ஜூன் 26
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | சூன் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | ||||||
| 2 | 3 | 4 | 5 | 6 | 7 | 8 |
| 9 | 10 | 11 | 12 | 13 | 14 | 15 |
| 16 | 17 | 18 | 19 | 20 | 21 | 22 |
| 23 | 24 | 25 | 26 | 27 | 28 | 29 |
| 30 | ||||||
| MMXIII | ||||||
ஜூன் 26 கிரிகோரியன் ஆண்டின் 177ஆவது நாளாகும். நெட்டாண்டுகளில் 178ஆவது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 188 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 363 - ரோமப் பேரரசன் ஜூலியன் கொல்லப்பட்டான்.
- 1483 - மூன்றாம் ரிச்சார்ட் இங்கிலாந்தின் மன்னனாக முடி சூடினான்.
- 1541 - இன்கா பேரரசை முடிவுக்குக் கொண்டு வந்த பிரான்சிஸ்கோ பிசாரோ கொல்லப்பட்டான்.
- 1690 - தென்மேற்கு இங்கிலாந்தின் நகரான டெயின்மவுத் நகரை பிரான்ஸ் முற்றுகையிட்டது.
- 1718 - தனது தந்தை மன்னர் முதலாவது பியோத்தரை கொல்லச் சதி செய்ததாக மரணதண்டனை விதிக்கப்பட்ட ரஷ்யாவின் இளவரசன் அலெக்சி பெட்ரோவிச் மர்மமான முறையில் இறந்தான்.
- 1723 - அசர்பைஜான் தலைநகர் பாக்கூ ரஷ்யாவிடம் வீழ்ந்தது.
- 1924 - அமெரிக்க ஆக்கிரமிப்புப் படை டொமினிக்கன் குடியரசை விட்டு விலகியது.
- 1948 - முதலாவது இருதுருவ திரிதடையத்துக்கான காப்புரிமத்தை வில்லியம் ஷோக்லி பெற்ற்றார்.
- 1960 - சோமாலிலாந்து பிரித்தானியாவிடம் இருந்து விடுதலை அடைந்தது.
- 1975 - இந்திரா காந்தி இந்தியாவில் அவசரகாலச் சட்டத்தைப் பிறப்பித்தார்.
- 1976 - உலகின் மிக உயரமான கட்டிடமான கனடாவின் சி.என் கோபுரம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டது.
பிறப்புகள் [தொகு]
- 1824 - வில்லியம் தாம்சன், அயர்லாந்தைச் சேர்ந்த இயற்பியல் அறிஞர் (இ 1907)
- 1838 - பான்கீம் சட்டர்ஜி, வங்காள எழுத்தாளர் (இ. 1894)
- 1892 - பெர்ல் பக், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1973)
- 1924 - இளையபெருமாள், தமிழ்நாடு தலித் அரசியல் தலைவர் (இ. 2005)
- 1906 - ம. பொ. சிவஞானம், தமிழக அரசியல்வாதி, தமிழறிஞர் (இ. 1995)
இறப்புகள் [தொகு]
- 1995 - ஏர்னெஸ்ட் வோல்ட்டன், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1903)
சிறப்பு நாள் [தொகு]
- சித்திரவதைக்கு ஆளானோருக்கான சர்வதேச ஆதரவு நாள்
- மடகஸ்கார் - விடுதலை நாள்
- ருமேனியா: கொடி நாள்
- சோமாலிலாந்து - விடுதலை நாள்