சூலை 28
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூலை 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | |
| 7 | 8 | 9 | 10 | 11 | 12 | 13 |
| 14 | 15 | 16 | 17 | 18 | 19 | 20 |
| 21 | 22 | 23 | 24 | 25 | 26 | 27 |
| 28 | 29 | 30 | 31 | |||
| MMXIII | ||||||
சூலை 28 கிரிகோரியன் ஆண்டின் 209வது நாளாகும். (நெட்டாண்டுகளில் 210வது நாள்). ஆண்டு முடிவிற்கு மேலும் 156 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள்[தொகு]
- 1493 - மாஸ்கோவில் பெரும் தீ விபத்து ஏற்பட்டது.
- 1540 - இங்கிலாந்தின் எட்டாம் ஹென்றியின் ஆணைப்படி தொமஸ் குரொம்வெல் நாட்டுத்துரோகக் குற்றஞ்சாட்டப்பட்டு தூக்கிலிடப்பட்டார். அதே நாளில் ஹென்றி தனது ஐந்தாவது மனைவி கத்தரீனை மணந்தான்.
- 1586 - முதற்தடவையாக உருளைக் கிழங்கு பிரித்தானியாவுக்கு இறக்குமதி செய்யப்படட்து.
- 1609 - பெர்முடாவில் ஆங்கிலேயர்கள் குடியேறினர்.
- 1794 - பிரெஞ்சுப் புரட்சி: மாக்சிமிலியன் ரோப்ஸ்பியர் தலை துண்டிக்கப்பட்டு மரணதண்டனைக்கு உள்ளாக்கப்பட்டான்.
- 1821 - பெரு ஸ்பெயினிடம் இருந்து விடுதலை பெற்றது.
- 1914 - முதலாம் உலகப் போர் ஆரம்பமானது. சேர்பியா மீது ஆஸ்திரியா-ஹங்கேரி போர் தொடுத்தன.
- 1915 - ஐக்கிய அமெரிக்காவின் ஹெயிட்டி முற்றுகை ஆரம்பமானது.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஜெர்மனியின் ஹாம்பூர்க் நகர் மீது பிரித்தானியா குண்டுத் தாக்குதல் மேற்கொண்டதில் 42,000 ஜேர்மனியர்கள் கொல்லப்பட்டனர்.
- 1945 - அமெரிக்க போர் விமானம் ஒன்று எம்பயர் ஸ்டேட் கட்டிடத்தின் 79ம் மாடியில் தவறுதலாக மோதியதில் 14 பேர் கொல்லப்பட்டனர்.
- 1957 - ஜப்பானின் இசகாயா என்ற இடத்தில் மழை, மற்றும் மண்சரிவு காரணமாக 992 பேர் கொல்லப்பட்டனர்.
- 1965 - வியட்நாம் போர்: தெற்கு வியட்நாமில் அமெரிக்கப் படைகளின் எண்ணிக்கையை 75,000 இலிருந்து 125,000 ஆக அதிகரிக்கப்படும் என அமெரிக்க அதிபர் லின்டன் ஜோன்சன் அறிவித்தார்.
- 1976 - சீனாவில் டங்ஷான் நகரில் இடம்பெற்ற நிலநடுக்கத்தில் 242,769 பேர் கொல்லப்பட்டனர். 164,851 பேர் காயமடைந்தனர்.
- 1996 - வாஷிங்டனில் கென்னவிக் என்ற இடத்தில் வரலாற்றுக்கு முற்பட்ட கால மனிதனின் எச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டன.
- 2005 - ஐரியக் குடியரசு இராணுவம் தனது 30 ஆண்டுகால ஆயுதப் போராட்டத்தை முடிவுகுக் கொண்டு வருவதாக அறிவித்தது.
- 2005 - இங்கிலாந்து, பேர்மிங்காம் நகரைச் சூறாவளி தாக்கியதில் £4,000,000 பெறுமதியான சொத்துகக்ள் சேதமடைந்தன. 39 பேர் காயமடைந்தனர்.
- 2006 - ஈழப்போர்: வாகரையில் இலங்கைப் போர் விமானங்கள் தாக்கியதில் பலர் கொல்லப்பட்டனர்.
பிறப்புகள்[தொகு]
- 1936 - சோபர்ஸ், மேற்கிந்தியத்தீவுகள் கிரிக்கெட் துடுப்பாளர்
- 1951 - சந்தியாகோ கலத்ராவா, ஸ்பெயின் நாட்டைச் சேர்ந்த கட்டிடக்கலைஞர்
- 1954 - குகொ சவெஸ், வெனிசுவேலா ஜனாதிபதி
- 1977 - மனு ஜினோபிலி, ஆர்ஜெண்டீனிய கூடைப்பந்து ஆட்டக்காரர்