சேலம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
சேலம்
—  நகரம்  —
சேலம்
இருப்பிடம்: சேலம்
, தமிழ் நாடு , இந்தியா
அமைவிடம் 11°39′N 78°10′E / 11.65, 78.16அமைவு: 11°39′N 78°10′E / 11.65, 78.16
நாடு இந்தியாவின் கொடி இந்தியா
மாநிலம் தமிழ் நாடு
மாவட்டம் சேலம்
ஆளுநர் கொனியேட்டி ரோசையா
முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா
நகராட்சித் தந்தை சவுண்டப்பன்
மக்கள் தொகை

அடர்த்தி

6,97,061 (2001)

7,631 /km2 (19 /sq mi)

நேர வலயம் IST (ஒ.ச.நே.+5:30)
பரப்பளவு

உயரம்

91.34 சதுர கி.மீட்டர்கள்s (35.27 சதுர மைல்)

278 மீட்டர்s (912 அடி)

இணையதளம் www.salemcorporation.gov.in

சேலம் (ஆங்கிலம்:Salem), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள சேலம் மாவட்டத்தில் இருக்கும் ஒரு மாநகராட்சி ஆகும். தமிழகத்தின் 5வது பெரிய நகரான சேலம் தமிழகத்தின் வட மத்திய பகுதியில் அமைந்துள்ளது. சைலம் என்ற சொல்லிற்கு மலைகளால் சூழ்ந்த வாழிடம் என்பது பொருள். இந்த சைலம் என்பதே திரிந்து, சேலம் ஆனது. கொங்கு மண்டலத்தின் கிழக்கு எல்லையில் அமைந்துள்ள சேலம் ஒரு வணிக நடுவம் ஆகும். சேலம் மல்கோவா வகை, மாம்பழத்திற்கு பெயர் பெற்ற இடம். இதனால் இதனை "மாங்கனி நகரம்" என்றும் அழைப்பார்கள்.

புவியியல்[தொகு]

இவ்வூரின் அமைவிடம் 11.65° N 78.17° E ஆகும்.[1] கடல் மட்டத்தில் இருந்து இவ்வூர் சராசரியாக 278 மீட்டர் (912 அடி) உயரத்தில் இருக்கின்றது. சேர்வராயன் மலைத்தொடரில் உற்பத்தியாகும் திருமணிமுத்தாறு சேலம் நகரின் ஊடாக செல்கிறது. சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. நாம மலை, ஊத்து மலை, கஞ்ச மலை, சாமியார் குன்று ஆகியவை சேலத்தை சுற்றி அமைந்த சில மலைகள்.

ஏற்காட்டிலிருந்து தெரியும் இரவில் ஒளிரும் சேலம்
சேலம்

மக்கள் வகைப்பாடு[தொகு]

"இந்திய 2001 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி 693,236 மக்கள் இங்கு வசிக்கின்றார்கள்.[2] இவர்களில் 51% ஆண்கள், 49% பெண்கள் ஆவார்கள். சேலம் மக்களின் சராசரி கல்வியறிவு 71% ஆகும், இதில் ஆண்களின் கல்வியறிவு 76%, பெண்களின் கல்வியறிவு 65% ஆகும். இது இந்திய தேசிய சராசரி கல்வியறிவான 59.5% விட கூடியதே. சேலம் மக்கள் தொகையில் 10% ஆறு வயதுக்குட்பட்டோர் ஆவார்கள். சேலத்தின் மக்கள் தொகையில் குறிப்பிடத் தக்க அளவு கன்னடம் பேசும் மாத்வா மற்றும் தேவாங்கர் இன மக்களும், சௌராஷ்டிர மொழி பேசுவோரும் உள்ளனர்."

வரலாறு[தொகு]

சேலம் என்ற சொல் 'சைலம்' மற்றும் 'ஷைல்ய' என்னும் சொல்லில் இருந்து பிறந்ததாக கூறப்படுகிறது. 'சேலம்' என்றால் 'மலைகள் சூழ்ந்த இடம்' என்று பொருள்.

இவ்வூரில் உள்ள மலையைச் சேரன் ஆண்டதால் சேர்வராயன் மலை ஆயிற்று; அது போலச் 'சேரலம்' என்பது 'சேலம்' ஆயிற்று என்றும் கூறுவர். ஏத்தாப்பூர் செப்பேடு இவ்வூரைச் "சாலிய சேரமண்டலம்" எனக் குறிப்பிடுகிறது. எனவே, சேரலம் என்னும் பெயரே காலப்போக்கில் திரிந்து சேலம் என வழங்கப்பட்டது.

