மட்டக்களப்பு

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்


மட்டக்களப்பு
மட்டக்களப்பு நகர மணிக்கூட்டுக்கோபுரம்
மட்டக்களப்பு நகரின் ஒரு தோற்றம்
மட்டக்களப்பு, உத்தியோகபூர்வ கொடி
கொடி
மட்டக்களப்பு, உத்தியோகபூர்வ சின்னம்
சின்னம்
உத்தியோகபூர்வ வலைத்தளம்: http://www.batticaloamc.com/tamil/Tamilpage.htm
அமைவிடம்
மாகாணம் கிழக்கு மாகாணம், இலங்கை
மாவட்டம் மட்டக்களப்பு
உள்ளூர் நிர்வாகம்
உள்ளூராட்சி வகை மட்டக்களப்பு மாநகரசபை
நகரமுதல்வர் சிவகீதா பிரபாகரன்
உப நகரமுதல்வர்
மொத்த வாக்காளர்
மொத்த வட்டாரங்கள்
புவியியல் பண்புகள்
அமைவிடம் 7°42′ N 81°42′ E
சனத்தொகை
 - மொத்தம் (2002)
 - அடர்த்தி
ஆவது நிலை
72,114
ச.கி.மீ.
சராசரி வெப்பநிலை  பாகை செல்சியஸ்
சராசரி மழைவீழ்ச்சி  மில்லி மீற்றர்கள்
கடல் மட்டத்திலிருந்து உயரம் மீற்றர்கள்
பரப்பளவு  கி.மீ.
நேர வலயம் ஒ.ச.நே. +5.30
இதர விபரங்கள்
குறியீடுகள்
  • அஞ்சல்
  • தொலைபேசி
 
30000
+065

மட்டக்களப்பு (Batticaloa) இலங்கையின் கிழக்குக் கரையோரம் அமைந்துள்ள முக்கிய நகரங்களுள் ஒன்று. இது நாட்டின் ஒன்பது மாகாணங்களுள் ஒன்றான கிழக்கு மாகாணத்திலுள்ள மிகப் பெரிய நகரமும், மட்டக்களப்பு நிர்வாக மாவட்டத்தின் தலைநகரமும் ஆகும். தமிழ் மக்களைப் பெரும்பான்மையாகக் கொண்ட மட்டக்களப்பு மாவட்டத்தில் பெருமளவில் முஸ்லிம் மக்களும் வாழ்கின்றனர். மட்டக்களப்பானது "மீன் பாடும் தேன் நாடு" என அழைக்கப்படுகின்றது. இதன் எல்லைகளாக திருகோணமலை, பொலன்னறுவை, அம்பாறை ஆகிய மாவட்டங்கள் அமைகின்றன.

பொருளடக்கம்

[தொகு] சொல்லிலக்கணம்

மட்டக்களப்பு மான்மியம் கூறுவதன்படி மட்டக்களப்பு எனும் பெயர் காரணப் பெயராக அமைந்துள்ளது. இலங்கைமீது படையெடுத்த வட இந்திய முற்குகர், கிழக்குப் பக்கம் தமது ஓடத்தைச் செலுத்தி, மட்டக்களப்பு வாவியின் எல்லை வரை சென்று, அதற்கு அப்பாற் செல்ல வழியில்லாததால் இது மட்டும் மட்டடா மட்டக்களப்படா (இந்தக்களப்பு இதுவரையும்தான்) எனக் கூறி மட்டக்களப்பு எனும் பெயரை இட்டனர். [1]

மட்டக்களப்பைக் குறிக்கும் ஆங்கிலச் சொல்லான 'Batticaloa' (பற்றிக்கலோ) போர்த்துக்கீச சொல்லிருந்து உருவாகியது.

