1778
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 17ம் நூ - 18ம் நூ - 19ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1740கள் 1750கள் 1760கள் - 1770கள் - 1780கள் 1790கள் 1800கள் |
| ஆண்டுகள்: | 1775 1776 1777 - 1778 - 1779 1780 1781 |
| 1778 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1778 MDCCLXXVIII |
| திருவள்ளுவர் ஆண்டு | 1809 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2531 |
| சீன நாட்காட்டி | 4474-4475 |
| எபிரேய நாட்காட்டி | 5537-5538 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1833-1834 1700-1701 4879-4880 |
| இரானிய நாட்காட்டி | 1156-1157 |
| இசுலாமிய நாட்காட்டி | 1191 – 1192 |
| ரூனிக் நாட்காட்டி | 2028
|
1778 (MDCCLXXVIII) ஒரு வியாழக்கிழமையில் ஆரம்பமான ஒரு கிரிகோரியன் சாதாரண ஆண்டாகும். பழைய ஜூலியன் நாட்காட்டியில் திங்கட்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- ஜனவரி 18 - கப்டன் ஜேம்ஸ் குக் தனது மூன்றாவது பசிபிக் பயணத்தின் போது ஹவாயில் கைவை மற்றும் ஓவாஹி தீவுகளைக் கண்டான்.
- பெப்ரவரி 23 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பாரன் வொன் ஸ்டூபன் பென்சில்வேனியா வந்து அமெரிக்கப் படைகளுக்குப் பயிற்சி அளிக்க ஆரம்பித்தார்.
- மே 1 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் ஹாட்பரோ என்ற இடத்தில் பிரித்தானியப் படையினர் பென்சில்வேனியா துணை இராணுவத்தினர் மீது திடீர்த் தாக்குதலை நிகழ்த்தி 26 பேரைக் கொன்று 58 பேரைக் கைது செய்தனார்.
- ஜூன் 18 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவின் பிலடெல்ஃபியா நகரை விட்டு பிரித்தானியப் படைகள் அகன்றன.
- ஜூன் 24 - அமெரிக்காவில் டெக்சாஸ், வேர்ஜீனியாவில் முழு சூரிய கிரகணம் தெரிந்தது.
- ஜூலை 3 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பென்சில்வேனியாவில் வயோமிங் நகரில் பிரித்தானிய இராணுவத்தினர் பெண்கள், குழந்தைகள் உட்பட 360 பேரைக் கொலை செய்தனர்.
- ஜூலை 10 - அமெரிக்கப் புரட்சிப் போர்: பிரான்சின் பதினாறாம் லூயி பிரித்தானொயா மீது போர் தொடுத்தான்.
- அக்டோபர் 3 - கப்டன் ஜேம்ஸ் குக் அலாஸ்காவில் தரையிறங்கினான்.
- நவம்பர் 11 - மத்திய நியூ யோர்க்கில் செனெக்கா இந்தியர்கள் 40 பேரைக் கொன்றனர்.
- நவம்பர் 26 - கப்டன் ஜேம்ஸ் குக் ஹவாய் தீவுகளின் மைவி தீவை அடைந்தான்.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
- அமெரிக்காவின் கெண்டக்கியில் லூயிஸ்வில் என்ற இடத்தில் முதலாவது குடியேற்றம் ஆரம்பமானது.
பிறப்புக்கள் [தொகு]
இறப்புக்கள் [தொகு]
- ஜனவரி 10 - கரோலஸ் லின்னேயஸ், சுவீடன் நாட்டு தாவரவியலாளர், விலங்கியலாளர், மருத்துவர் (பி. 1707)