அக்டோபர் 20
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 20 கிரிகோரியன் ஆண்டின் 293வது நாளாகும். நெட்டாண்டுகளில் 294வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 72 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1803 - ஐக்கிய அமெரிக்கா லூசியானாவை பிரான்சிடம் இருந்து கொள்வனவு செய்யும் ஒப்பந்தத்த்துக்கு ஒப்புதல் அளித்தது.
- 1827 - ஒட்டோமான், எகிப்தியப் படைகள் பிரித்தானீய, பிரெஞ்சு, ரஷ்யக் கூட்டுப் படைகள் நவாரினோ என்ற இடத்தில் இடம்பெற்ற சமரில் தோற்கடித்தன. இது கிரேக்க விடுதலைப் போரை முடிவுக்குக் கொண்டுவந்தது.
- 1941 - கிறகுஜேவாச் படுகொலைகள்: சேர்பியாவின் கிறகுஜேவாச் நகரில் ஆயிரக்கணக்கான மக்கள் நாசி ஜேர்மனியர்களினால் கொல்லப்பட்டனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: சோவியத் இராணுவம் யுகோஸ்லாவியத் தலைநகர் பெல்கிரேட்டை ஜெர்மனியிடமிருந்து மீட்டது.
- 1944 - கிளீவ்லன்ட் நகரில் இயற்கை வாயுக் குழாய் வெடிப்பினால் 130 பெர் கொல்லப்பட்டனர்.
- 1955 - த லோட் ஒவ் த ரிங்ஸ் நூலின் கடைசிப் பாகமான ரிட்டர்ன் ஒஃப் த கிங் வெளியிடப்பட்டது.
- 1946 - புவேர்ட்டோ ரிக்கோ விடுதலைக் கட்சி ஆரம்பிக்கப்பட்டது.
- 1973 - சிட்னி ஒப்பேரா மாளிகை திறந்து வைக்கப்பட்டது.
- 1976 - மிசிசிப்பி ஆற்றில் பயணிகள் கப்பல் ஒன்று சரக்குக் கப்பலுடன் மோதியதில் 78 ப்பயணிகள் கொல்லப்பட்டனர். 18 பேர் மட்டும் தப்பினர்.
- 1982 - இலங்கையில் முதன் முதலில் ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்றது.
- 1982 - மாஸ்கோவில் இடம்பெற்ற பன்னாட்டு உதைப்பந்தாட்டப் போட்டி ஒன்றில் இடம்பெற்ற நெரிசலில் சிக்கி 66 பேர் இறந்தனர்.
- 2004 - முதலாவது உபுண்டு லினக்ஸ் வெளியிடப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1469 - குரு நானக் தேவ், சீக்கிய மதத்தைத் தோற்றுவித்தவர் (இ. 1539)
- 1884 - டி. எஸ். சேனநாயக்கா, இலங்கையின் முதலாவது பிரதம மந்திரி (இ. 1952)
- 1923 - தொ. மு. சி. ரகுநாதன், எழுத்தாளர், திறனாய்வாளர் (இ. 2001)
- 1923 - வி. எஸ். அச்சுதானந்தன், கேரள முதல்வர்
- 1925 - ஆர்ட் புச்வால்ட், அமெரிக்க நகைச்சுவையாளர்
- 1946 - எல்ஃப்ரீத் ஜெலினெக், ஆஸ்திரிய எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர்
- 1954 - ந. செல்வராஜா, இலங்கையை சேர்ந்த நூலகவியலாளர், ஆய்வாளர்
- 1971 - ஸ்னூப் டாக், அமெரிக்க ராப் இசைக் கலைஞர்
- 1978 - வீரேந்தர் சேவாக், இந்தியத் துடுப்பாளர்
இறப்புகள் [தொகு]
- 1984 - கார்ல் கோரி, ஆஸ்திரிய மருத்துவர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1896)
- 1984 - போல் டிராக், நோபல் பரிசு பெற்ற ஆங்கிலேய இயற்பியலாளர் (பி. 1902)
- 2008 - ஸ்ரீதர், தமிழ்த் திரைப்பட இயக்குனர் (பி. 1933)
சிறப்பு நாள் [தொகு]
- பஹாய் சமயம் - புனித நாள்