கோபிச்செட்டிப்பாளையம்

கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தாவிச் செல்லவும்: வழிசெலுத்தல், தேடல்
கோபிசெட்டிப்பாளையம்
நகரம்
Nickname(s): சின்ன கோடம்பாக்கம் (மினி கோலிவுட்)
கோபிசெட்டிப்பாளையம் is located in தமிழ்நாடு
கோபிசெட்டிப்பாளையம்
கோபிசெட்டிப்பாளையம்
ஆள்கூறுகள்: 11°27′13″N 77°26′18″E / 11.45361°N 77.43833°E / 11.45361; 77.43833ஆள்கூறுகள்: 11°27′13″N 77°26′18″E / 11.45361°N 77.43833°E / 11.45361; 77.43833
நாடு இந்தியா
மாநிலம் தமிழ்நாடு
பகுதி கொங்கு நாடு
மாவட்டம் ஈரோடு மாவட்டம்
நகராட்சி நிறுவப்பட்டது 1948
ஆட்சி
 • குழு கோபிசெட்டிபாளையம் நகராட்சி
 • நகராட்சி தலைவர் ரேவதி தேவி
 • சட்டமன்ற உறுப்பினர் கே. ஏ. செங்கோட்டையன்
 • பாராளுமன்ற உறுப்பினர் வா. சத்தியபாமா
Elevation 213
மக்கள் (2011)
 • மொத்தம் 60,279
மொழிகள்
 • அதிகாரபூர்வம் தமிழ்
நேர வலயம் இந்திய சீர் நேரம் (ஒசநே+5:30)
அஞ்சல் சுட்டு எண் 6384xx
தொலைபேசி குறியீடு 91(04285)
வாகனக் குறியீடு த.நா. 36
எழுத்தறிவு 74%
பாராளுமன்ற உறுப்பினர் திருப்பூர்
சட்டமன்ற தொகுதி கோபிச்செட்டிப்பாளையம்
இணையத்தளம் கோபி நகராட்சி

கோபிசெட்டிப்பாளையம் (ஆங்கிலம்:Gobichettipalayam), (கோபி என்று அழைக்கப்படும்) இந்தியா நாட்டில் தமிழ்நாடு மாநிலத்தில் ஒரு முக்கிய நகரம் மற்றும் நகராட்சி ஆகும். இந்த நகரம் ஈரோடு மாவட்டத்தில் ஒரு தாலுகாவின் தலைமையகம் ஆகும். இது கடல் மட்டத்தில் இருந்து 213 மீட்டர் உயரத்தில், மாவட்ட தலைமையகம் ஈரோட்டில் இருந்து சுமார் 35 கிலோ மீட்டர் தொலைவில் உள்ளது. கோபிசெட்டிபாளையம் 'சின்ன கோடம்பாக்கம்' அல்லது 'மினி கோலிவுட்' என்று அழைக்க படுகிறது, ஏனெனில் இங்கு படப்பிடிப்பு அதிகமாக நடைபெறும் என்று அறியப்படுகிறது.

வரலாறு[தொகு]

தற்போது உள்ள கோபிசெட்டிபாளையம் முன்னர் ஒரு முக்கிய பகுதியாக வீரபாண்டி கிராமம் என்று அழைக்க பட்டது. அரசு ஆவணங்கள் மற்றும் பதிவேடுகள் இன்னும் அந்த பெயரையே பயன்படுத்தகின்றன.[1]

இந்த நகரம் கோபிசெட்டி புல்லான் என்ற பழைய அறிஞர் பெயரால் கோபிசெட்டிபாளையம் என பெயரிடப்பட்டது. இந்த இடம் முன்னர் கடை எழு வள்ளல்களில் ஒருவரான பாரி மன்னர் ஆட்சி நாட்டின் ஒரு பகுதியாக இருந்தது. பின்னர் சேர மன்னர்களால் கை பற்றபட்டு ஆட்சி செய பட்டது. அதன் பிறகு திப்பு சுல்தான் இந்த ஊரை தனதாக்கி கொண்டான்.[2] முடிவில் ஆங்கிலேயர்கள் கைப்பற்றி கொண்டனர். [3]