[தொகு] மீன் பாடும் தேன் நாடு - பெயர்க் காரணம்

கல்லடிப் பாலத்திலிருந்து (லேடி மன்னிங் பாலம்)சப்தமற்ற இரவு நேர முழுமதி தினங்களில் அவதானிக்கும் போது ஓர் இன்னிசை கேட்பதாகக் கூறப்படுகிறது. இது ஊரிகளினுள் நீர் புகுந்தெழுவதால் ஏற்படும் இசை என நம்பப்படுகின்றது. இதனை இலக்கியங்களில் 'நீரரமகளீர் இசைக்கும் இசை' என வர்ணிக்கப்படுகிறது. ஆயினும் மீன்கள்தான் இசையெழுப்பின என்ற கருத்தும் பிரதேசவாசிகளிடம் காணப்படுகிறது. இதன் காரணமாக மட்டக்களப்பு 'மீன் பாடும் தேன் நாடு' என பன்னெடுங் காலமாக அழைக்கப்படுகின்றது.

கத்தோலிக்க குருவான அருட்தந்தை லாங் (Fr. Lang) என்பவர் 'இவ் மீனிசையை' ஒலிப்பதிவு செய்து இலங்கை ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் ஊடாக 1960களில் ஒலிபரப்பினார் என்று சொல்லப்படுகிறது.

அண்மைய காலங்களில் இவ்விசையை கேட்டதாக தகவல் இல்லை. உள்நாட்டு யுத்தமும் இது பற்றிய ஆர்வமின்மையும் இதற்கான காரணங்கள் எனலாம்.

மீனிசை பற்றி பல கருத்துக்கள் இருந்தபோதிலும் மட்டக்களப்பானது மீன் பாடும் தேன் நாடு என்றே நோக்கப்படுகிறது. பல மட்டக்களப்புசார் அரச திணைக்களங்கள், பாடசாலைகள், கழகங்கள், நிறுவனங்கள் போன்றவற்றின் இலச்சினைகள் மீன் அல்லது கடற்கன்னி உருவம் கொண்டதாக காணப்படுவது மட்டக்களப்பிற்கும் 'மீன் பாட்டிற்கும்' உள்ள தொடர்பைக் காட்டுகிறது.

[தொகு] புவியியல்

இலங்கையின் கிழக்கு கடற்கரையில் இந்து சமுத்திரத்தினை கடல் எல்லையாகக் கொண்டமைந்த கிழக்கு மாகாணத்தின் மத்தியில் அமைந்துள்ள பரந்த நிலப்பரப்பாகும். இது சராசரியாக கடல் மட்டத்திலிருந்து 5 மீட்டர் உயரமுடையாகும். மட்டக்களப்பு நகரின் தனித்துவமான சிறப்பியல்பு யாதெனில் இது மூன்று கடல்நீரேரிகளைக் கொண்டுள்ளதே. அவையாவன மட்டக்களப்பு வாவி, வாழைச்சேனை வாவி, பனிச்சங்கேணி வாவி (அல்லது வாகரை வாவி). இதில் மட்டக்களப்பு வாவியே மிக நீண்டது. இது 56 km நீளமும், 168 சதுர கிலோமீற்றர் பரப்பும் கொண்டது. வடக்கில் ஏறாவூர் வரையும் தெற்கில் கல்முனை வரையும் நீண்டுள்ளது[2]. இது சிறு நிலப்பரப்புக்களையும் தீவுகளையும் கொண்டமைந்த அழகிய கடல்நீரேரி ஆகும்.

கடநீரேரிக்கு குறுக்காக சிறு நிலப்பரப்புகளையும் தீவுகளையும் இணைக்கும் வண்ணம் பாலங்கள் அமைக்கப்பட்டிருப்பது நகருக்கு மேலும் அழகு சேர்க்கிறது. மட்டக்களப்பு நகரின் நகராட்சி மையமான புளியந்தீவு இவற்றுள் மிகப்பெரிய தீவாகும். கோட்டைமுனை நிலப்பரப்பை கல்லடி என்ற இடத்துடன் இணைக்கும் கல்லடிப்பாலமானது சிறப்பு வாய்ந்ததொன்றாகும்.

