1830
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| நூற்றாண்டுகள்: | 18ம் நூ - 19ம் நூ - 20ம் நூ |
| பத்தாண்டுகள்: | 1800கள் 1810கள் 1820கள் - 1830கள் - 1840கள் 1850கள் 1860கள் |
| ஆண்டுகள்: | 1827 1828 1829 - 1830 - 1831 1832 1833 |
| 1830 மற்றைய நாட்காட்டிகளில் | |
| கிரெகொரியின் நாட்காட்டி | 1830 MDCCCXXX |
| திருவள்ளுவர் ஆண்டு | 1861 |
| அப் ஊர்பி கொண்டிட்டா | 2583 |
| சீன நாட்காட்டி | 4526-4527 |
| எபிரேய நாட்காட்டி | 5589-5590 |
| இந்து நாட்காட்டிகள் - விக்ரம் ஆண்டு - சக ஆண்டு - கலி யுகம் |
1885-1886 1752-1753 4931-4932 |
| இரானிய நாட்காட்டி | 1208-1209 |
| இசுலாமிய நாட்காட்டி | 1245 – 1246 |
| ரூனிக் நாட்காட்டி | 2080
|
1830 (MDCCCXXX) ஒரு வெள்ளிக்கிழமையில் ஆரம்பமான ஒரு சாதாரண கிரிகோரியன் ஆண்டாகும். பழைய, 12 நாட்கள் பின்தங்கிய ஜூலியன் நாட்காட்டியில் இவ்வாண்டு ஒரு புதன்கிழமையில் ஆரம்பமானது.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- சனவரி 13 - லூசியானாவில் நியூ ஓர்லீன்ஸ் நகரில் பெரும் தீ பரவியது.
- பெப்ரவரி 3 – ஒட்டோமான் படைகளிடம் இருந்து கிரேக்கம் விடுதலை பெற்றது.
- மே 13 – பெரும் கொலம்பியாவில் இருந்து எக்குவடோர் பிரிந்தது.
- சூன் 12 - 34,000 பிரெஞ்சுப் படைகள் அல்ஜீரியாவை அடைந்ததில் இருந்து பிரெஞ்சுக் குடியேற்றம் அந்நாட்டில் ஆரம்பமாகியது.
- சூன் 26 – ஐக்கிய இராச்சியத்தின் மன்னனாக நான்காம் வில்லியம் முடி சூடினான்.
- சூலை 5 - அல்ஜீரியா மீது பிரான்ஸ் படையெடுத்தது.
- சூலை 17 – பார்த்தலேமி திமோனியே தையல் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை பிரான்சில் பெற்றார்.
- சூலை 20 – யூதர்களுக்கு கிரேக்கம் குடியுரிமையை வழங்கியது.
- சூலை 27 – பிரான்சில் சூலை புரட்சி ஆரம்பம்.
- சூலை 29 - பிரான்சின் பத்தாம் சார்ல்ஸ் முடி துறந்தான்.
- ஆகத்து 9 – பிரான்சின் அரசனாக பூயி பிலிப் முடி சூடினான்.
- ஆகத்து 25 - பெல்ஜியப் புரட்சி ஆரம்பமானது.
- ஆகத்து 31 – புல் வெட்டும் இயந்திரத்துக்கான காப்புரிமத்தை எட்வின் படிங் பெற்றார்.
- செப்டம்பர் 27 – பெல்ஜியப் புரட்சி முடிவுக்கு வந்தது.
- அக்டோபர் 4 - பெல்ஜியம் நெதர்லாந்து நாட்டில் இருந்து பிரிந்து தனிநாடாகியது.
- நவம்பர் 29 - போலந்தில் ரஷ்யாவின் ஆட்சிக்கெதிராக புரட்சி வெடித்தது.
தேதி அறியப்படாத நிகழ்வுகள் [தொகு]
பிறப்புக்கள் [தொகு]
- சிவசம்புப் புலவர், ஈழத்துப் புலவர்
இறப்புக்கள் [தொகு]
- டிசம்பர் 17 - சிமோன் பொலிவார், புரட்சியாளர் (பி. 1783)
- மே 16 - ஜோசப் ஃவூரியே பிரெஞ்சுக் கணிதவியலர் (பி. 1768)