சேலம் மற்றும் கோவைப் பகுதிகள் நீண்ட காலம் மதுரை நாயக்கர்களின் கட்டுப்பாடில் இருந்தது. பிற்பாடு 1768 இல் மதுரை-மைசூர் போரில் சேலம் ஹைதர் அலி கட்டுப்பாட்டுக்கு சென்றது. பின்பு 1799 இல் லார்டு க்லைவ் கைப்பற்றி சங்ககிரி துர்கத்தை தலைமை இடமாக கொண்டு வெள்ளையர்கள் அரசாங்கம் சார்பில் நிர்வாகம் நடந்தது. ஆங்கிலேயர்களின் இராணுவ படைத்தளமாக சேலம் விளங்கிற்று. அவர்கள் கட்டிய கோட்டை இங்குள்ளது, கோட்டைப்பகுதி தற்போது நகரின் மைய பகுதியாக உள்ளது.

நகரச் சிறப்புகள்[தொகு]

 • சி.வி. ராஜகோபாலசாரியார், சி. விஜயராகவாச்சாரி, ராமசாமி உடையார் ஆகியோர் இம்மாநகரத்தை சேர்ந்தவர்கள்.
 • 1937ல் சேலம் மாவட்டத்தில் தான் முதன் முதலில் மதுவிலக்கு அமுலுக்கு வந்தது.
 • பொதுவாக மாம்பழத்துக்கு பெயர் போன நகரம் என்பதால் இங்கு அதுவும் பிரசித்தி.

பொருளாதாரம்[தொகு]

 • சேலம் பல்வேறு கனிமவளங்கள் நிறைந்த இடம். இங்கு கிடைக்கும் இரும்பு தாதுவை பயன்படுத்தி இந்திய நடுவன் அரசின் செயில் (SAIL) நிறுவனம் சேலம் இரும்பாலையை அமைத்துள்ளது, இது தமிழ்நாட்டின் ஒரே உருக்கு ஆலை ஆகும்.
 • இந்தியாவில் மாக்னசைட் தாது பெருமளவு கிடைக்கும் இடங்களில் சேலமும் ஒன்று. டால்மியா & தமிழக அரசின் டான்மாங் (TANMAG - TAMILNADU MAGNESITE LIMITED) நிறுவனங்கள் மாக்னசைட் சுரங்கங்களை இங்கு அமைத்துள்ளன.
சேலம் உருக்காலை
 • அதிக அளவில் வெள்ளி ஆபரணங்கள் செய்யும் தொழில் இங்கு நடைபெறுகிறது.
 • இது தவிர நூற்பாலை, வாகன உதிரிபாக ஆலை, சேகோ (சவ்வரிசி) ஆலை ஆகியவையும் உள்ளன.
 • இந்த மாவத்த்தில் கோழிப் பண்ணைகளும் அதிக அளவில் உள்ளன.
 • இங்கு உள்ள லீ-பஜார், மஞ்சள், கடலை, தேங்காய், அரிசி போன்ற வேளாண்மை சார்ந்த சந்தைக்குப் பெயர் பெற்றது.
 • விரைவில் இங்கு ஒரு தகவல் தொழில் நுட்ப பூங்கா அமையவிருக்கிறது.
 • சேர்வராயன் மலைத்தொடரில் அமைந்துள்ள ஏழைகளின் ஊட்டி எனப்படும் ஏற்காடு சேலத்திலிருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது.
ஏற்காட்டிலிருந்து தெரியும் டான்மாங் மாக்னசைட் சுரங்கம்

ஆன்மீக தலங்கள்[தொகு]

சேலம் மற்றும் அதன் சுற்று வட்டார பகுதிகளில் அதிக அளவில் கோவில்களை காணலாம். இங்கு உள்ள முக்கிய கோயில்கள் சில,

ஆடி மாதத்தில் சேலம் கோட்டை மாரியம்மன் கோவில் திருவிழா நடக்கும் அதே சமயத்தில் சேலம் செவ்வாய்ப் பேட்டை மாரியம்மன் கோவிலின் திருவிழாவும், சேலம் அன்னதானப்பட்டி மாரியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் குகை மாரியம்மன் காளியம்மன் கோவில் திருவிழாவும், சேலம் அம்மாப்பேட்டை மாரியம்மன் கோவில் திருவிழாவும் நடக்கும்.

