தமிழ்ப் பிராமி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிபீடியாவில் இருந்து.

தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
தமிழ்ப் பிராமி எழுத்துக்கள்

தமிழ்ப் பிராமி என்பது பண்டைக்காலத்தில் தமிழ் எழுத்துக்களை எழுதப்பயன்பட்ட எழுத்து முறைமை. இது தமிழி எனவும் அழைக்கப்படுகிறது. இது அசோகனின் பிராமி எழுத்து முறையில் இருந்து உருவானது. தமிழ்நாட்டில் உள்ள ஆதிச்சநல்லூரில் தமிழ்ப்பிராமி எழுத்துக்கள் கொண்ட பொருட்கள் கண்டறியப் பட்டுள்ளன. தமிழ்ப்ப் பிராமி எழுத்துக்களை ஓலைச்சுவடியில் எழுதுவதற்கேற்ப அவை வட்டெழுத்துக்களாக பின்னர் உருமாறின

சிரோண்மனி மற்றும் ஐராவதம் மகாதேவன் போன்ற தொல்லியல் அறிஞர்கள், தமிழ் பிராமியிலிருந்தே அசோகன் பிராமி தோன்றியிருக்கலாம் என்ற கருத்தை வெளியிட்டுள்ளனர்.

பொருளடக்கம்

[தொகு] அசோகனின் பிராமிக்கு தமிழ் பிராமிக்கு உள்ள வேறுபாடுகள்

அசோகன் பிராமியைப் போல் தமிழ் பிராமியில் கூட்டெழுத்துக்கள் கிடையாது. 'அ'கரத்தை நீக்குவதற்காக புள்ளி பயன்படுத்தப்பட்டது. மேலும் அசோகன் பிராமியில் காணப்படாத தமிழுக்கே உரிய நான்கு எழுத்துக்கள் தமிழில் பிராமியில் உள்ளன. அவை ற,ன,ள,ழ ஆகும். இந்நான்கு எழுத்துக்களும் அசோகன் பிராமியையும் தமிழ் பிராமியையும் வேறு படுத்த உதவுகின்றன. தாய்லாந்தில் உள்ள பிராமி எழுத்துக்களையும் எகிப்து பிராமி எழுத்துக்களை தமிழ் பிராமி என இனங்கண்டது 'ற' என்ற தமிழ் ஒலிக்கான பிராமி எழுத்தே ஆகும்.

[தொகு] தமிழ்ப் பிராமியில் 'தமிழ்' என்ற சொல்

Tamilbrahmi.jpg


[தொகு] தமிழ்ப் பிராமி எழுத்துக்கள் கண்டுபிடிக்கப்பட்ட இடங்கள்

  • எகிப்தில் உடைந்த சாடி ஒன்று தமிழ்ப் பிராமி எழுத்துக்களுடன் கண்டுபிடிக்கப் பட்டது.[1]
  • ஆதிச்சநல்லூரில் இரும்புக்காலத்தைச் சேர்ந்த தாழி கண்டுபிடிப்பு[2]
  • தாய்லாந்து நாட்டில் தமிழ்ப்பிராமி எழுத்துக்களுடன் பானை.[3]

[தொகு] மேற்கோள்கள்

  1. "Tamil Brahmi script in Egypt", The Hindu, Nov 21, 2007. 2007-12-06 அன்று தகவல் பெறப்பட்டது. (ஆங்கிலம்) 
  2. T.S., Subramanian. "`Rudimentary Tamil-Brahmi script' unearthed at Adichanallur", The Hindu, Feb 17, 2005. 2007-12-06 அன்று தகவல் பெறப்பட்டது. (ஆங்கிலம்) 
  3. "Tamil-Brahmi inscription on pottery found in Thailand", The Hindu, Jul 16, 2006. 2007-12-06 அன்று தகவல் பெறப்பட்டது. (ஆங்கிலம்) 

[தொகு] வெளி இணைப்புகள்

"http://ta.wikipedia.org/wiki/%E0%AE%A4%E0%AE%AE%E0%AE%BF%E0%AE%B4%E0%AF%8D%E0%AE%AA%E0%AF%8D_%E0%AE%AA%E0%AE%BF%E0%AE%B0%E0%AE%BE%E0%AE%AE%E0%AE%BF" இணைப்பிலிருந்து மீள்விக்கப்பட்டது
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
ஏனைய மொழிகள்