புவியியல் மற்றும் காலநிலை[தொகு]

கோபிசெட்டிபாளையம் தமிழ்நாட்டின் வடமேற்கு பகுதியான கொங்கு நாட்டில் அமைந்துள்ளது. சென்னை சுமார் 390 கி.மீ தொலைவில் உள்ளது. மேற்கு தொடர்ச்சி மலை சூழ்ந்து, பவானி ஆற்று கரையில் அமைந்துள்ளது. இங்கு வெப்பநிலை சூடாக இருக்கும். கோடை மாதங்களில் தவிர, மற்ற மாதங்களில் மிதமான வெப்பமும், அதிக மழையளவும் கொண்டு இருக்கும்.[4]

நகராட்சி[தொகு]

கோபிசெட்டிபாளையம் நகராட்சி, தமிழ்நாடு அரசு கணக்கெடுப்பின் படி 60,279 ஜனத்தொகை கொண்டுள்ளது. இதில் ஆண்கள் 51% மற்றும் பெண்கள் 49% ஆவார்கள்". 2011 மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி 74% எழுத்தறிவு விகிதம் உள்ளது: ஆண் எழுத்தறிவு விகிதம் 80%, பெண்களின் கல்வியறிவு 68% ஆகும்." கொங்கு வேளாளர் சமூக மக்கள் அதிகமாக இங்கு வாழ்கிறார்கள்.[5]

நகராட்சி அதிகாரப்பூர்வ முத்திரை

கலாச்சாரம்[தொகு]

கொங்கு தமிழ், தமிழ் மொழியின் ஒரு கிளை ஆகும். இதுவே பெரும்பான்மை மக்களின் பேச்சு மொழி. ஆங்கிலமும் தமிழும் சேர்த்து ஒரு உத்தியோகபூர்வ மொழியாக பயன்படுத்தப்படுகிறது. மலையாளம், கன்னடம் மற்றும் தெலுங்கு மொழிகளும் பேசப்படுகின்றன. உணவு பெரும்பாலும் தென் இந்திய அடிப்படையில் அரிசி சார்ந்தது ஆகும்.

பொருளாதாரம்[தொகு]

நகரம் விரைவாக தொழில் வளர்ச்சி அடைந்து வருகிறது. விவசாயத்தில் ஈடுபட்டுள்ள மக்கள் 31%, வர்த்தக மற்றும் ஏனைய நடவடிக்கைகளில் 56% மற்றும் 13% "இரு செயல்பாடு" என்று அரசாங்கம் விவரிக்கிறது.

நெல் வயல்கள்
கொடிவேரி அணை
அருள்மிகு கொண்டத்து காளியம்மன் திருக்கோயில், பாரியூர்
அருள்மிகு கொண்டத்து காளியம்மன்

விவசாயம் பொருளாதார வளசிக்கு பெரும் பங்காற்றுகிறது. நெல். கரும்பு, வாழை, புகையிலை மற்றும் மஞ்சள் முக்கிய பயிர்கள் ஆகும். வெண் பட்டு மற்றும் தறி உற்பத்தியிலும் பெரும் பங்கு வகிக்கின்றது.

ஊடக மற்றும் தகவல் தொடர்பு[தொகு]

நான்கு முக்கிய ஆங்கில மொழி செய்தித்தாள்கள் தி இந்து, தி டைம்ஸ் ஆப் இந்தியா, டெக்கான் குரோனிக்கிள் மற்றும் நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ் நகரில் கிடைகின்றன. தமிழ் செய்தித்தாள்கள் தினமலர், தினதந்தி, தினமணி, தினகரன் (அனைத்து காலை செய்தித்தாள்கள்) மற்றும் தமிழ் முரசு மற்றும் மாலை மலர் (இரண்டும் மாலை செய்தித்தாள்கள்) ஆகியவன அடங்கும். ஒரு நடுத்தர அலை இயக்கப்படும் வானொலி நிலையம் ஆல் இந்தியா ரேடியோ மற்றும் ஐந்து பண்பலை வானொலி நிலையங்களின் சேவை இங்கு உள்ளது. அனைத்து முக்கிய கைபேசி சேவை வழங்குநர்களும் இங்கு சேவை வழங்குகின்றனர்.