மட்டக்களப்பானது இயற்கை எழில் நிறைந்த கடற்கரைகளைக் கொண்டுள்ளது. பாசிக்குடா மற்றும் கல்குடா கடற்கரைகள் மிகவும் பிரபல்யமானவை. பாசிக்குடா கடற்கரையின் ஒரு பகுதி, அலைகள் குறைவான, மட்டமான நீரினை உடையதும் முருகைக்கற்கள் நிறைந்ததும் நீந்துபவர்களுக்கு மிகவும் இதமானதுமாகும். கல்லடியிலுள்ள கடற்கரையும் மிகக்கூடியளவான மக்களைக் கவரும் அழகிய அமைப்புடையதாகும்.

மட்டக்களப்பின் காலநிலையானது பொதுவாக வெப்பம் கூடியதாக இருப்பினும் வேறுபட்ட பருவகாலங்களில் வெவ்வேறு மாற்றங்களைக் கொண்டதாக காணப்படுகிறது. மார்ச் முதல் மே வரையான காலப்பகுதி சராசரியாக 32 பாகை “செல்சியஸ்“ அளவுடைய வெப்பநிலை கொண்டதாகவும்,நவம்பர் முதல் பெப்ரவரி வரையான காலப்பகுதி கூடுதல் மழைவீழ்ச்சி கொண்டதாகவும் காணப்படுகிறது. இக்காலப்பகுதியில் சராசரியாக 15 பாகை “செல்சியஸ்“ வெப்பநிலையும் 1400 மில்லிமீட்டர் அளவுடைய மழைவீழ்ச்சியும் காணப்படுகிறது.[3]


மாதம் ஜன பெப் மார்ச் ஏப் மே யூன் யூலை ஆக செப் ஒக் நவ டிச வருடம்
சராசரி வெப்பநிலை °C
(°F)
26
(79)
26
(80)
27
(82)
28
(84)
30
(86)
30
(87)
29
(85)
29
(85)
28
(84)
27
(82)
27
(81)
26
(79)
28
(83)

[தொகு] புவியியல்

மட்டக்களப்பு மாவட்டம்
மட்டக்களப்பு வாவியின் அழகு தோற்றம். இடம்: பாலமீன்மடு
Batticaloa clip.theora.ogv
மட்டக்களப்பு

மட்டக்களப்பு மாவட்டம் வாவியால் இரு பிரிவாக பிரிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒருபகுதி எழுவான்கரை (சூரியன் எழும் பகுதி அ-து கிழக்குப்பகுதி) என்றும் மறு பகுதி படுவான்கரை (சூரியன் மறையும் பகுதி அ-து மேற்குப்பகுதி) என்றும் அழைக்கப்படுகின்றது. காடுகள், விவசாய நிலம், வாவி, முகத்துவாரம்,கடல், அணைகள், களப்பு, இயற்கைத் துறைமுகம், குளம் போன்ற புவியியல் அம்சங்களைக் கொண்டுள்ளது. படுவான்கரைப் பிரதேசம் வளமிக்க விவசாய நிலத்தினைக் கொண்ட பகுதியாகும். மட்டக்களப்பு பிரதான நகரினைச் சூழ்ந்து வாவி காணப்படுவது இயற்கை வனப்பான விடயமாகும்.

