ஆகஸ்டு 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
(ஆகத்து 21 இலிருந்து வழிமாற்றப்பட்டது)
| << | ஆகஸ்ட் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | ||||
| 4 | 5 | 6 | 7 | 8 | 9 | 10 |
| 11 | 12 | 13 | 14 | 15 | 16 | 17 |
| 18 | 19 | 20 | 21 | 22 | 23 | 24 |
| 25 | 26 | 27 | 28 | 29 | 30 | 31 |
| MMXIII | ||||||
ஆகஸ்டு 21 கிரிகோரியன் ஆண்டின் 233வது நாளாகும். நெட்டாண்டுகளில் 234வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 132 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1770 - கப்டன் ஜேம்ஸ் குக் கிழக்கு அவுஸ்திரேலியாவில் தரையிறங்கி அதனை பெரிய பிரித்தானியாவுக்குச் சொந்தமாக்கி அதற்கு நியூ சவுத் வேல்ஸ் எனப் பெயரிட்டான்.
- 1821 - ஜார்விஸ் தீவு கண்டுபிடிக்கப்பட்டது.
- 1831 - கறுப்பின அடிமைகளுக்குத் தலைமை தாங்கி நாட் டர்னர் கிளர்ச்சியைத் தொடங்கினார்.
- 1842 - டாஸ்மானியாவின் தலைநகர் ஹோபார்ட் நகரம் அமைக்கப்பட்டது.
- 1863 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: கூட்டமைப்புத் தீவிரவாதிகளின் தாக்குதலில் கன்சாஸ் மாநிலத்தில் லோரன்ஸ் நகரம் அழிக்கப்பட்டது.
- 1911 - லியனார்டோ டா வின்சியின் ஓவியமான மோனா லிசா பாரிசின் லூவர் அருங்காட்சியகத்தில் இருந்து திருடப்பட்டது.
- 1920 - சேர் ஏ. கனகசபை இலங்கையின் அரசியல் நிர்ணய சபைக்கு தமிழ்ப் பிரதிநிதியாகத் தெரிவானார்.
- 1942 - இரண்டாம் உலகப் போர்: ஸ்டாலின்கிராட் போர் ஆரம்பமானது.
- 1945 - இரண்டாம் உலகப் போர்: சாலமன் தீவுகள் தொடர் சமர் முடிவடைந்தது.
- 1959 - ஹவாய் ஐக்கிய அமெரிக்காவின் 50வது மாநிலமாக இணைக்கப்பட்டது.
- 1963 - தெற்கு வியட்நாமின் குடியரசு இராணுவத்தினர் நாட்டின் பௌத்த தலங்களை அழித்து நூற்றுக்கணக்கானோரைக் கொன்றனர்.
- 1968 - சோவியத் தலைமையிலான வார்சா ஒப்பந்த நாடுகளின் படையினர் செக்கோஸ்லவாக்கியாவைக் கைப்பற்றின.
- 1969 - ஆஸ்திரேலியனான மைக்கல் டெனிஸ் ரொஹான் என்பவன் ஜெருசலேமின் அல் அக்சா மசூதிக்குத் தீ வைத்தான்.
- 1983 - பிலிப்பீன்ஸ் எதிர்க்கட்சித் தலைவர் பெனீனோ அக்கீனோ மணிலாவில் கொலை செய்யப்பட்டார்.
- 1986 - கமரூனில் நியோஸ் ஆற்றில் காபனீரொட்சைட்டு வளிமம் கசிந்ததில் 1,800 பேர் வரையில் கொல்லப்பட்டனர்.
- 1991 - லாத்வியா சோவியத் ஒன்றியத்திடம் இருந்து விடுதலையை அறிவித்தது.
- 1991 - சோவியத் தலைவர் மிக்கைல் கொர்பச்சோவ் மீதான ஆட்சிக் கவிழ்ப்பு முயற்சி தோல்வியடைந்தது.
- 2007 - சூறாவளி டீன் மெக்சிகோவை 165 மைல்/மணி வேகத்தில் தாக்குதலை ஆரம்பித்தது.
பிறப்புக்கள் [தொகு]
- 1906 - ப. ஜீவானந்தம், பொதுவுடமைவாதி (இ. 1963)
- 1917 - லியோனிடு ஹுர்விக்ஸ், ரஷ்யப் பொருளியல் அறிஞர் (இ. 2008)
- 1936 - வில்ட் சேம்பர்லென், அமெரிக்கக் கூடைப்பந்து ஆட்டக்காரர் (இ. 1999)
- 1986 - உசேன் போல்ட், ஜமேக்காவைச் சேர்ந்த தட கள ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1901 - அடோல்ஃப் ஃபிக், தொடு வில்லையைக் கண்டு பிடித்தவர் (பி. 1829
- 1940 - லியோன் ட்ரொட்ஸ்கி, ரஷ்யப் புரட்சியாளர் (பி. 1879)
- 1995 - சுப்பிரமணியன் சந்திரசேகர், இந்திய வானியல்-இயற்பியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1910)
- 2006 - உஸ்தாத் பிஸ்மில்லாஹ் கான், இந்திய ஷெனாய் இசைக்கலைஞர், [பி. 1916)