சுகாதாரம்[தொகு]

நகரில் அரசு மருத்துவமனை தவிர பல முக்கிய மருத்துவமனைகள் உள்ளன.

அரசியல்[தொகு]

கோபிச்செட்டிபாளையம் 2008 வரை ஒரு பாராளுமன்ற தொகுதியாக இருந்தது. இப்பொது திருப்பூர் தொகுதியின் ஒரு பாகமாக இருக்கின்றது.

கல்வி[தொகு]

கோபிச்செட்டிபாளையம் ஒரு நல்ல கல்வி உள்கட்டமைப்பு உள்ள நகரமாக விளங்குகிறது. இது ஒவ்வொரு ஆண்டும், மாநிலத்தில் உள்ள மருத்துவ கல்லூரிகளுக்கு இரண்டாவது மிக உயர்ந்த அளவில் மாணவர்களை அனுப்புகிறது. தரமான கல்வி வழங்கும் பள்ளிகள் உள்ளன.

போக்குவரத்து[தொகு]

கோபிச்செட்டிபாளையம் நகராட்சி சாலைகள் மொத்தம் 67.604 கி.மீ. நீளம் ஆகும். மாநில நெடுஞ்சாலைகள் இவற்றில் 6.6 கிமீ உள்ளது. தமிழ்நாடு மாநில போக்குவரத்து கழகம் சார்பில் ஒரு பெரிய மத்திய பேருந்து நிலையம் இயக்கபடுகிறது. அருகில் உள்ள ரயில் நிலையம் ஈரோடு சந்திப்பு ஆகும். இது 38 கிமீ தொலைவில் அமைந்து உள்ள ஒரு பெரிய ரயில் நிலையம் ஆகும். அருகில் உள்ள விமான நிலையம் 74 கிமீ தொலைவில் இருக்கும் கோயம்புத்தூர் சர்வதேச விமான நிலையம் ஆகும்.

சுற்றுலா இடங்கள்[தொகு]

கொடிவேரி அணை கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 13 கி.மீ. தொலைவில் அமைந்துள்ளது. பவானி ஆறு மேல் உள்ள பவானிசாகர் அணை மற்றொரு முக்கிய அணை ஆகும். இது கோபிசெட்டிபாளையத்தில் இருந்து 35 கிமீ தொலைவில் அமைந்துள்ளது. சத்தி வனவிலங்கு சரணாலயம் மற்றும் பாதுகாக்கப்பட்ட காடுகள் சுமார் 25 கிமீ தொலைவில் உள்ளது.

இங்கு உள்ள பல முக்கிய கோவில்களில் சிறப்பானது, பாரியூரில் அமைந்துள்ள அருள்மிகு கொண்டத்து காளியம்மன் கோவில் ஆகும். இங்கு மார்கழி மாதத்தில் குண்டம் மற்றும் தேர் திருவிழா சிறப்பாக நடைபெறும். மேலும் வெள்ளை பளிங்கு கற்களால் கட்டப்பட்ட அமரபணீஸ்வரர் திருக்கோயில், ஆதி நாராயண பெருமாள் திருக்கோயில் மற்றும் முருக பெருமான் கோவில்களான பச்சை மலை மற்றும் பவள மலை விசேஷம் வாய்ந்தவை.

ஆதாரங்கள்[தொகு]

  1. "District Profile". Gobichettipalayam.com. பார்த்த நாள் 26 February 2012.
  2. Baliga, B. S. (1967). Madras District Gazetteers: Salem. by Ramaswami, A. Madras State, Printed by the Superintendent, Govt. Press. p. 64. http://books.google.com/books?id=RRxuAAAAMAAJ. பார்த்த நாள்: 26 February 2012. 
  3. Rana, Mahendra Singh (1 January 2006). India votes: Lok Sabha & Vidhan Sabha elections 2001-2005. Sarup & Sons. p. 399. ISBN 978-81-7625-647-6. http://books.google.com/books?id=yInZdHn-pKoC&pg=PA399. பார்த்த நாள்: 26 February 2012. 
  4. http://municipality.tn.gov.in/gobi/
  5. http://municipality.tn.gov.in/gobi/