கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
தினமலர் இந்தியாவின் தமிழகத்திலிருந்து வெளிவரும் தமிழ் நாளிதழ்களில் ஒன்றாகும். இந்நாளிதழ் டி.வி.இராமசுப்பையர் என்பவரால் 1951 ஆம் ஆண்டு செப்டம்பர் 6 ஆம் நாள் தொடங்கப்பட்டது.
சென்னை, புதுச்சேரி, வேலூர், கோவை, சேலம், ஈரோடு, திருச்சி, மதுரை, நெல்லை, நாகர்கோயில் ஆகிய இடங்களில் இதன் பதிப்புகள் வெளிவருகின்றன.
[தொகு] வரலாறு
| தேதி |
நிகழ்வு |
| செப்டம்பர் 9, 1951 |
தினமலர் தொடக்கம். திருவனந்தபுரத்தில் முதல் பதிப்பு. |
| ஏப்ரல் 16, 1957 |
திருவனந்தபுரத்திலிருந்து நெல்லைக்கு பதிப்பு மாற்றம் |
| டிசம்பர் 15, 1966 |
திருச்சி பதிப்பு தொடக்கம் |
| ஏப்ரல் 29, 1979 |
சென்னை பதிப்பு தொடக்கம். |
| டிசம்பர் 26, 1980 |
மதுரை பதிப்பு தொடக்கம் |
| ஏப்ரல் 4, 1982 |
வாரமலர் தொடக்கம் |
| மார்ச் 16, 1984 |
ஈரோடு பதிப்பு தொடக்கம் |
| நவம்பர் 22, 1985 |
சிறுவர்மலர் தொடக்கம் |
| அக்டோபர் 19, 1988 |
கதைமலர் தொடக்கம் |
| ஏப்ரல் 15, 1991 |
புதுச்சேரி பதிப்பு தொடக்கம் |
| டிசம்பர் 23, 1992 |
கோவை பதிப்பு தொடக்கம் |
| டிசம்பர் 13, 1993 |
வேலூர் பதிப்பு தொடக்கம் |
| ஜனவரி 13, 1994 |
வேலைவாய்ப்புக் கல்விமலர் தொடக்கம் |
[1]
[தொகு] மொபைல் நாளிதழ்
தினமலர் மொபைல் நாளிதழ் என்பது தினமலர் நாளிதழ் வழங்கும் நகர்பேசி சேவையாகும். கடந்த 2009 ஆம் ஆண்டு இச்சேவை துவங்கப்பட்டது. . இந்த சேவையை பெறுவதற்கு ஜி.பி.ஆர்.எஸ்., வசதி உடைய நகர்பேசி தேவை. இந்த சேவையை நியூஸ்ஹன்ட் என்ற நிறுவனத்துடன் இணைந்து தினமலர் வழங்குகிறது .
[தொகு] செய்தி பிரிவுகள்
- முக்கியச் செய்திகள்
- அரசியல்
- பொது
- சம்பவம்
- 'இதபடிங்க முதல்ல'
- சினிமா
- கிரிக்கெட் லைவ்
- தங்கம் வெள்ளி நிலவரம்
- வாரமலர்
- கேலரி உள்ளிட்ட பகுப்புகள்.
[தொகு] தகவல் மூலம்
- ↑ கடல் தாமரை (புத்தகம்) - தி.முத்துகிருஷ்ணன். முதல் வெளியீடு - 1996. வெளியீடு - தினமலர், சென்னை
[தொகு] வெளி இணைப்புக்கள்