செப்டம்பர் 25
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | செப்டம்பர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | 6 | 7 |
| 8 | 9 | 10 | 11 | 12 | 13 | 14 |
| 15 | 16 | 17 | 18 | 19 | 20 | 21 |
| 22 | 23 | 24 | 25 | 26 | 27 | 28 |
| 29 | 30 | |||||
| MMXIII | ||||||
செப்டம்பர் 25 கிரிகோரியன் ஆண்டின் 268வது நாளாகும். நெட்டாண்டுகளில் 269வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 97 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1513 – ஸ்பானிய நாடுகாண் பயணி பாஸ்கோ நூனியெத் தே பால்போவா பசிபிக் பெருங்கடலை முதன் முதலில் கண்ட ஐரோப்பியர்.
- 1690 – ஐக்கிய அமெரிக்காவின் முதலாவது செய்திப்பத்திரிகை (Publick Occurrences Both Foreign and Domestick) முதலும் கடைசித் தடவையாகவும் வெளிவந்தது. இது அரசினால் தடை செய்யப்பட்டது.
- 1789 – அமெரிக்கக் காங்கிரஸ் அரசியலமைப்பிற்கு மனித உரிமைகளுக்கான 10 திருத்தங்கள் உட்பட 12 திருத்தங்களைக் கொண்டு வந்தது.
- 1846 - ஐக்கிய அமெரிக்கப் படைகள் சாச்செரி டெய்லர் தலைமையில் மெக்சிக்கோவின் மொண்டெரே நகரைக் கைப்பற்றினர்.
- 1906 – கரையிலிருந்து படகை வழி நடத்தும் முறை ஸ்பெயினில் இயக்கிக் காட்டப்பட்டது. இதுவே தொலை இயக்கியின் பிறப்பு எனக் கருதப்படுகிறது.
- 1956 – அத்திலாந்திக் பெருங்கடலைக் கடந்த முதலாவது தொலைபேசிக் கம்பித்திட்டம் TAT-1 நிறுவப்பட்டது.
- 1957 - ஐக்கிய அமெரிக்காவில் ஆர்கன்சஸ் மாநிலத்தில் உள்ள பாடசாலை ஒன்றில் 9 கருப்பின மாணவர்கள் 300 இராணுவத்தினர்களின் பாதுகாப்புடன் பாடசாலை சென்றனர்.
- 1959 - இலங்கைப் பிரதமர் எஸ். டபிள்யூ. ஆர். டி. பண்டாரநாயக்கா சோமராம தேரர் என்ற புத்த பிக்கு ஒருவரினால் சுடப்பட்டுப் படுகாயமடைந்து அடுத்த நாள் இறந்தார்.
- 1962 - அல்ஜீரிய மக்கள் சனநாயகக் குடியரசு அமைக்கப்பட்டது.
- 1978 - கலிபோர்னியாவில் சான் டியாகோ நகரில் இரண்டு விமானங்கள் மோதிக்கொண்டதில் 144 பயணிகள் கொல்லப்பட்டனர்.
- 1983 - வட அயர்லாந்தில் 38 ஐரியக் குடியரசு இராணுவக் கைதிகள் சிறையை உடைத்து தப்பினர்.
- 1992 - யாழ்ப்பாணம், பூநகரியில் 62 இராணுவக் காவலரண்கள் விடுதலைப் புலிகளினால் தாக்கி அழிக்கப்பட்டன.
- 2002 - குஜராத் மாநிலத்தில் இந்துக் கோயில் ஒன்றில் இடம்பெற்ற வன்முறையில் 32 பேர் கொல்லப்பட்டதை அடுத்து அங்கு ஆயிரக்கணக்கான இராணுவத்தினர் குவிக்கப்பட்டனர்.
பிறப்புக்கள் [தொகு]
- 1897 – வில்லியம் ஃபாக்னர், அமெரிக்க எழுத்தாளர், நோபல் பரிசு பெற்றவர் (இ. 1962)
- 1899 - உடுமலை நாராயணகவி, தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியர், நாடக எழுத்தாளர் (இ. 1981)
- 1968 - வில் ஸ்மித், அமெரிக்க ராப் இசைப் பாடகர்
- 1976 - சான்சி பிலப்ஸ், அமெரிக்காவின் கூடைப்பந்து ஆட்டக்காரர்
இறப்புகள் [தொகு]
- 1978 - ருக்மணி தேவி, சிங்களத் திரைப்பட நடிகை (பி. 1923
- 1986 - நிக்கலாய் செமியோனொவ், ரஷ்ய வேதியியலாளர், நோபல் பரிசு பெற்றவர் (பி. 1896)
- 2003 - எட்வர்ட் செயிட், ஆங்கில ஒப்பாய்வுத்துறை அறிஞர் (பி. 1935)
சிறப்பு நாள் [தொகு]
- மொசாம்பிக் - பாதுகாப்புப் படையினர் நாள்