் பெருங்கடல்
தீவுகளின் எண்ணிக்கை >300
முக்கிய தீவுகள் உனலாஸ்கா தீவு
ஆட்சி
Flag of the United States ஐக்கிய அமெரிக்கா
மாநிலம் அலாஸ்கா
பெரிய நகரம் உனலாஸ்கா (4,283)
இனம்
மக்கள் தொகை 8,162 (2000)
ஆதி குடிகள் அலூட்

அலூசியன் தீவுகள் (Aleutian Islands) என்பவை வடக்கு பசிபிக் பெருங்கடலில் உள்ள முன்னூறிற்கும் மேற்பட்ட தீவுகளை உள்ளடக்கிய ஒரு தீவுக் கூட்டம் ஆகும். இவற்றின் மொத்தப் பரப்பளவு 6,821 சதுர மைல் (17,666 கிமீ²). அலாஸ்கா குடாவில் இருந்து மேற்கே 1,200 மைல் (1,900 கிமீ) வரை பரந்துள்ளது. இத்தீவுக் கூட்டத்தின் பெரும் பகுதி அலாஸ்காவில் இருந்தாலும், மேற்குப் பக்கத்தின் கடைசிப் பகுதியில் ஒரு சிறிய கொமண்டாஸ்கி தீவுகள் ரஷ்யாவில் உள்ளது. மொத்தம் 57 எரிமலைகள் இத்தீவுக் கூட்டத்தில் உள்ளன. 1867ம் ஆண்டுக்கு முன்னர் இவை கத்தரீன் தீவுக்கூட்டம் என்றழைக்கப்பட்டன.

விண்ணில் இருந்து அலூசியன் தீவுகளின் தோற்றம்
அலூசியன் தீவுகளில் உனலாஸ்கா தீவு

மக்கள்[தொகு]

இத்தீவுகளில் உள்ள பழங்குடியினர் தம்மை உனாங்கன் என அழைக்கின்றனர். இவர்கள் பெரும்பாலும் "அலூட்" என அழைக்கப்படுகின்றனர். இவர்கள் பேசும் மொழி அலூட் மொழி ஆகும். இம்மொழி எஸ்கிமோ-அலூட் மொழிக் குடும்பத்தைச் சேர்ந்தது. இம்மொழிக் குடும்பம் வேறு எந்த மொழியுடனும் தொடர்புடையதல்ல.

2000 இல் இத்தீவுகளின் மொத்த மகக்ள் தொகை 8,162 ஆகும். இவர்களில் 4,283 பேர் உனலாஸ்காவில் வாழ்கின்றனர்.

வெளி இணைப்புகள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=அலூசியன்_தீவுகள்&oldid=1679223" இருந்து மீள்விக்கப்பட்டது