அக்டோபர் 21
கட்டற்ற கலைக்களஞ்சியமான விக்கிப்பீடியாவில் இருந்து.
| << | அக்டோபர் 2013 | >> | ||||
| ஞா | தி | செ | பு | வி | வெ | ச |
| 1 | 2 | 3 | 4 | 5 | ||
| 6 | 7 | 8 | 9 | 10 | 11 | 12 |
| 13 | 14 | 15 | 16 | 17 | 18 | 19 |
| 20 | 21 | 22 | 23 | 24 | 25 | 26 |
| 27 | 28 | 29 | 30 | 31 | ||
| MMXIII | ||||||
அக்டோபர் 21 கிரிகோரியன் ஆண்டின் 294வது நாளாகும். நெட்டாண்டுகளில் 295வது நாள். ஆண்டு முடிவிற்கு மேலும் 71 நாட்கள் உள்ளன.
பொருளடக்கம் |
நிகழ்வுகள் [தொகு]
- 1520 - பேர்டினண்ட் மகெலன் சிலியில் புதிய நீரிணை ஒன்றைக் கண்டுபிடித்தார். இது பின்னர் மகலன் நீரிணை எனப் பெயர்பெற்றது.
- 1805 - டிரபல்கார் என்ற இடத்தில் பிரித்தானியப் படைகள், பிரெஞ்சு, மற்றும் ஸ்பானியக் கூட்டுப் படைகளின் கடற்படையை வென்றன. இவ்வெற்றி பிரித்தானியக் கடற்படையை 20ம் நூற்றாண்டு வரை இப்பிராந்தியத்தின் பெரும் கடற்படை வல்லரசாக ஆக்கியது.
- 1805 - ஊல்ம் என்ற இடத்தில் ஆஸ்திரியா நெப்போலியனின் பெரும் இராணுவத்திடம் சரணடைந்தது. நெப்போலியன் 30,000 பேரைச் சிறைப்பிடித்தான்.
- 1824 - ஜோசப் ஆஸ்ப்டின் போர்ட்லண்ட் சிமெந்துக்கான காப்புரிமம் பெற்றார்.
- 1837 - அமெரிக்கப் பழங்குடித் தலைவன் ஒசியோலா கைது செய்யப்பட்டான்.
- 1854 - புளோரன்ஸ் நைட்டிங்கேல் மற்றும் 38 தாதிகள் கிரிமியன் போர் முனைக்கு அனுப்பப்பட்டனர்.
- 1861 - அமெரிக்க உள்நாட்டுப் போர்: அமெரிக்கப் படைகள் கூட்டமைப்பினரிடம் வேர்ஜீனியாவில் தோற்றனர். ஆபிரகாம் லிங்கனின் நெருங்கிய நண்பர் "எட்வேர்ட் பேக்கர்" கொல்லப்பட்டார்.
- 1876 - யாழ்ப்பாணத்தில் காலரா நோய் வேகமாகப் பரவியது.
- 1879 - தொமஸ் எடிசன் தனது முதலாவது தொழில் ரீதியான மின்குமிழைப் பரிசோதித்தார். இது 13 மணி நேரம் எரிந்தது.
- 1892 - உலக கொலம்பியக் கண்காட்சி சிக்காகோவில் அதிகாரபூர்வமாகத் திறக்கப்பட்டது. ஆனாலும், கட்டிட வேலைகள் பூர்த்தியடையாத காரணத்தால் இக்கண்காட்சி 1893, மே 1 ஆம் நாளிலேயே பொதுமக்களின் பார்வைக்குத் திறக்கப்பட்டது.
- 1895 - ஜப்பானியப் படைகளின் முற்றுகையினால் போர்மோசா குடியரசு வீழ்ந்தது.
- 1944 - கிறகுஜேவாச் படுகொலைகள்: நாசி ஜெர்மனியப் படைகள் 7000 சேர்பியரை படுகொலைச் செய்தனர்.
- 1944 - இரண்டாம் உலகப் போர்: முதலாவது கமிகசே ஜப்பானிய விமானத் தற்கொலைத் தாக்குதல், அவுஸ்திரேலிய கப்பல் மீது நடத்தப்பட்டது.
- 1945 - பிரான்சில் முதற்தடவையாக பெண்களுக்கு வாக்குரிமை வழங்கப்பட்டது.
- 1966 - வேல்சில் அபெர்ஃபான் என்னும் கிராமத்தில் நிலக்கரி கழிவுகள் அடங்கிய பாறை வீழ்ந்ததில் 116 பாடசாலைச் சிறுவர்கள் உட்பட 144 பேர் கொல்லப்பட்டனர்.
- 1969 - சோமாலியாவில் இடம்பெற்ற இராணுவப் புரட்சியில் சியாட் பார் பதவியைக் கைப்பற்றினார்.
- 1983 - நிறைகளுக்கும் அளவைகளுக்குமான 17வது அனைத்துலகக் கருத்தரங்கில், முழுமையான வெற்றிடத்தில், துல்லியமாக 1/299,792,458 வினாடி நேரத்தில் ஒளி செல்லும் பாதையின் நீளமாக ஒரு மீட்டர் வரையறுக்கப்பட்டது.
- 1987 - ஈழப்போர்: யாழ்ப்பாணம் மருத்துவமனையில் இந்திய இராணுவத்தினர் சுட்டதில் மருத்துவர்கள், ஊழியர்கள், நோயாளிகள் உட்பட 21 பேர் கோல்லப்பட்டனர்.
- 1994 - சியோல் நகரில் பாலம் ஒன்று உடைந்து வீழ்ந்ததில் 32 பேர் கொல்லப்பட்டனர்.
- 2003 - குறுங்கோள் ஏரிசின் படங்கள் எடுக்கப்பட்டன.
பிறப்புக்கள் [தொகு]
- 1833 - அல்பிரட் நோபல், சுவீடன் நாட்டு கண்டுபிடிப்பாளர், நோபல் பரிசை ஆரம்பித்தவர் (இ 1896)
- 1925 - சுர்ஜித் சிங் பர்னாலா, இந்திய அரசியல்வாதி
- 1937 - தேங்காய் சீனிவாசன், தமிழ் நாடக, திரைப்பட நடிகர், (இ 1988)
இறப்புகள் [தொகு]
- 1835 - முத்துசுவாமி தீட்சிதர், கருநாடக இசை மும்மூர்த்திகளில் ஒருவர் (பி. 1776)