கொழும்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கொழும்பு
கொழும்பின் ஒரு தோற்றம்.
உலக வர்த்தகமையம் கொழும்பு
Gislanka locator.svg
Red pog.svg
கொழும்பு
மாகாணம்
 - மாவட்டம்

 - கொழும்பு
அமைவிடம் 6.93° N 79.86° E
பரப்பளவு
 - கடல் மட்டத்திலிருந்து உயரம்
37.31  ச.கி.மீ

 - 0-10 மீட்டர்

கால வலயம் SST (ஒ.ச.நே.+5:30)
நகரத் தந்தை உவைஸ் முகம்மது இம்தியாஸ்
பதில் நகரத் தந்தை எஸ். ராஜேந்திரன்
குறியீடுகள்
 - அஞ்சல்
 - தொலைபேசி
 - வாகனம்
 
 - 10001-10015
 - +9411
 - WP

கொழும்பு இலங்கையின் மிகப் பெரிய நகரமும், வர்த்தக தலை நகரமுமாகும். இது இலங்கைத் தீவின் மேற்குக் கரையோரத்தில் அமைந்துள்ளது. இது இலங்கையின் பழமை வாய்ந்த நகரங்களில் ஒன்றல்ல. 16 ஆம் நூற்றாண்டுக்கு முந்திய காலப்பகுதியில் கோட்டே அரசின் ஒரு பகுதியாகவும், முஸ்லிம் வர்த்தகர்களின் ஒரு தளமாகவும் விளங்கிய இவ்விடம், கிபி 16வது நூற்றாண்டுக்குப் பின்னர் போர்த்துக்கேயரின் வரவுக்குப் பின்னரே முக்கியத்துவம் அடையத் தொடங்கியது.

கொழும்பில் அண்ணளவாக சிங்கள மக்களும், தமிழ் பேசும் மக்களும் சம அளவில் வாழ்கின்றனர்.

கொழும்பு என்ற பெயர் “கொள அம்ப தொட்ட” என்ற் சிங்கள மொழிப் பெயரிலிருந்து மறுவியதகும். (கொள-பச்சை,அம்ப-மா,தொட்ட-துறைமுகம்). இது இலங்கையில் அப்போதிருந்த போர்த்துக்கேயரால் கிறிஸ்தோபர் கொலம்பஸை நினைவுகூறும் வகையில் கொலோம்போ என மாற்றப்பட்டது. கொழும்பின் சனத்தொகை 2001ஆம் ஆண்டில் 377,396ஆக காணப்பட்டது. (பாரிய கொழும்பு 2,234,289). கொழும்பு இலங்கையின் மிகப்பெரிய வர்த்தக நகரமாகும். கொழும்பு வட அகலாங்கு 6°54' கிழக்கு நெட்டாங்கு 79°50' இல் அமைந்துள்ளது.

இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் கொழும்பிலேயே அமைந்துள்ளது. இது தென்னாசியாவின் முதல் வானொலி நிலையமாகும். கொழும்பு பல்கலைக்கழகம், பௌத்த பாளி பல்கலைக்கழகம், தொழில்சார் தொழிநுட்பப் பல்கலைக்கழகம், கட்புல அரங்கேற்றற் கலைகள் பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் கொழும்பு நகர எல்லைக்குள்ளேயே அமைந்துள்ளன. மேலும், கொழும்பின் புறநகர்ப் பகுதியில் ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகம், இலங்கை திறந்த பல்கலைக்கழகம் என்பனவும் அமைந்துள்ளன. கொழும்பில் அமைந்துள்ள தொழிநுட்பக் கல்வி நிறுவனம், இலங்கை தகவல் தொழிநுட்ப நிறுவனம், இலங்கை அபிவிருத்தி நிருவாக நிறுவனம், கடற்றொழில் மற்றும் கடல்சார் பொறியியலுக்கான தேசிய நிறுவனம், சமூக அபிவிருத்திக்கான தேசிய நிறுவனம், அக்குவைனாஸ் பல்கலைக்கழகக் கல்லூரி, தேசிய வியாபார முகாமைத்துவ நிறுவனம் என்பனவும் பட்டக்கல்வி வழங்கும் நிறுவனங்களாக இலங்கைப் பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவால் அங்கீகரிக்கப்பட்டுள்ளன.[1] இவை தவிர சென்னைப் பல்கலைக்கழகம்,[2] மதுரை காமராசர் பல்கலைக்கழகம்,[3] பெரியார் பல்கலைக்கழகம் ஆகியவற்றின் தொலைக்கல்வி படிப்பகங்கள் உட்பட ஏராளமான வெளிநாட்டுப் பல்கலைக்கழக வளாகங்களும், பட்டப்படிப்பு நிறுவனங்களும் அமைந்துள்ளன.

பொருளடக்கம்

[தொகு] வலயங்கள்

கொழும்பு 15 வலயங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. அவையாவன:

வலயம் உள்ளடங்கிய பகுதிகள்
கொழும்பு 1 கோட்டை
கொழும்பு 2 கொம்பனித் தெரு மற்றும் ஒன்றிய இடம்
கொழும்பு 3 கொள்ளுப்பிட்டி
கொழும்பு 4 பம்பலப்பிட்டி
கொழும்பு 5 ஹெவ்லொக் நகரம் மற்றும் கிருலப்பனை
கொழும்பு 6 வெள்ளவத்தை மற்றும் பாமன்கடை
கொழும்பு 7 கறுவாத் தோட்டம்
கொழும்பு 8 பொரல்லை
கொழும்பு 9 தெமட்டகொடை
கொழும்பு 10 மருதானை, மாளிகாவத்தை மற்றும் பஞ்சிகாவத்தை
கொழும்பு 11 புறக்கோட்டை
கொழும்பு 12 புதுக்கடை மற்றும் வாழைத் தோட்டம்
கொழும்பு 13 கொட்டாஞ்சேனை மற்றும் புளூமெண்டால்
கொழும்பு 14 கிராண்டுபாஸ்
கொழும்பு 15 முகத்துவாரம், மோதரை, மட்டக்குளி மற்றும் மாதம்பிட்டி

[தொகு] இவற்றையும் பார்க்கவும்

[தொகு] வெளியிணைப்பு

[தொகு] மேற்கோள்கள்

  1. http://www.ugc.ac.lk
  2. www.ideunom.ac.in
  3. http://mkudde.org


"http://ta.wikipedia.org/w/index.php?title=கொழும்பு&oldid=1118124" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்