மே 10
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | மே 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | |||
| 5 | 6 | 7 | 8 | 9 | 10 | 11 |
| 12 | 13 | 14 | 15 | 16 | 17 | 18 |
| 19 | 20 | 21 | 22 | 23 | 24 | 25 |
| 26 | 27 | 28 | 29 | 30 | 31 | |
| MMXIII | ||||||
மே 10 கிரிகோரியன் ஆண்டின் 130ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 131ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 235 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1503 - கிறிஸ்தோபர் கொலம்பஸ் கேமான் தீவுகளை அடைந்து அங்கிருந்த பெருந்தொகையான கடலாமைகளைக் கண்டு அத்தீவுக்கு லாஸ் டோர்ட்டுகஸ் எனப் பெயரிட்டார்.
- 1612 - ஷாஜகான் மன்னன் மும்தாஜ் மஹாலைத் திருமணம் புரிந்தான்.
- 1768 - மூன்றாம் ஜோர்ஜ் மன்னனைப் பெரிதும் குறை கூறி ஜோன் வில்க்ஸ் என்பவர் எழுதிய கட்டுரையை அடுத்து அவர் சிறைப் பிடிக்கப்பட்டார். இதை அடுத்து லண்டனில் பெரும் கலவரம் மூண்டது.
- 1774 - பதினாறாம் லூயி பிரான்சின் மன்னனாக முடிசூடினான்.
- 1796 - ரஷ்யப் படைகள் தாகெஸ்தான் குடியரசின் டேர்பெண்ட் நகரை முற்றுகையிட்டனர்.
- 1796 - பிரான்ஸ் மன்னன் நெப்போலியன் பொனபார்ட் இத்தாலியில் ஆஸ்திரியப் படைகளுக்கெதிரான போரில் பெரும் வெற்றி பெற்றான். 2,000 ஆஸ்திரியர்கள் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1810 - ஆர்ஜெண்டீனாவின் தலைநகரான புவெனஸ் அயரெஸ் நகர மண்டபத்தை புரட்சியாளர்கள் கைப்பற்றினர்.
- 1857 - சிப்பாய்க் கிளர்ச்சி: இந்தியாவில் உத்தரப் பிரதேசத்தில் மீரட் என்ற இடத்தில் சிப்பாய்கள் பிரித்தானியக் கிழக்கிந்தியக் கம்பனிக்கெதிராக கிளர்ச்சியை ஆரம்பித்தார்கள். இந்திய விடுதலைப் போராட்டம் ஆரம்பமானது.
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தலைவர் ஜெபர்சன் டேவிஸ் அமெரிக்கக் கூட்டுப் படைகளினால் ஜோர்ஜியாவில் கைப்பற்றப்பட்டார்.
- 1865 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கக் கூட்டுப் படைகள் அமெரிக்க மாநிலங்களின் கூட்டமைப்பின் தளபதியான வில்லியம் குவாண்ட்ரில் என்பவரை கென்டக்கி என்ற இடத்தில் தாக்கி படுகாயப்படுத்தினர். இவர் ஜூன் 6 இல் இறந்தார்.
- 1871 - பிரான்சுக்கும் புரூசியாவுக்கும் இடையில் இடையிலான போர் பிரான்ஸ் சரணடைந்ததுடன் முடிவுக்கு வந்தது.
- 1877 - ருமேனியா துருக்கியிடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1908 - அன்னையர் நாள் முதன் முதலில் அமெரிக்காவில் மேற்கு வேர்ஜினியாவில் கொண்டாடப்பட்டது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் முதலாவது குண்டு இங்கிலாந்தில் கெண்ட் பகுதியில் வீழ்ந்தது.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: பெல்ஜியம், நெதர்லாந்து, லக்சம்பேர்க் ஆகிய நாடுகளுக்குள் ஜெர்மனி ஊடுருவியது.
- 1940 - வின்ஸ்டன் சர்ச்சில் ஐக்கிய இராச்சியத்தின் பிரதமரானார்.
- 1940 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய இராச்சியம் ஐஸ்லாந்தினுள் ஊடுருவியது.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் வான்படையின் தாக்குதலில் லண்டனில் கீழவை நாடாளுமன்றம் (House of Commons) சேதத்துக்குள்ளாகியது.
- 1946 - ஜவகர்லால் நேரு இந்திய தேசியக் காங்கிரஸ் கட்சியின் தலைவரானர்.
- 1979 - மைக்குரேனேசிய கூட்டாட்சி நாடுகள் சுயாட்சி பெற்றன.
- 1993 - தாய்லாந்தில் விளையாடுப் பொருட்கள் தயாரிக்கும் தொழிற்சாலையில் இடம்பெற்ற தீ விபத்தில் பெரும்பான்மையாக இளம் பெண்கள் அடங்கிய 188 தொழிலாளர்கள் கொல்லப்பட்டனர்.
- 1994 - நெல்சன் மண்டேலா தென்னாபிரிக்காவின் முதலாவது கறுப்பினத் தலைவரானார்.
- 1996 - எவரெஸ்ட் சிகரத்தில் இடம்பெற்ற கடும் புயலில் சிக்கி 8 மலையேறிகள் கொல்லப்பட்டனர்.
- 1997 - ஈரானில் ஆர்டேக்குல் அருகே நிகழ்ந்த நிலநடுக்கத்தில் 2,400 பேர் உயிரிழந்தனர்.
- 2001 - கானாவில் உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 120 பார்வையாளர்கள் கொல்லப்பட்டனர்.
பிறப்புக்கள்[தொகு]
- 1932 - கார்த்திகேசு சிவத்தம்பி, ஈழத்து எழுத்தாளர், திறனாய்வாளர்.
- 1946 - பிருட்டே கால்டிகாசு, ஜெர்மனிய ஆய்வாளர்
- 1963 - ஆ. ராசா இந்திய அரசியல்வாதி.
- 1981 - நமிதா கபூர், தென்னிந்தியத் திரைப்பட நடிகை
இறப்புகள்[தொகு]
- 2003 - கோபி கிருஷ்ணன், எழுத்தாளர் (பி. 1945)
சிறப்பு நாள்[தொகு]
- ஐக்கிய அமெரிக்கா - வானியல் நாள்
- ஹங்கேரி - பறவைகள் மற்றும் மரங்களின் நாள்
- இசுரேல் - தேசிய விடுமுறை
- தென் கொரியா - பெற்றோர் நாள்