டிசம்பர் 13
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | டிசம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | 31 | ||||
| MMXIII | ||||||
டிசம்பர் 13 கிரிகோரியன் ஆண்டின் 347வது நாளாகும். நெட்டாண்டுகளில் 348வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 18 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1577 - சேர் பிரான்சிஸ் டிரேக் இங்கிலாந்தின் பிளைமவுத்தில் இருந்து தனது உலகத்தைச் சுற்றிவரும் பயணத்தை ஆரம்பித்தார்.
- 1642 - ஏபெல் டாஸ்மான் நியூசிலாந்தை அடைந்தார்.
- 1888 - யாழ்ப்பாணத்தில் இடம்பெற்ற சூறாவளியில் பலத்த சேதம் ஏற்பட்டது.
- 1937 - சீனாவின் நான்ஜிங் நகரம் ஜப்பானியரிடம் வீழ்ந்ததை அடுத்து அங்கு பல பொதுமக்கள் கொல்லப்பட்டும் பாலியல் வதைக்கும் உள்ளாக்கப்பட்டனர்.
- 1941 - இரண்டாம் உலகப் போர்: ஹங்கேரி, ருமேனியா ஆகியன ஐக்கிய அமெரிக்கா மீது போரை அறிவித்தன.
- 1943 - இரண்டாம் உலகப் போர்: ஐக்கிய அமெரிக்காவின் 710 போர் விமானங்கள் ஜெர்மனியின் "கீல் நகர் மீது தாக்குதலை நடத்தின.
- 1949 - இஸ்ரேலின் சட்டசபை நாட்டின் தலைநகரை ஜெருசலேம் நகருக்கு மாற்ற முடிவெடுத்தது.
- 1959 - மக்காரியோஸ் சைப்பிரசின் முதலாவது ஜனாதிபதியானார்.
- 1972 - அப்பல்லோ 17 விண்வெளி வீரர்கள் யூஜீன் செர்னன், ஹரிசன் ஸ்மித் ஆகியோர் சந்திரனில் இறங்கினர். 20ம் நூற்றாண்டில் சந்திரனில் இறங்கிய கடைசி மனிதர்கள் இவர்களே.
- 1974 - மோல்ட்டா குடியரசானது.
- 1981 - போலந்தில் இராணுவ ஆட்சி ஏற்படுத்தப்பட்டது.
- 1996 - ஐக்கிய நாடுகள் சபையின் பொதுச் செயலாளராக கோஃபி அன்னான் தெரிவு செய்யப்பட்டார்.
- 2001 - இந்திய நாடாளுமன்றத்தில் இடம்பெற்ற தீவிரவாதிகளின் தாக்குதலில் தீவிரவாதிகள் உட்பட 15 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - முன்னாள் ஈராக் அரசுத் தலைவர் சதாம் உசேன் அவரது சொந்த ஊரான திக்ரித்துக்கு அருகே அமெரிக்கப் படையினரால் கைது செய்யப்பட்டார்.
- 2004 - முன்னாள் சிலி சர்வாதிகாரி ஆகுஸ்டோ பினோச்சே வீட்டுக் காவலில் வைக்கப்பட்டார்.
- 2006 - பாய்ஜீ என்ற சீன ஆற்று டால்ஃபின் அருகிய இனமாக அறிவிக்கப்பட்டது.
பிறப்புக்கள் [தொகு]
- 1926 - செ. குப்புசாமி தொழிற்சங்கத் தலைவர் (இ). 2013
இறப்புகள் [தொகு]
- 1557 - டார்ட்டாக்ளியா, இத்தாலியக் கணிதவியலாளர் (பி. 1499)
- 1944 - வசிலி கண்டின்ஸ்கி, ரஷ்ய ஓவியர் (பி. 1866)
- 1987 - நா. பார்த்தசாரதி, எழுத்தாளர் (பி. 1932)
- 2010 - திமிலை மகாலிங்கம், ஈழத்து எழுத்தாளர் (பி. 1938)
- 2010 - ரிச்சர்ட் ஆல்புரூக், அமெரிக்கத் தூதுவர்