பட்டிருப்பு தேர்தல் தொகுதி

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.

பட்டிருப்பு தேர்தல் தொகுதி (Paddiruppu Electorate) என்பது ஆகத்து 1947 முதல் பெப்ரவரி 1989 வரை இலங்கையில் நடைமுறையில் இருந்த ஒரு-அங்கத்தவர் தேர்தல் தொகுதியாகும். இத்தேர்தல் தொகுதி இலங்கையின் கிழக்கு மாகாணத்தில், மட்டக்களப்பு மாவட்டத்தில் களுவாஞ்சிக்குடி நகரையும் அதைச் சுற்றியுள்ள ஊர்களையும் உள்ளடக்கியதாகும்.

1978 ஆம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்ட புதிய அரசியலமைப்பின் படி, இலங்கையில் விகிதாசாரப் பிரதிநிதித்துவத் தேர்தல் முறை அறிமுகப்படுத்தப்பட்டதை அடுத்து, நடைமுறையில் இருந்த 160 தேர்தல் தொகுதிகள் கலைக்கப்பட்டு பதிலாக 22 பல-அங்கத்தவர்களைக் கொண்ட தேர்தல் மாவட்டங்கள் உருவாக்கப்பட்டன[1]. இதற்கமைய, 1989 தேர்தலில் பட்டிருப்பு தேர்தல் தொகுதி மட்டக்களப்பு தேர்தல் மாவட்டத்தில் உள்ளடக்கப்பட்டது.

பட்டிருப்பு நாடாளுமன்ற உறுப்பினர்கள்[தொகு]

தேர்தல் உறுப்பினர் கட்சி காலம்
1947 சோ. உ. எதிர்மன்னசிங்கம் 1947-1952
1952 சி. மூ. இராசமாணிக்கம் சுயேட்சை 1952-1956
1956 சோ. உ. எதிர்மன்னசிங்கம் 1956-1960
1960 சி. மூ. இராசமாணிக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி 1960-1970
1960
1965
1970 சோ. தம்பிராஜா ஐக்கிய தேசியக் கட்சி 1970-1977
1977 பூ. கணேசலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி 1977-1989

தேர்தல்கள்[தொகு]

1947 நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

1வது நாடாளுமன்றத் தேர்தல் 1947 ஆகத்து 23 முதல் செப்டம்பர் 20 வரை நடைபெற்றது. முடிவுகள் வருமாறு[2]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சோ. உ. எதிர்மன்னசிங்கம் பறவை 5,672 37.63%
சி. மூ. இராசமாணிக்கம் சுயேட்சை கண்ணாடி 4,784 31.74%
வி. ஓ. குருகுலசிங்க கை 4,617 30.63%
செல்லுபடியான வாக்குகள் 15,073 100.00%
நிராகரிக்கப்பட்டவை 274
மொத்த வாக்குகள் 15,347
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 22,358
வாக்குவீதம் 68.64%

1952 நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

24 மே 1952 முதல் 30 மே 1952 வரை நடைபெற்ற 2வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[3]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சி. மூ. இராசமாணிக்கம் சுயேட்சை கண்ணாடி 7,672 39.92%
சோ. உ. எதிர்மன்னசிங்கம் பறவை 7,198 37.45%
கே. அருளம்பலம் விண்மீன் 4,350 22.63%
செல்லுபடியான வாக்குகள் 19,220 100.00%
நிராகரிக்கப்பட்டவை 198
மொத்த வாக்குகள் 19,418
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 23,440
வாக்குவீதம் 82.84%

1956 நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

5 ஏப்ரல் 1956 முதல் 10 ஏப்ரல் 1956 வரை நடந்த 3வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[4]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சோ. உ. எதிர்மன்னசிங்கம் விளக்கு 9,528 50.28%
சி. மூ. இராசமாணிக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 9,422 49.72%
செல்லுபடியான வாக்குகள் 18,950 100.00%
நிராகரிக்கப்பட்டவை 222
மொத்த வாக்குகள் 19,172
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,849
வாக்குவீதம் 74.17%

1960 (மார்ச்) நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

19 மார்ச் 1960 இல் நடைபெற்ற 4வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[5]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சி. மூ. இராசமாணிக்கம் சமட்டிக் கட்சி வீடு 10,799 62.36%
சோ. உ. எதிர்மன்னசிங்கம் கிண்ணம் 6,517 37.64%
செல்லுபடியான வாக்குகள் 17,316 100.00%
நிராகரிக்கப்பட்டவை 153
மொத்த வாக்குகள் 17,469
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 19,429
வாக்குவீதம் 89.91%

