பரங்கியர்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
பரங்கியர்
Nigel Barker arriving at Anna Sui Feb 2008, Photographed by Ed Kavishe for Fashion Wire Press.jpgDavid de Kretser Dsc 6787.jpg
குறிப்பிடத்தக்க பரங்கிகள்:
நைஜல் பார்க்கர், டேவிட் டி கிரெட்சர், ரொசான் டயஸ்
மொத்த மக்கள்தொகை

~65,000 (உலக அளவில்)

குறிப்பிடத்தக்க மக்கள்தொகை கொண்ட பகுதிகள்
{{{பெயர் விகுதியுடன்}}} கொடி இலங்கை 34,000
தென்னாப்பிரிக்கா கொடி தென்னாப்பிரிக்கா
Flag of the United Kingdom ஐக்கிய இராச்சியம்
கனடா கொடி கனடா
ஆத்திரேலியாவின் கொடி ஆஸ்திரேலியா
நியூசிலாந்து கொடி நியூசிலாந்து
Flag of the United States அமெரிக்கா
மொழி(கள்)
ஆங்கிலம், சிங்களம், தமிழ், இலங்கை இந்தோ-போர்த்துக்கல் கிரியோல் மொழி, டச்சு, இலங்கை டச்சு
சமயங்கள்
தொடர்புள்ள இனக்குழுக்கள்
போர்த்துக்கல் பரங்கியர், இடச்சு பறங்கியர், சிங்களவர், இலங்கைத் தமிழர், கொழும்புச் செட்டி, இலங்கை காப்பிலி

பரங்கியர் அல்லது பறங்கியர்(Burghers) எனப்படுவோர் 16-20ம் நூற்றாண்டு காலப்பகுதியில் ஐரோப்பிய நாடுகளான போர்த்துக்கல், நெதர்லாந்து, செருமனி, பிரித்தானியக் காலனித்துவ ஆட்சியின்போது, அந்நாடுகளின் ஆண்கள் உள்ளூர் பெண்களை திருமணம் செய்து அதன் மூலம் உருவான ஐரோப்பிய-ஆசிய இனக்குழுக்கள் ஆவர். இவர்களில் அதிகம் பேர் இலங்கையில் காணப்படுகின்றனர்.

இன்று இவர்களின் தாய்மொழி ஆங்கிலமாக இருந்தபோதும், இவர்கள் உள்ளூர் மொழிகளையும் அதிகம் பேசுகின்றனர். இலங்கையில் கிரியோல் மொழியின் அடிப்படையில் இவர்கள் பல காலமாக பேசிவரும் இலங்கை போர்த்துக்கீச கிரியோல் மொழி குறிப்பிடத்தக்கது.

1981 அல்லது 2001 ஆம் ஆண்டு சனத்தொகை மதிப்பீட்டின்படி மாவட்ட ரீதியான பரங்கியர் வீதம்.[1]

கணிப்பீடு[தொகு]

1981ம் ஆண்டு இலங்கை குடிசன மதிப்பீட்டின்படி, பரங்கியர் 39,374 பேராக இலங்கையின் மொத்த சனத்தொகையில் 0.2%ஆக காணப்பட்டனர். பரங்கியர் அதிகளவில் கொழும்பு (0.72%), கம்பகா (0.5%) ஆகிய நகரங்களில் காணப்படுகின்றனர். குறிப்பிடத்தக்க அளவானோர் திருகோணமலையிலும் மட்டக்களப்பிலும் காணப்படுகின்றனர்.

இவ்வினத்தவர் அநேகமானோர் உலகிலுள்ள பல சமூகத்தினரிடையே கலந்து காணப்படுகின்றனர்.

மேற்கோள்கள்[தொகு]

இவற்றையும் பார்க்க[தொகு]

வெளி இணைப்புக்கள்[தொகு]

"http://ta.wikipedia.org/w/index.php?title=பரங்கியர்&oldid=1653486" இருந்து மீள்விக்கப்பட்டது