மாத்தளை தேர்தல் மாவட்டம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
மாத்தளை
இலங்கைத் தேர்தல் மாவட்டம்
மாகாணம் மத்திய மாகாணம், இலங்கை
நிருவாக
மாவட்டங்கள்
மாத்தளை
தேர்தல்
தொகுதிகள்
4
வாக்காளர்கள் 342,684[1] (2010)
மக்கள்தொகை 483,000[2] (2008)
பரப்பளவு 1,993 கிமீ2[3]
உறுப்பினர்களின்
எண்ணிக்கை
5
உறுப்பினர்கள் வசந்த அலுவிகாரை, ஐதேமு
ரோகண திசாநாயக்க, ஐமசுகூ
நந்திமித்ர ஏக்கநாயக்க, ஐமசுகூ
லக்சுமன் பெரேரா, ஐமசுகூ
ஜானக பண்டார தென்னக்கூன், ஐமசுகூ

மாத்தளை தேர்தல் மாவட்டம் (Matale electoral district) எனப்படுவது இலங்கையின் 1978 அரசியலமைப்பின் படி அமைக்கப்பட்ட 22 தேர்தல் மாவட்டங்களில் ஒன்றாகும். இலங்கை நாடாளுமன்றம், மாகாணசபைகள் போன்றவற்றுக்கு உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக உருவாக்கப்பட்ட ஒரு புவியியல் அலகு. இத்தேர்தல் மாவட்டம் மத்திய மாகாணத்தின் மாத்தளை நிருவாக மாவட்டத்தை மட்டும் உள்ளடக்கிய அலகாகும். 225 இருக்கைகள் கொண்ட இலங்கை நாடாளுமன்றத்திற்கு இத்தேர்தல் மாவட்டத்தில் இருந்து 5 உறுப்பினர்கள் தெரிவு செய்யப்படுகின்றனர். இம்மாவட்டத்தில் 2010 ஆம் ஆண்டில் 342,684 பேர் வாக்களிக்கத் தகுதி பெற்றனர்.[1]

தேர்தல் தொகுதிகள்[தொகு]

மாத்தளை தேர்தல் மாவட்டத்தில் அமைந்துள்ள தேர்தல் தொகுதிகள் பின்வருமாறு:

  1. தம்புள்ளை தேர்தல் தொகுதி
  2. லக்கல தேர்தல் தொகுதி
  3. மாத்தளை தேர்தல் தொகுதி
  4. இரத்தோட்டை தேர்தல் தொகுதி

மேற்கோள்கள்[தொகு]

  1. 1.0 1.1 "Presidential Election - 2010 Badulla District". இலங்கைத் தேர்தல் திணைக்களம்.
  2. "Estimated mid year population by district, 2004 – 2008". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.
  3. "Area of Sri Lanka by province and district". Statistical Abstract 2009. Department of Census and Statistics, Sri Lanka.