1960 (சூலை) நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

20 சூலை 1960 இல் நடைபெற்ற 5வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[6]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சி. மூ. இராசமாணிக்கம் சமட்டிக் கட்சி வீடு 10,948 66.44%
சோ. உ. எதிர்மன்னசிங்கம் அகில இலங்கைத் தமிழ்க் காங்கிரஸ் ஈருருளி 5,283 32.06%
ஈ. பொன்னையா ஏணி 247 1.50%
செல்லுபடியான வாக்குகள் 16,478 100.00%
நிராகரிக்கப்பட்டவை 98
மொத்த வாக்குகள் 16,576
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 19,429
வாக்குவீதம் 85.32%

1965 நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

22 மார்ச் 1965 இல் நடைபெற்ற 6வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[7]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சி. மூ. இராசமாணிக்கம் சமட்டிக் கட்சி வீடு 11,270 51.50%
சோ. உ. எதிர்மன்னசிங்கம் சுயேட்சை பறவை 9,140 41.77%
வி, சின்னத்துரை யானை 1,472 6.73%
செல்லுபடியான வாக்குகள் 21,882 100.00%
நிராகரிக்கப்பட்டவை 155
மொத்த வாக்குகள் 22,037
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 25,855
வாக்குவீதம் 85.23%

1970 நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

27 மே 1970 இல் நடைபெற்ற 7வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[8]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
சோ. தம்பிராஜா ஐக்கிய தேசியக் கட்சி யானை 13,370 51.24%
சி. மூ. இராசமாணிக்கம் இலங்கைத் தமிழரசுக் கட்சி வீடு 12,723 48.76%
செல்லுபடியான வாக்குகள் 26,093 100.00%
நிராகரிக்கப்பட்டவை 129
மொத்த வாக்குகள் 26,222
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 28,992
வாக்குவீதம் 90.45%

1977 நாடாளுமன்றத் தேர்தல்கள்[தொகு]

21 சூலை 1977 இல் நடைபெற்ற 8வது நாடாளுமன்றத் தேர்தல் முடிவுகள்[9]:

வேட்பாளர் கட்சி சின்னம் வாக்குகள் %
பூ. கணேசலிங்கம் தமிழர் விடுதலைக் கூட்டணி சூரியன் 15,877 49.17%
எஸ். சிவகுருநாதன் லங்கா சமசமாஜக் கட்சி சாவி 5,633 17.45%
சோ. தம்பிராஜா கை 5,590 17.31%
பி. இரத்தினசிங்கம் யானை 5,189 16.07%
செல்லுபடியான வாக்குகள் 32,289 100.00%
நிராகரிக்கப்பட்டவை 243
மொத்த வாக்குகள் 32,532
பதிவு செய்யப்பட்ட வாக்காளர்கள் 35,909
வாக்குவீதம் 90.60%

இலங்கைத் தமிழ்ப் போராளிகளின் அழுத்தத்தாலும், தமிழ் ஈழத்துக்கு ஆதரவளிப்பதில்லை என நாடாளுமன்றத்தில் சத்தியப்பிரமாணம் எடுப்பதற்கான ஆறாம் திருத்தச் சட்டமூலத்துக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், கருப்பு சூலை வன்முறைகளில் சிங்கள காடையர்களினால் 3,000 தமிழ் மக்கள் கொல்லப்பட்டமைக்கு எதிர்ப்புத் தெரிவித்தும், அனைத்து தமிழர் விடுதலைக் கூட்டணி உறுப்பினர்களும் 1983 முதல் நாடாளுமன்றத்தை ஒன்றியொதுக்கல் செய்தார்கள். மூன்று மாதங்கள் நாடாளுமன்றத்துக்குச் சமூகமளிக்காத நிலையில், 1983 அக்டோபர் 22 இல் பூ. கணேசலிங்கம் பட்டிருப்புத் தொகுதிக்கான நாடாளுமன்ற இருக்கையை இழந்தார்[10].

இவற்றையும் பார்க்க[தொகு]

மேற்கோள்களும் குறிப்புகளும்[தொகு]

  1. "The Electoral System". இலங்கை நாடாளுமன்றம்.
  2. "Result of Parliamentary General Election 1947" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  3. "Result of Parliamentary General Election 1952" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  4. "Result of Parliamentary General Election 1956" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  5. "Result of Parliamentary General Election 1960-03-19" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  6. "Result of Parliamentary General Election 1960-07-20" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-09-24. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  7. "Result of Parliamentary General Election 1965" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2015-07-13. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  8. "Result of Parliamentary General Election 1970" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2009-12-09. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  9. "Result of Parliamentary General Election 1977" (PDF). இலங்கைத் தேர்தல் திணைக்களம். Archived from the original (PDF) on 2011-07-17. பார்க்கப்பட்ட நாள் 2013-08-09.
  10. Wickramasinghe, Wimal (18 சனவரி 2008). "Saga of crossovers, expulsions and resignations etc. Referendum for extention of Parliament". ஐலண்ட் இம் மூலத்தில் இருந்து 2011-06-17 அன்று. பரணிடப்பட்டது.. https://web.archive.org/web/20110617063609/http://www.island.lk/2008/01/18/features11.html.