மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மட்டக்களப்பு
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் கிழக்கு
நிருவாக
மாவட்டங்கள்
மட்டக்களப்பு
தேர்தல்
தொகுதிகள்
3
வாக்காளர்கள் 344,750[1] (2010)
மக்கள்தொகை 537,000[2] (2009)
பரப்பளவு 2,854 சதுர கிமீ[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
5
உறுப்பினர்கள் பா. அரியநேத்திரன், ததேகூ
அலிம் முகம்மது ஹிஸ்புல்லா, ஐமசுகூ
பசீர் சேகு தாவூத், ஐதேமு
பொ. செல்வராசா, ததேகூ
சீ. யோகேஸ்வரன், ததேகூ

மட்டக்களப்பு தேர்தல் மாவட்டம் (Batticaloa Electoral District) என்பது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் கிழக்கு மாகாணத்தின் மட்டக்களப்பு நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 உறுப்பினர்களைக் கொண்ட நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து தற்போது 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகிறார்கள். 2010 ஆம் ஆண்டு இத்தேர்தல் மாவட்டத்தில் 344,750 வாக்காளர்கள் பதிவு செய்யப்பட்டிருந்தனர்[1].

[தொகு] மேற்கோள்கள்

  1. 1.0 1.1 "Member Calculation under Article 98(8)". Department of Elections, Sri Lanka.
  2. "Estimated mid year population by district, 2005 – 2009". Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2010. Department of Census and Statistics, Sri Lanka.
சொந்தப் பயன்பாட்டுக் கருவிகள்
பெயர்வெளிகள்

மாற்றுக்கள் மாற்றுருவங்கள்
செயல்கள்
வழிசெலுத்தல்
அச்சு/ஏற்றுமதி
கருவிப் பெட்டி
மற்ற மொழிகளில்