[தொகு] கல்வி நிறுவனங்கள்

பரந்துபட்ட கிழக்கு மாகாணத்தின் முதன்மை பல்கலைக்கழகமான கிழக்குப் பல்கலைக்கழகம், இலங்கை இம் மாவட்டத்தின் வந்தாறுமூலை எனும் ஊரில் அமைந்துள்ளது. இது மட்டக்களப்பு நகரிலிருந்து வடக்காக 17 கி.மீ தொலைவில் மட்டக்களப்பு-திருகோணமலை நெடுஞ்சாலையில் உள்ளது. இதுதவிர கிறித்தவ மிசனரிமர்களால் நூற்றைம்பது ஆண்டுகளுக்கு முன் நிறுவப்பட்ட புனித மிக்கேல் தேசியப் பாடசாலை, மெதடிஸ்த மத்திய கல்லூரி, சிசிலியா பெண்கள் பாடசாலை, வின்சண்ட் பெண்கள் பாடசாலை போன்றனவும், சுவாமி விபுலானந்தரால் ஆரம்பிக்கப்பட்ட சிவானந்த வித்தியாலயம், ஆனைப்பந்தி மகாவித்தியாலயம், கழுதாவளை மகா வித்தியாலயம் மற்றும் சில முஸ்லிம் வித்தியாலங்கள் போன்றனவும் மட்டக்களப்பு மாவட்டத்தின் கல்விச் செயற்பாட்டில் முக்கிய இடம் வகிக்கின்றன. இதுதவிர மஞ்சந்தொடுவாய் தொழில்நுட்பக்கல்லூரி, தாழங்குடா கல்வியியற் கல்லூரி, சுவாமி விபுலானந்த இசை நடனக் கல்லூரி (தற்போதைய சுவாமி விபுலானந்தா அழகியல் கற்கைகள் நிறுவனம்) போன்றவும் முக்கிய கல்வி நிறுவனங்களாகும்.

[தொகு] பொருளாதார நடவடிக்கைகள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் முக்கிய பொருளாதார நடவடிக்கையாக அரிசி உற்பத்தியினையும், மீன்பிடிக் கைத்தொழிலினையும் குறிப்பிடலாம். தெங்கு உற்பத்திக்குரிய சிறப்பான வளங்களை இம்மாவட்டம் கொண்டிருந்த போதும் 1978 ம் ஆண்டின் கொடும் சூறாவளியின் பின்னர் தெங்குப் பயிர்ச்செய்கை வினைத்திறனாக மேற்கொள்ளப்படாததால் அவை சார்ந்த தொழில்துறை நலிவடைந்துள்ளது. இம்மாவட்டத்தின் வர்த்தக நடவடிக்கைகளில் முஸ்லிம்கள் பெரும் ஆதிக்கம் செலுத்தியுள்ளனர். உள்நாட்டு யுத்த முடிவில் ஆயிரக்கணக்கான இளம் பெண்கள் விதவை ஆகியுள்ளனர். இவர்களில் சிலருக்கு இந்தியாவின் அகமதாபாத் நகரில் உள்ள சேவா அமைப்பு இந்தியாவில் வைத்து தொழில்முனைவோர் பயிற்சிகளை நடத்திவருகிறது. இந்த சேவா அமைப்பு ரமோன் மகசேசே விருது பெற்ற சமூக சேவகர் இலா பட் என்பவரால் தொடங்கப்பட்டதாகும்.

[தொகு] புள்ளிவிபரவியல்

மட்டக்களப்பானது இலங்கையின் தலைநகர் கொழும்பில் இருந்து 314 கி.மி. தொலைவில் அமைந்துள்ளது. இம்மாவட்டத்தில் பெரும்பான்மையாக தமிழரும், மற்றும் முஸ்லிம்கள், சிங்களவர், பறங்கியர் ஆகிய இனத்தவர்களும் வசிக்கின்றனர். மதரீதியாகவும் பல மதத்தவரும் இங்கு வசிக்கின்றனர். உள்நாட்டுபோரும்,இடம்பெயர்வும் அடிக்கடி இடம்பெறும் இம்மாவட்டத்தின் குடித்தொகை புள்ளிவிபரங்களை மிகத் திருத்தமானதாக கருதமுடியாது.