 • கந்தாஸ்ரமம்
 • சித்தர் கோவில்- இது சித்தர்கள் கட்டிய கோவில் என்றும், இந்த கோவில் அமைந்து உள்ள கஞ்சமலையில் சித்தர்கள் இன்றும் வசிப்பதாக இப்பகுதி மக்கள் நம்புகிறார்கள்.இங்கு ஊற்றுகளில் இருந்து வரும் தண்ணீரை உட் கொண்டால் பல நோய்கள் குணமாவதாக மக்கள் நம்புகின்றனர்
 • ஊத்துமலை - சேலத்தில் உள்ள ஆன்மீக தளங்களில் இதுவும் ஒன்று. இது சேலம் மாநகரத்தின் தெற்கு பகுதியில் அமைந்து உள்ளது. இங்கு அமைந்துள்ள முருகன் கோவில் புகழ் பெற்றது. மேலும் இங்கு சிவபெருமான், பெருமாள் மற்றும் சௌடேஸ்வரி அம்மன் கோவில்களும் அமைந்துள்ளன. இங்குள்ள கிணறுகள் எவ்வளவு நீர் இறைத்தாலும் வற்றாதவை.
 • குமரகிரி

கல்வி[தொகு]

கடந்த சில ஆண்டுகளாக சேலம் மற்றும் அதன் சுற்று வட்டாரங்களில் பெருமளவில் கல்வி நிறுவனங்கள் வளர்ந்து உள்ளது. பெரியார் பல்கலைக்கழகம் இங்கு அமைந்துள்ளது. சேலம், நாமக்கல், தர்மபுரி, கிருஷ்ணகிரி மாவட்ட கல்லூரிகள் இப் பல்கலைகழகத்தின் கட்டுப்பாட்டுக்குள் வருகின்றன. 2 மருத்துவ கல்லூரிகள் இங்கு உள்ளன. அரசு பொறியியல் கல்லூரி இங்குள்ளது. அனைத்து துறை சார்ந்த கல்லூரிகளும் இந்த பகுதியில் பெருமளவு அமைந்துள்ளது. தரமான பள்ளிகளும் பெருமளவில் உள்ளன. [[படிமம்:Admingce.JPG|right|thump|250px|அரசினர் பொறியியல் கல்லூரி]


valappady

போக்குவரத்து[தொகு]

சாலை[தொகு]

சேலம் மாநகரம் சாலை போக்குவரத்தின் முக்கிய சந்திப்பு ஆகும். மூன்று முக்கிய தேசிய நெடுஞ்சாலைகள் இங்கு கடக்கின்றன.

ஆகையால் சென்னை, கோவை, பெங்களூர், மதுரை, திருச்சி, கொச்சி, பாண்டிச்சேரி ஆகிய ஊர்களுக்கு இடையே ஆன போக்குவரத்துக்கு இது ஒரு முக்கிய சந்திப்பாகும்.

தொடருந்து[தொகு]

சேலத்தில் மூன்று தொடருந்து நிலையங்கள் உள்ளன. அவை சேலம் டவுன், சேலம் மார்க்கெட், சேலம்சந்திப்பு ஆகும். சேலம் டவுன் என்ற தொடருந்து நிறுத்தம், சேலம் மாவட்டத்தின் கிழக்கு வட்ட மக்களுக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் மார்க்கெட் என்ற தொடருந்து நிறுத்தம், இந்தியாவின் வெளிமாநில சரக்குப் போக்குவரத்துக்கு பெரிதும் பயனாகிறது. சேலம் சந்திப்பானது சென்னை-கோவை, மற்றும் கேரள மாநிலம் செல்லும் அனைத்து ரெயில்களின் முக்கிய சந்திப்பு. 2007 ஆம் ஆண்டு முதல் சேலத்தை தலைமை இடமாக கொண்டு தனி இரயில்வே கோட்டம் செயல்பட தொடங்கியுள்ளது. பாலக்காடு கோட்டத்தில் இருந்த தமிழக ரயில்வே பகுதிகள் இப்பொழுது சேலம் ரயில்வே கோட்டத்தில் சேர்க்கப் பட்டுள்ளது.

விமானம் நிலையம்[தொகு]

சேலம் கமலாபுரத்தில் ஒரு விமானநிலையம் 1993 இல் அமைக்கபட்டது.

இவற்றையும் பார்க்கவும்[தொகு]

வெளி இணைப்புகள்[தொகு]

ஆதாரங்கள்[தொகு]

 1. "Salem". Falling Rain Genomics, Inc. பார்த்த நாள் ஜனவரி 30, 2007.
 2. "2001-ம் ஆண்டிற்கான இந்திய மக்கள்தொகைக் கணக்கெடுப்பு அறிக்கை". பார்த்த நாள் ஜனவரி 30, 2007.


"http://ta.wikipedia.org/w/index.php?title=சேலம்&oldid=1653071" இருந்து மீள்விக்கப்பட்டது