பிரதேசசபை வாரீயாக மக்கள் பரம்பல்

பிரதேசசபை பிரிவு குடும்ப எண்ணிக்கை ஆண் பெண் மொத்தம்
மண்முனை வடக்கு 18,867 39,010 39,187 78,197
மண்முனை மேற்கு 6,964 13,559 13,250 26,809
கோறளை பற்று வடக்கு 4,902 9,364 10,093 19,457
மண்முனை தென்மேற்கு 5,703 11,513 11,821 23,334
மண்முனை தென்மேற்கு 7,084 11,513 13,692 23,334
போறதீவு பற்று 11,170 21,825 22,713 44,538
மண்முனை தெற்கு,வடக்கு பற்று 14,083 26,381 27,885 54,266
மண்முனை பற்று 7,084 13,205 13,692 25,897
காத்தான்குடி 9,662 18,069 18,532 36,601
ஏறாவூர் பற்று 16,350 31,066 33,128 64,194
ஏறாவூர் நகர் 8,031 16,862 18,958 35,820
கோறளைப்பற்று 13,191 28,033 28,639 56,672
கோறளைப்பற்று மேற்கு 12,682 24,732 24,190 48,922
மொத்தம் 128,689 253,619 (49.1%) 262,088 (50.9%) 515,707

[ஆதாரம்:இலங்கை குடித்தொகை,புள்ளிவிபர திணைக்களம்(Department of Census & Statics, Sri Lanka)]

மட்டக்களப்பு நகரசபை

மத அடிப்படையிலான மக்கள் பரம்பல் விபரம்(2000ம் ஆண்டில்).

பிரதேசசபை இந்துக்கள் கிறித்தவர்கள் இஸ்லாமியர் பெளத்தர் ஏனையோர் மொத்தம்
மண்முனை வடக்கு 35,591 21,507 2,947 152 00 78,197
மண்முனை மேற்கு 26,531 278 00 00 00 26,809
கோறளைப்பற்று வடக்கு 16,729 1,677 1,043 08 00 19,457
மண்முனை தென்மேற்கு 23,264 70 00 00 00 23,334
போரதீவு பற்று 44,152 386 00 00 00 44,538
மண்முனை தெற்கு,கிழக்கு பற்று 52,188 2,037 02 22 17 54,266
மண்முனை பற்று 19,897 1,266 5,732 02 00 26,897
காத்தான்குடி 00 00 36,601 00 00 36,601
ஏறாவூர்பற்று 62,855 276 1,010 53 00 64,194
ஏறாவூர்நகர் 00 00 35,820 00 00 35,820
கோறளைப்பற்று 53,040 3,095 135 263 139 56,672
கோறளைபற்று மேற்கு 1,152 121 47,574 71 04 48,922
மொத்தம்' 353,399 (68.53%) 30,713 (5.96%) 130,864 (25.36%) 571 (0.11%) 160 (0.04%) 515,707

[ஆதாரம்:இலங்கை குடித்தொகை,புள்ளிவிபர திணைக்களம் (Department of Census & Statics, Sri Lanka)]

[தொகு] மட்டக்களப்பு வரலாறு

இற்றைக்கு 2500 வருடங்களுக்கு முன்னர் மட்டக்களப்பில் தமிழகத்தை சேர்ந்த மக்கள் இங்கு வாழ்ந்தார்கள் என்பதற்கு பல்வேறு சான்றுகள் உள்ளன.இந்துக்களின் மிகவும் புராதனமான நூலாகிய இரமாயணம், இங்கு அமைந்துள்ள மாமாங்கேஸ்வரர் ஆலயமும் அதன் தீர்த்தக்கேணியும் அனுமனால் உருவாக்கப்பட்டது எனக்கூறுகிறது.

[தொகு] மட்டக்களப்பு வரலாற்று நூல்கள்

[தொகு] இயற்கை அழிவுகள்

[தொகு] இவற்றையும் பார்க்க

[தொகு] மேற்கோள்கள்

  1. மட்டக்களப்பு மான்மியம் - நாமவியல் (பக்கம் 7)
  2. Shanmugaratnam, N. (1995) The need for and steps towards a master plan for suitable utilization of the Batticaloa lagoon, Report to NORAD
  3. Weatherbase
  4. மட்டக்களப்பின் ஆட்சியதிகாரங்களும் காலக் கணிப்புகளும்

[தொகு] வெளி இணைப்பு

  • Battinews மட்டக்களப்பு மற்றும் இலங்கை கிழக்கு மாகான செய்திகள் இணையத்தளம்


"http://ta.wikipedia.org/w/index.php?title=மட்டக்களப்பு&oldid=1110518" இருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்